சிவனொளிபாத ஸ்தானத்தை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுக்கும் MAS – பொடிலைன்

Share

Share

Share

Share

MAS குழுமத்தின் Bodyline நிறுவனத்தால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “சிவனொளிபாத ஸ்தானத்தை சுத்தம் செய்யும் திட்டம்” கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடைபெற்றது. இலங்கைக்கு சொந்தமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிகவும் உணர்திறன் வாய்ந்த மண்டலமான இந்த சிவனொளிபாத ஸ்தானத்தை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் எதிர்கால சந்ததியினருக்காக வழங்குவதே இதன் நோக்கமாகும்.

சிவனொளிபாத யாத்திரைக் காலம் முடிவடையும் நாளிலேயே, உயர்ந்த மேடையில் இருந்து நல்லத்தன்னி வரையிலான பாதையிலும், அதைச் சுற்றியுள்ள சூழலிலும் இருந்த பிளாஸ்டிக், பொலிதீன் உள்ளிட்ட மக்காத கழிவுகளை சேகரித்து அவற்றை முறையாக அகற்றுவது இங்கு இடம்பெற்றது. இந்தச் சவாலான நடவடிக்கைக்கு இம்முறையும் MAS குழுமத்தின் ஏறக்குறைய 1000 பேர் கொண்ட குழு கலந்துகொண்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இதன்போது, பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உள்ளிட்ட மக்காத கழிவுகளில் சுமார் 5000 கிலோகிராம் இவ்வாறு சேகரித்து முறையாக அகற்ற முடிந்தது.

இம்முறையும் இந்த நற்பணியை நிறைவேற்றுவதில், பிக்குகள் தலைமையில், இராணுவம், சிறப்புப் பணிப் படை, பொலிஸார், சுகாதாரத் துறையினர், பிரதேச அதிகாரிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உயர்ந்த பங்களிப்பும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...