கொழும்பு, 2026 ஜூலை 14: கொழும்பின் ஆடம்பர விருந்தோம்பல் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும் வகையில், ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) வளாகத்தில் அமைந்துள்ள ‘நுவா’ (NÜWA) சொகுசு ஹோட்டல், தனது முதலாம் ஆண்டு நிறைவை வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறது. தற்கால உலகளாவிய ஆடம்பரப் பயணிகளின் எதிர்பார்ப்புகளை முன்கூட்டியே அறிந்து, அவர்களுக்கேற்ற தனித்துவமான சேவைகளை வழங்கும் உயரிய நோக்கத்துடன் NÜWA கடந்த ஆண்டு தனது பயணத்தைத் தொடங்கியது.
கடந்த 12 மாதங்களில், இலங்கையின் ஆடம்பர விருந்தோம்பல் துறையின் எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்து, நாட்டின் மிகச்சிறந்த ஆடம்பர முகவரிகளில் ஒன்றாக NÜWA தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 113 அறைகளைக் கொண்ட இந்த முதன்மை ஆடம்பர ஹோட்டல், அதன் அசாத்திய சேவை, சிந்தனைமிக்க அனுபவங்கள் மற்றும் ஒவ்வொரு விருந்தினரையும் தனித்துவமாக உபசரிக்கும் தத்துவத்தின் மூலம் குறுகிய காலத்திலேயே பெரும் புகழைப் பெற்றுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் NÜWA ஹோட்டல் பல்வேறு முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது. குறிப்பாக, இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழுவிடம் (SLTDA) இருந்து மதிப்புமிக்க ‘ஐந்து நட்சத்திர’ அங்கீகாரத்தைப் பெற்றது இதன் மிக முக்கிய சாதனையாகும். சர்வதேச அளவிலான ஆடம்பரத் தரத்தை இலங்கையில் வழங்குவதோடு, உலகளாவிய பயணிகளின் விருப்பத்திற்குரிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கும் இந்த ஹோட்டல் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
மேலும், சர்வதேச சுற்றுலாத் துறையில் தனது முத்திரையைப் பதித்துள்ள NÜWA ஹோட்டல், Travel + Leisure உள்ளிட்ட உலகின் முன்னணி சுற்றுலா இதழ்களின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் புதிய தலைமுறை ஆடம்பர ஹோட்டலாக உருவெடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் சர்வதேசப் பயணிகள், வணிகத் தலைவர்கள், தூதுவர்கள், பிரபலங்கள் மற்றும் ஆடம்பரப் பொழுதுபோக்கை விரும்புவோர் எனப் பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்களை வரவேற்றதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களை வழங்கக்கூடிய ஒரு மையமாக கொழும்பை இது நிலைநிறுத்தியுள்ளது.
விருந்தினர்களை உபசரிப்பதில் தனித்துவமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையைக் கையாள்வதே NÜWA-வின் முதன்மை நோக்கமாகும். பிரத்தியேகமான ‘பட்லர்’ (Butler) சேவை, விருந்தினர்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் பயணத் திட்டங்கள், விசேடமாகத் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் பிரத்தியேக உடலநலப் பராமரிப்புப் பயணங்கள் என, மிகச் சிறிய ஆனால் ஆழமான நினைவுகளைத் தரக்கூடிய நுணுக்கங்களிலேயே உண்மையான ஆடம்பரம் அடங்கியுள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், NÜWA-வின் தனித்துவம் என்பது உலகளாவிய தரநிலைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை. உள்நாட்டு கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு அம்சங்கள், உணவுகள் மூலமாக விபரிக்கப்படும் பாரம்பரியக் கதைகள் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுடனான கூட்டு முயற்சிகள் ஆகியவற்றின் ஊடாக, இந்த ஹோட்டலின் ஒவ்வொரு பகுதியும் அதன் அனுபவங்களும் இலங்கையின் தனித்துவமான அடையாளத்தைப் பிரதிபலிக்கின்றன. இது உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுக்கும், மண்ணின் உண்மையான பாரம்பரியத்திற்கும் இடையிலான ஒரு நேர்த்தியான சமநிலையாகும். இதன் மூலம், உலகளாவிய தொடர்பையும் அதேநேரம் தனித்துவமான இலங்கையர் பண்பையும் ஒருசேரப் பிரதிபலிக்கும் ஒரு உன்னத அனுபவத்தை இங்கு வரும் விருந்தினர்களுக்கு இது வழங்குகிறது.
