இலங்கையை உலகளாவிய திரைப்பட மையமாக மாற்ற Cinnamon Hotels & Resorts உடன் கைகோர்க்கும் SLTPB மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தபானம்

Share

Share

Share

Share

கொழும்பு, மே 22, 2025 – Cinnamon Hotels & Resorts நிறுவனம் தனது ‘Signature Weekend’ சிறப்பு வார இறுதி நிகழ்வுக்காக இலங்கை சுற்றுலாத்துறை மேம்படுத்தல் பணியகம் மற்றும் இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தபானம் ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளது. இந்த நிகழ்வு இலங்கையை உலகளாவிய திரைப்பட மையமாக உருவாக்கும் நோக்கத்துடன் கதை சொல்லல் மற்றும் சினிமா கலையை கொண்டாடும் ஒரு சிறப்பு விழாவாக அமையவுள்ளது.

இந்தக் கூட்டாண்மை சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்aகளுக்கான ஒரு சக்திவாய்ந்த மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க படியாக அமைகிறது. அதேபோல, இலங்கையை உலக திரைப்படத் துறையின் இதயத் துடிப்பாக மாற்றும் முக்கிய திருப்புமுனையாகவும் அமையவுள்ளது. நீண்டகாலமாக இலங்கையின் சினிமாத்துறையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்ற தேசியத் திரைப்படக் கூட்டுத்தபானம், இந்த நிகழ்விற்கு அதன் நம்பகத்தன்மையையும், மூலோபாய வழிகாட்டுதல்களையும் வழங்கவுள்ளது. இது நமது நாட்டின் திரைப்பட உட்கட்டமைப்பு வசதிகளையும், படைப்பாற்றல் கொள்கைகளையும் வளர்ப்பதற்கான பொன்னான வாய்ப்பாக அமையும்.

அதே நேரத்தில், இலங்கை சுற்றுலாத்துறை மேம்படுத்தல் பணியகத்தின் பங்களிப்பு, திரைப்படத்துறை மற்றும் சுற்றுலா சந்தைப்படுத்தலுக்கான வலுவான ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது. சினிமா மூலம் உலக மக்களின் பயண ஆர்வத்தை தூண்டி, இலங்கையின் கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தை வலியுறுத்துகிறது.

இந்த இரண்டு முக்கிய நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு நிகழ்வை மட்டுமல்லாமல், நாட்டின் கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான சக்திவாய்ந்த ஊடகமாக சினிமாவை உருவாக்கும் விரிவான நோக்கத்திற்கான தேசிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.

மே 30 முதல் ஜூன் முதலாம் திகதி வரை நடைபெறும் Signature Weekend நிகழ்வில், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா மற்றும் Hamilton–Mehta Productions நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் அவரது நீண்டகால தயாரிப்பு நண்பருமான டேவிட் ஹெமில்டன் ஆகியோரின் பணிகள் கௌரவிக்கப்படவுள்ளன. இவர்கள் இலங்கையில் எடுத்த Midnight’s Children, Water மற்றும் Funny Boy போன்ற படங்கள் உலக கதைகளை இலங்கையின் இயற்கை அழகுடன் இணைத்த சிறந்த படைப்புகளாகும்.

இலங்கையை திரைப்பட தயாரிப்புக்கு ஏற்ற நாடாக மாற்றும் Cinnamon Life நிறுவனத்தின் நோக்கத்துடன் ஒத்துப்போகும் உலகின் முன்னணி வர்த்தகநாமங்களான HSBC Sri Lanka மற்றும் Mastercard Sri Lanka ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த திட்டம் மேலும் வலுப்பெறுகிறது. அதேபோல, விஜய நியூஸ்பேப்பர்ஸ் (அச்சு ஊடகம்) மற்றும் MBC/MTV கெபிடல் மஹராஜா குழுமம் (இலத்திரனியல் ஊடகம்) ஆகியவற்றுடனான ஊடக கூட்டாண்மைகள் இந்த நிகழ்வை நாடு முழுவதும் பரப்பி மக்களின் ஈடுபாட்டை அதிகரிக்க உதவவுள்ளன.

Signature Weekend நிகழ்வு பென்தொட்டயில் உள்ள Cinnamon Bentota Beach – Signature Selection மற்றும் கொழும்பில் உள்ள Cinnamon Life at City of Dreams ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் திரைப்படக் காட்சிகள், குழு விவாதங்கள் மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் இடம்பெறும்.

Signature Weekend வெறும் நிகழ்வு மட்டுமல்ல, Cinnamon Hotels & Resorts இன் கலாச்சார அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். அதன் Signature Selection விடுதிகள் மூலம் இலங்கையில் அர்த்தமுள்ள அனுபவங்களை தேடும் கதைசொல்பவர்கள், கலைஞர்கள் மற்றும் பயணிகளுக்கு படைப்பாற்றல் மிக்க தங்குமிடங்களாக திகழ்கின்றன.

கவர்ச்சியான பல சலுகைகளுடன் “சம்பத்காட்ஸ் Town...
Samsung නවෝත්පාදන සමඟින් ජීවිතය ස්මාර්ට්...
Introducing Samsung Exclusive Easy Pay:...
ඇමරිකා එක්සත් ජනපදය 30%ක තීරු...
Trinasolar, ශ්‍රී ලංකාව පුරා මෙගාවොට්...
Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா...
‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில்...
அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின்...
Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா...
‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில்...
அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின்...
ආකර්ෂණීය වාසි රැසක් සමඟින්, සම්පත්කාඩ්ස්...