இலங்கையின் திறந்த வகை வருமான நிதியங்களில் (Open-Ended Income Funds) அதிகபட்ச 5 ஆண்டு CAGRஐ First Capital Fixed Income Fund வழங்குகிறது

Share

Share

Share

Share

JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் துணை நிறுவனமான First Capital Holdings PLC இன் செல்வ (wealth) முகாமைத்துவப் பிரிவான First Capital Asset Management Limited (FCAM), அதன் அலகு நம்பிக்கை நிதிய (unit trust) திட்டங்களை First Capital Fixed Income Fund (FCFIF) ஊடாக மேம்படுத்தியுள்ளது. இது முதலீட்டு வாய்ப்புகளுக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்துவதுடன் பல்வேறு நிதி மற்றும் முதலீட்டு இலக்குகளை கொண்ட முதலீட்டாளர்களுக்கு தொழில்முறையாக நிர்வகிக்கப்படும் அலகு நம்பிக்கை நிதியங்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுகின்றது. அத்துடன் நிறுவனம், முதலீட்டாளர்களின் புரிதலை மேம்படுத்தவும் தனது அலகு நம்பிக்கை நிதிய திட்டங்களுடனான ஈடுபாட்டை விரிவுபடுத்தவும் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வகுத்து வருகிறது.

31 மார்ச் 2026 நிலவரப்படி, இலங்கையில் உள்ள திறந்த வகை வருமான நிதியங்களில் First Capital Fixed Income Fund மிக உயர்ந்த 5 ஆண்டு கூட்டு வருடாந்த வளர்ச்சி வீதத்தை (CAGR) வழங்கியமை இந்நிதியத்தின் நீண்டகால செயல்திறனின் வலிமையையும், விவேகமான நிதி முகாமைத்துவ அணுகுமுறையையும் சுட்டிக்காட்டுகின்றது.

நடுத்தர கால முதலீட்டு வருமானத்தை நோக்கமாகக் கொண்ட முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திறந்த வகை வருமான நிதியம், உயர்தர நிலையான வருமான முதலீட்டு பத்திரங்களை கொண்டு தொழில்முறை முதலீட்டு தொகுப்பினூடாக (portfolio) முதலீடு செய்கிறது. இந் நிதியமானது முதன்மையாக அரசுப் பத்திரங்கள், முதலீட்டு தரச்சான்று பெற்ற நிறுவனக் கடன் பத்திரங்கள் மற்றும் நிலையான வைப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நிலைத்தன்மை, தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளின் சமநிலையை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.

மூலதனச் சந்தையில் பல தசாப்த அனுபவத்தைக் கொண்டுள்ள First Capital Asset Management (FCAM), நிலையான வருமான முதலீடுகள் மற்றும் செயற்பாட்டு முதலீட்டு முகாமைத்துவத்தில் தனது நிபுணத்துவத்தின் மூலம் இலங்கையின் செல்வ முகாமைத்துவத் துறையில் வலுவான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இது அனுபவம் வாய்ந்த First Capital Asset Management ஆல் நிர்வகிக்கப்படுவதுடன் நிலையான வருமானச் சந்தைகள் மற்றும் பேரினப் பொருளாதாரப் போக்குகளில் விரிவான நிபுணத்துவம் கொண்ட அனுபவமிக்க முதலீட்டுக் குழுவால் வழிநடத்தப்படுகிறது.

First Capital Holdings PLC, பரந்த முதலீடு, செல்வ முகாமைத்துவம் மற்றும் ஆலோசனைத் தீர்வுகளை வழங்கி இலங்கையின் மூலதனச் சந்தைத் துறையில் தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது.

இந்த மேம்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த First Capital Asset Management Limited இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கவின் கருணாமூர்த்தி, “இன்றைய முதலீட்டாளர்கள், மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப சீரான செயல்திறனை வழங்கக்கூடிய, தொழில்முறையாக நிர்வகிக்கப்படும் முதலீட்டுத் தீர்வுகளை அதிகளவில் விரும்புகின்றனர். First Capital Fixed Income Fund ஆனது ஆராய்ச்சி, சந்தை நிபுணத்துவம் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டு முகாமைத்துவத்தின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் நீண்டகால செயல்திறன், முதலீட்டாளர்களுக்கு நிலையான பிரதிபலன்களை வழங்குவதில் எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.” என்றார்.

மேலும், First Capital Fixed Income Fund முழுமையான டிஜிட்டல் வழியிலான முதலீட்டு அனுபவத்தையும் வழங்குகிறது. இது 100% ