City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

Share

Share

Share

Share

ஆடம்பர ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு விடுதி துறையில் உலகப் புகழ்பெற்ற மெல்கோ ரிசோர்ட்ஸ் & எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் (Melco Resorts & Entertainment) ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் தனது முத்திரையைப் பதித்து, சர்வதேச விருந்தோம்பல் துறையில் புதிய மைல்கற்களை எட்டி வருகின்றது.

மக்காவ், மணிலா, சைப்ரஸ் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஆறு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு விடுதிகள் மூலம், மெல்கோ நிறுவனம் சர்வதேச வடிவமைப்பு, உயர்தர சேவை, சுவையான உணவு வகைகள் மற்றும் மறக்க முடியாத பொழுதுபோக்கு அனுபவங்களுக்காக உலகளாவிய நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்திய சுற்றுலாப் பயணிகளுக்குப் புதியதோர் ஆடம்பர அனுபவத்தை வழங்கும் நோக்கில், தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ கொழும்பில் தற்போது கால்பதித்துள்ளது. இது மெல்கோ நிறுவனத்தின் பிராந்தியத்திற்கான அதிநவீன பொழுதுபோக்கு மையமாகும்.

மெல்கோ நிறுவனத்தின் முதன்மைத் திட்டமான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் மக்காவ்’ (City of Dreams Macau), ஆசியாவின் மிக முக்கிய ஆடம்பர சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். மறைந்த புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் டேம் ஜாஹா ஹடிட்டினால் (Dame Zaha Hadid) வடிவமைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற ‘மார்பியஸ்’ (Morpheus) கட்டிடம் மற்றும் மக்காவ் நகரின் அடையாளமாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற ‘ஹவுஸ் ஆஃப் டான்சிங் வாட்டர்’ (House of Dancing Water) என்ற நேரலை பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகியவை மக்காவ்வை உலகளாவிய பொழுதுபோக்கு தலைநகராக மாற்றியுள்ளன. மேலும், ஹாலிவுட் பாணியில் வடிவமைக்கப்பட்ட ‘ஸ்டுடியோ சிட்டி’ (Studio City), அதன் ஆர்ட் டெகோ (Art Deco) கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. உலகின் முதலாவது ‘எட்டு’ (8) வடிவ ராட்டினமான ‘கோல்டன் ரீல்’ (Golden Reel) இங்கு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் பயண வழிகாட்டியின் (Forbes Travel Guide) ‘ஐந்து நட்சத்திர’ அந்தஸ்தை 17 முறை வென்ற இந்த விடுதி, மிச்செலின் நட்சத்திரம் (Michelin-starred) பெற்ற ‘யிங்’ (Ying) கன்டனீஸ் உணவகம் மற்றும் ஐந்து நட்சத்திர ‘டென்மசா’ (Tenmasa) ஜப்பானிய உணவகம் ஆகியவற்றைக் கொண்டு மெல்கோவின் சமையற்கலைத் திறனை பறைசாற்றுகிறது.

பிலிப்பைன்ஸின் ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் மணிலா’ 2014 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் ஆடம்பர விருந்தோம்பல் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதுடன், தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகின்றது.

சைப்ரஸ் நாட்டின் லிமாசோலில் அமைந்துள்ள ஐரோப்பாவின் முதலாவதும், மிகப்பெரியதுமான ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் மெடிட்டரேனியன்’ மூலம் மெல்கோ நிறுவனம் ஐரோப்பாவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்த சர்வதேசப் பயணத்தின் அடுத்த கட்டமாக, மெல்கோ நிறுவனம் தனது உலகளாவிய அனுபவத்தைக் கொழும்பிற்கு கொண்டு வந்துள்ளது. ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், அதிஆடம்பர ‘நுவா’ (Nüwa) விடுதி, சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு அம்சங்கள், உயர்தர உணவகங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வணிக வளாகங்கள் உள்ளடங்கியுள்ளன. இது இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு பிரம்மாண்டமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

புத்தாக்கம், தரம் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதே மெல்கோ நிறுவனத்தின் நோக்கமாகும். மக்காவ் முதல் மணிலா, மெடிட்டரேனியன் மற்றும் தற்போது இலங்கை வரை, மெல்கோவின் ஒவ்வொரு சுற்றுலாத் தலமும் வெறும் தங்குமிடமாக மட்டுமில்லாமல், ஆடம்பரப் பயணங்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் தொலைநோக்குப் பார்வையைத் பறைசாற்றுகின்றன.

மெல்கோ நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் புத்தாக்கம், தரம் மற்றும் மறக்கமுடியாத அனுபவங்கள் ஆகிய பண்புகளை ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ பிரதிபலிக்கிறது. மக்காவ் முதல் மணிலா வரையும், மத்திய தரைக்கடல் பகுதி முதல் தற்போது இலங்கை வரையும், மெல்கோவின் ஒவ்வொரு திட்டமும் ஆடம்பர பயணங்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கத் தேவையின் காரணமாக மே மாதத்தில்...
ශ්‍රී ලංකාවේ ඉංජිනේරු ක්ෂේත්‍රයට සුවිශේෂී...
MullenLowe’s Praveena Perera Becomes First...
Zydus Lifesciences and Sunshine Healthcare...
Huawei Announces Wi-Fi 7 Patent...
Sampath Bank Launches Sri Lanka’s...
Smart Quest marks 20 years...
Samsung Bespoke AI Washer Dryer...
Sampath Bank Launches Sri Lanka’s...
Smart Quest marks 20 years...
Samsung Bespoke AI Washer Dryer...
Colombo Dockyard enters new growth...