7% உயர் வளர்ச்சியுடன் 2025 நிதியாண்டில் நிலையான முடிவுகளை வழங்கும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Share

Share

Share

Share

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், 2025 மார்ச் 31ல் முடிவடைந்த நிதியாண்டில் பொருளாதாரச் சவால்கள் மற்றும் மாறிவரும் நுகர்வோர் தேவைகள் மத்தியிலும் வலுவான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குழுமத்தின் சுகாதாரத் துறை (Healthcare sector) முக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ததுடன் 2025 நிதியாண்டில் குழுமத்தின் மொத்த வருவாயில் முதன்மைப் பங்களிப்பாளராகத் திகழ்ந்தது.

குழுமம் 2025 நிதியாண்டில் 59.3 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.0% வளர்ச்சியாகும். முக்கியமாக குழுமத்தின் சுகாதாரத் துறை (Healthcare sector) – மொத்த வருவாயில் 55.0%ஐ அடைந்திருந்ததுடன் நுகர்வோர் பொருட்கள் துறை (Consumer sector) – 31.6%ஐயும் விவசாயத் துறை (Agri sector) – 13.4% பதிவு செய்திருந்தது. இது சீரான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த வணிக மாதிரியை (balanced & diversified business model) வெளிப்படுத்துகிறதுடன் அனைத்து முக்கியத் துறைகளிலும் நிலையான வளர்ச்சியை இது சுட்டி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சன்ஷைன் குழுமத்தின் செயற்பாட்டு இலாபம் (EBIT) 7.1% அதிகரித்து 9.3 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. இதற்கு சுகாதாரத் துறையில் வலுவான வளர்ச்சி மற்றும் விவசாயத் துறையின் செயற்பாட்டு திறன் மேம்பாடு ஆகியனவே முக்கிய காரணிகளாகும். நுகர்வோர் துறையில் இலாபம் குறைந்தாலும் துறை வாரியான செயல்திறன் காரணமாக 15.7% EBIT விளிம்பு பராமரிக்கப்பட்டுள்ளது.

காலாண்டிற்கான வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) சற்று சுருங்கி 5.9 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது. விவசாய வணிகத்திற்கான வரி விதிப்பு மாற்றங்களால் வரிச் செலவு 48.9% அதிகரித்தமை மற்றும் நுகர்வோர் துறையில் தொடர்ச்சியான இலாப அழுத்தங்கள் ஆகியனவே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் 2025 நிதியாண்டு நிதிநிலை முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “2025 நிதியாண்டில் சன்ஷைன் ஹோல்டிங்ஸிற்கு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. எங்கள் முக்கியத் துறைகளில் வலுவான நிலைப்பாடு, ஒழுங்கான செயலாக்கம் மற்றும் புதிய வளர்ச்சி உந்துதல் ஆகியவற்றால் இது குறிக்கப்பட்டது. எங்கள் சுகாதாரத் துறை இரண்டிலக்க வளர்ச்சியையும் மேம்படுத்தப்பட்ட இலாபத்தையும் அடைந்து முன்னணி பங்கைத் தொடர்ந்தது. நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகள் மாறக்கூடிய சூழலைத் திறமையாக நிர்வகித்தன. இலாப அழுத்தங்கள் மற்றும் தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் இருந்தபோதிலும், குழுமம் நிலையான வருமானத்தைப் பராமரித்து நீண்டகால வளர்ச்சிக்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது.” என தெரிவித்தார்.

“முன்னேற்றத்திற்கான எங்கள் மூலோபாயம் மூன்று முக்கிய விடயங்களைக் கொண்டது, அவையாவன செயல்திறன் மிக்க வணிகங்களை வளர்த்தெடுப்பது, உற்பத்தி திறன் மற்றும் புத்தாக்கங்களில் முதலீடு செய்வது, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் எங்கள் நிலையை பலப்படுத்துவது என்பன அடங்கும்.” என சதாசிவம் மேலும் தெரிவித்தார்.

ஹெல்த்கெயார்
சுகாதாரத் துறை 2025 நிதியாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 17.3% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்து, மருந்து நிறுவனம், மருத்துவ சாதனங்கள், விநியோகம், சில்லறை விற்பனை மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் 32.6 பில்லியன் ரூபாவை ஈட்டியது. இந்த உயர்மட்ட உந்துதல் மேம்பட்ட இலாபத்திற்கு வழிவகுத்தது, இந்தத் துறையின் EBIT வரம்பு 2025 நிதியாண்டில் 16.9% ஆக விரிவடைந்தது, 2024ஆம் ஆண்டு நிதியாண்டில் 15.5% ஆக இருந்தது.

