எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதி முதல் TVS Motor நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்கிறார் சுதர்ஷன் வெண்ணு மகாதேவா

Share

Share

Share

Share

TVS Motor நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, அண்மையில் ஒருமனதாக முடிவெடுத்து, 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் சுதர்ஷன் வெண்ணுவை நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராக நியமித்துள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 25 முதல் அவர் TVS Motorஇல் தொடர்புடைய பதவிகளில் பணியாற்றவுள்ளார்.

தற்போது நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வரும் திரு. Ralf Speth அவர்கள், எதிர்வரும் ஆண்டு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு மீண்டும் தலைவராகப் பதவி ஏற்க விருப்பவில்லை என பணிப்பபாளர் சபைக்கு தெரிவித்துள்ளார். இதன்படி, 2025 ஆகஸ்ட் 22 அன்று நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக்கூட்டத்திற்குப் பின்னர், அவர் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

எனினும், 2025 ஆகஸ்ட் 23 ஆம் திகதியிலிருந்து மூன்று ஆண்டுகாலத்திற்கு திரு. Ralf Speth அவர்களை ஆலோசகராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரது அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் மூலம் தொடர்ச்சியான நன்மைகளைப் பெறுவதே இந்த முடிவின் நோக்கமாகும்.

TVS Motorஇன் முன்னாள் தலைவர் திரு. வெணு ஸ்ரீனிவாசன் இந்த மாற்றத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக TVS Motorஇன் தலைவராக திரு. Ralf Speth அவர்கள் வழங்கிய தலைமைத்துவத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர் நம் நிறுவனத்தின் உலகளாவிய வணிக விரிவாக்கத்திற்கு வழிகாட்டியதோடு, தொழில்துறை முன்னேற்றத்திற்கான புத்தாக்கங்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளார். அவர் இனி TVS Motorஇன் முதன்மை ஆலோசகராகத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்கும் நன்றி தெரிவிக்கிறேன். இதேவேளை, புதிய முகாமைத்துவப் பணிப்பாளராக பதவியேற்கும் திரு. சுதர்சன் வெணுவை வரவேற்கிறோம். அவர் நிறுவனத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.

திரு. Ralf Speth அவர்கள் இதற்கு பதிலளிக்கையில், “TVS Motorஇன் தலைவராக கடந்த மூன்று ஆண்டுகள் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்கும் சுதர்சன் வெணு அவர்கள், நிறுவனத்தின் மதிப்புகளைப் பாதுகாத்து, அதன் வளர்ச்சிப் பயணத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வார் என நான் நம்புகிறேன். சுதர்சனின் திறமை, அறிவு மற்றும் அனுபவம் நிறுவனத்தை வெற்றிப்பாதையில் கொண்டுசெல்லும். இந்த நேரத்தில், சுதர்சன் மற்றும் TVS Motor நிறுவனத்திற்கு என் ஆழ்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

சுதர்சன் வெணு அவர்கள் தனது கருத்தைத் தெரிவிக்கையில், “TVS Motorஇன் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராக என்னை நியமித்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த மதிப்புமிக்க வாய்ப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தலைவராக நிறுவனத்தின் வெற்றிக்காக பணியாற்றும் போது அனைவரின் ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். முன்னாள் தலைவர் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்த முன்னேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வேன் என்று உறுதியாக நம்புகிறேன்” என கூறினார்.

The future of electric driving...
இலகு நிதி முகாமைத்துவத்துக்காக ஒரு புதிய...
குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக புலமைப் பரிசில்களை...
HNB සහ Ideal Motors වෙතින්...
SLISA සමාරම්භක පාසල් නායක සමුළුව...
இலங்கை முழுவதும் 25 மெகாவாட் பயன்பாட்டிற்கு...
SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
இலங்கை முழுவதும் 25 மெகாவாட் பயன்பாட்டிற்கு...
SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...