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கும் NÜWA, பிரீமியம் தங்குமிட வசதிகள், அலாதியான உணவு அனுபவங்கள், ஆடம்பர சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு, நல்வாழ்வு, நிகழ்வுகள் மற்றும் நாட்டின் முதன்மையான கேமிங் அனுபவம் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த ஆடம்பர மையமாகத் திகழ்கிறது. இந்த அனைத்துச் சேவைகளும் ஒன்றிணைந்து, கொழும்பு நகரமானது பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த அனுபவங்களுக்கான பிராந்திய மையமாக உருவெடுப்பதற்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன.
இந்த முதலாம் ஆண்டு நிறைவு குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் துணைத் தலைவரும், சொத்து பொது முகாமையாளருமான மைக்கல் ஹபாஷி கருத்துத் தெரிவிக்கையில், “NÜWA -வின் இந்த முதலாம் ஆண்டு பயணம் என்பது, இலங்கையில் ஆடம்பர விருந்தோம்பல் துறைக்கான ஒரு புதிய தொலைநோக்குப் பார்வையை நனவாக்கிய ஓர் அசாதாரணமான பயணமாகும். எமது முதல் விருந்தினர்களை வரவேற்ற அந்த தருணம் முதல், அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ற, உண்மையான மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதிலேயே நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம். எங்களின் ஐந்து நட்சத்திர அங்கீகாரத்தைப் பெற்றதும், சர்வதேச பயண சமூகத்தின் பாராட்டைப் பெற்றதும் மிக முக்கியமான மைல்கல்களாகும். ஆனால், எல்லாவற்றையும் விட எங்கள் விருந்தினர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், அவர்கள் இங்கு சேகரித்துக் கொண்ட நினைவுகளுமே எங்களுக்கு மிக முக்கியமானது. எங்களின் அடுத்த அத்தியாயத்தில் கால் பதிக்கும் இந்த வேளையில், புத்தாக்கம், அர்த்தமுள்ள கூட்டு முயற்சிகள் மற்றும் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான எங்களது இடைவிடாத தேடல் ஆகியவற்றின் மூலம் NÜWA வழங்கும் அனுபவங்களை அடுத்தடுத்த தளங்களுக்குத் தொடர்ந்து கொண்டு செல்வதில் நாங்கள் உறுதியாய் இருக்கிறோம்.” என்றார்.
தனது இரண்டாவது ஆண்டில் கால்பதிக்கும் NÜWA, புதிய அனுபவங்களின் தொகுப்பை விருந்தினர்களுக்கு வழங்கத் தயாராகி வருகிறது. இதில் பிரத்தியேக உணவுக்கலை கூட்டு முயற்சிகள், மேம்படுத்தப்பட்ட ஆரோக்கிய சேவைகள் மற்றும் விருந்தினர்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பயண அனுபவங்கள் ஆகியவை அடங்கும். ஆசியாவின் மிகச் சிறந்த மற்றும் ஆடம்பர விருந்தோம்பல் தளங்களில் ஒன்றாக NÜWA-வை மேலும் வலுவாக நிலைநிறுத்துவதை இலக்காகக் கொண்டே இந்தச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் விருந்தோம்பல் துறையை அதன் உச்சக்கட்டத் தரத்திற்கு கொண்டு சென்று, உலகளாவிய ஆடம்பர வரைபடத்தில் கொழும்பு நகரையும், இலங்கையையும் ஒரு முக்கிய இடமாக மாற்றுவதில NÜWA ஹோட்டலின் வெற்றிகரமான பயணம் தொடர்கிறது.





