Prime Residencies இன் கொழும்பு 05 ‘MON VIE’ தொடர்மாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் முன்னெடுப்பு

Share

Share

Share

Share

Prime Group இன் வதிவிடத் தொகுதி நிர்மாணிப்பாளரும், இலங்கையின் நவீன ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளர்களில் முன்னோடியாகவும் திகழும் Prime Lands Residencies PLC, கொழும்பு 05, தலக்கொட்டுவ கார்டன்ஸ் பகுதியில் அமையவுள்ள ‘MON VIE’ என்ற அதி-சொகுசு வதிவிடக் குடியிருப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. இலங்கையின் குடியிருப்பு உட்கட்டமைப்பு வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், நாட்டின் முதலாவது தொங்கு விளிம்புப் பார்வைத் தளம் (cantilevered viewing deck) மற்றும் முதலாவது மிதக்கும் கூரை உணவகம் (floating rooftop restaurant) உள்ளிட்ட தனித்துவமான நவீன அம்சங்களை இத்திட்டம் கொண்டுள்ளது. கொழும்பு நகரில் புதிய உயர்தர வாழ்வியல் அனுபவத்தை உருவாக்கும் நிறுவனத்தின் விரிவான தொலைநோக்குப் பார்வையை, இத்திட்டத்தின் பிரம்மாண்ட அம்சங்கள் தெளிவாக பிரதிபலிக்கின்றன.

“The art of family living, perfected” என்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ‘MON VIE’, சமகால நகர்ப்புற வாழ்க்கையின் நேர்த்தியையும், ஒரு உண்மையான இல்லத்தின் அரவணைப்பையும் தேடும் விவேகமான நவீன குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்துடன் சேர்த்து 25 மாடிகளையும், ஒரு தனித்துவமான கூரைத்தளத்தையும் கொண்டமைந்துள்ள ‘MON VIE’, 2 மற்றும் 3 படுக்கையறைகளைக் கொண்ட சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பிரத்தியேகத் தொகுப்பை வழங்கவுள்ளது. இதன் ஆரம்ப விலை 86 மில்லியன் இலங்கை ரூபாயாகும். ‘MON VIE’ திட்டத்தின் மகுடமாக அமையவிருப்பது அதன் மிதக்கும் கூரை உணவகமாகும் (floating rooftop restaurant). இலங்கையில் இத்தகைய பாணியில் உருவாகும் முதலாவது உணவகமான இது, குடியிருப்பாளர்களுக்கான ஒரு பொதுவான வசதியாக மட்டுமன்றி, கொழும்பு நகரின் அழகிய பரந்த காட்சிகளை (panoramic views) பின்னணியாகக் கொண்ட ஒரு பிரசித்தி பெற்ற உன்னத உணவுத் தளமாகவும் (gourmet destination) திகழவுள்ளது; இது கொழும்பு நகரின் மிகச்சிறந்ததோர் முகவரிக்கு பொருத்தமான கம்பீரத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

கொழும்பு 05 இல் அமைந்துள்ள மிக உயர்ந்த மதிப்புடைய பிரதான முகவரிகளில் ஒன்றாக இருப்பதால், குடியிருப்பாளர்கள் நகரின் முன்னணி பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய வணிக மையங்களுக்கு மிக அருகாமையில் வாழும் அனுகூலத்தைப் பெறுவர். இது உங்களுக்குத் தேவையான, முக்கியமான அனைத்தையும் மிக எளிதாக, உடனடியாகச் சென்றடையும் தூரத்தில் கொண்டு சேர்க்கிறது.

இத்திட்டத்திற்குள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொழுதுபோக்கு வசதிகளுக்காக 40,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பு – அதாவது 01 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இணையான இடம் – ஒதுக்கப்பட்டுள்ளது. இடவசதித் திட்டமிடல் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தெரிவு முதல், பொதுவான வசதிகள் மற்றும் சுற்றியுள்ள பசுமை சூழல் வரை இத்திட்டத்தின் ஒவ்வொரு விபரமும், சௌகரியம், அழகியல் மற்றும் இணைப்புத் திறன் ஆகியவற்றிற்கு சமமான முக்கியத்துவம் அளிக்கும் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மிக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான அத்திவாரத் தூண் (piling) கட்டுமானப் பணிகள் San Piling (Pvt) Limited இனால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2030 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நிறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கொழும்பு நகரின் மாற்றமடைந்துவரும் குடியிருப்புக் கட்டமைப்பு வரலாற்றில் இதுவொரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது. அத்துடன், இத்திட்டத்திற்காக 4 ஆண்டுகளைக் கொண்ட கவர்ச்சிகரமான கொடுப்பனவுத் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வீடுகளைக் கொள்வனவு செய்ய விரும்புவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரே தளத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்குகின்றது.

தற்போது அதன் அறிமுகத்திற்கு முந்தைய கட்டத்தில் இருக்கும் ‘MON VIE’, தலைநகரில் குடும்பத்தை மையமாகக் கொண்ட சொகுசு வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குவது மட்டுமன்றி, சொகுசு வதிவிடக் கட்டடக்கலைத் துறையிலும் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதன் மூலம், Prime Lands Residencies PLC நிறுவனத்தை நாட்டின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் துறையில் மிக உயர்ந்த மதிமதிப்பிற்குரிய ஒரு தொலைநோக்கு நிறுவனமாக இது நிலைநிறுத்துகிறது.

BYD ඉතිහාසයේ ප්‍රථම වරට මෝටර්...
TikTok හරහා මැණික් ගැන ලෝකෙටම...
எல்.பி.எல் 2026: உள்ளூர், சர்வதேச நட்சத்திர...
Samsung Sri Lanka Celebrates the...
Father’s Day Special: Meet the...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
පසුගිය වසරේදී ආයතනවලින් 71%කට අවම...