மருந்து நிறுவன வணிக வருவாயில் 14.3% ஆண்டுக்கு ஆண்டு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது முக்கிய மருத்துவ சிகிச்சைப் பகுதிகளில் தொடர்ச்சியான தொகுதி விரிவாக்கத்தால் தூண்டப்பட்டது. ஹெல்த்கார்ட் டிஸ்ட்ரிபியூஷன், சிப்லா மற்றும் மைக்ரோ இரசாயனக் கூடங்களுடன் புதிய விநியோகஸ்தர் உறவுகளைப் பெறுவதன் மூலம் அதன் கோப்புரையை விரிவுபடுத்தியது, இது 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் 23.9% ஆண்டுக்கு ஆண்டு வருவாய் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. சில்லறை விற்பனைப் பிரிவான ஹெல்த்கார்ட் பார்மசி, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு 9.2% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

குழுமத்தின் மருந்து உற்பத்தி வணிகமான Lina Manufacturing, 69.2% ஆண்டுக்கு ஆண்டு என்ற குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது Metered Dose Inhaler (MDI) Plantஇல் அதிகரித்த உற்பத்தி அளவுகளால் ஏற்பட்டது. இது 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் MDI தேவையை முழுமையாக பூர்த்தி செய்தது.

நுகர்வோர் வர்த்தக நாமங்கள்
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிகங்களை உள்ளடக்கிய நுகர்வோர் வர்த்தக நாமங்கள் துறை, 18.7 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது 3.0% ஆண்டுக்கு ஆண்டு சிறிய வீழ்ச்சியைக் காட்டுகிறது. Branded Tea மற்றும் Confectionery (உள்நாட்டு வணிகம்) வணிகங்களின் வருவாய் 12.7% ஆண்டுக்கு ஆண்டு குறைந்துள்ளது,
Branded Teaஇல் முதல் பாதியில் VAT தொடர்பான விலை நிர்ணய அழுத்தங்கள் காரணமாக மதிப்பில் 8.8% ஆண்டுக்கு ஆண்டு மதிப்பு சுருக்கம் இருந்தபோதிலும், 1.6% ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், Confectionery பிரிவின் வருவாய் 2025 நிதியாண்டில் 28.0% ஆண்டுக்கு ஆண்டு குறைந்துள்ளது, அதே நேரத்தில் குழுமத்தின் ஏற்றுமதி வணிகம் 2025 நிதியாண்டில் அதன் நேர்மறையான உந்துதலைத் தக்க வைத்துக் கொண்டது, அங்கு முக்கிய வாடிக்கையாளர்களிடமிருந்து வலுவான தேவை தொகுதி வளர்ச்சியை ஆதரித்தது, இதன் விளைவாக ஏற்றுமதி வருவாயில் 19.1% ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு ஏற்பட்டது.

வேளாண்மை வணிகம்
வட்டவளை பிளாண்டேஷன்ஸ் பி.எல்.சி. (CSE: WATA) பிரதிநிதித்துவப்படுத்தும் குழுமத்தின் வேளாண் வணிகத் துறை, 2025 நிதியாண்டில் 7.9 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 4.5% சுருக்கத்தை பிரதிபலிக்கிறது. இது முதன்மையாக பால் வணிகப் பிரிவின் பாதகமான செயல்திறனால் உந்தப்பட்டது. Palm Oil துறையும் குறுகிய காலத்தில் குறைந்த உற்பத்தி அளவுகளால் (lower volumes) வருவாயில் சிறிதளவு சரிவைப் பதிவு செய்துள்ளது.

உயர்மட்டச் சுருக்கம் இருந்தபோதிலும், துறையின் இலாபம் மேம்பட்டது, EBIT வரம்பு முந்தைய ஆண்டில் 32.0% ஆக இருந்த நிலையில், 2025 நியாண்டில் 36.2% ஆக அதிகரித்தது. இந்த உயர்வு Palm Oil பிரிவில் செலவுத் திறன் காரணமாக ஏற்பட்டது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் தொடர்பாக
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான சுகாதாரம், நுகர்வுப் பொருட்கள் மற்றும் விவசாய வணிகத்தில் பெறுமதியை உருவாக்குவதன் மூலம் ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு’ பங்களிக்கும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகும்.

1967 இல் ஸ்தாபிக்கப்பட்ட குழுவானது, தற்போது இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களான Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee Confectionary மற்றும் Healthguard Pharmacy போன்றவற்றின் தாயகமாக உள்ளது, 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் 24/25 நிதியாண்டில் 59.3 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. வணிக அலகுகளில் சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா, Sunshine Consumer Lanka மற்றும் வட்டவளை பிளாண்டேஷன்ஸ் பி.எல்.சி ஆகியவை அடங்கும், அவை அந்தந்த துறைகளில் முன்னணியில் உள்ளன, மேலும் அவற்றிற்கு 2024 இல் “வேலை செய்ய சிறந்த இடம்” என்று சான்றளிக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியான பல சலுகைகளுடன் “சம்பத்காட்ஸ் Town...
Samsung නවෝත්පාදන සමඟින් ජීවිතය ස්මාර්ට්...
Introducing Samsung Exclusive Easy Pay:...
ඇමරිකා එක්සත් ජනපදය 30%ක තීරු...
Trinasolar, ශ්‍රී ලංකාව පුරා මෙගාවොට්...
Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா...
‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில்...
அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின்...
Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா...
‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில்...
அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின்...
ආකර්ෂණීය වාසි රැසක් සමඟින්, සම්පත්කාඩ්ස්...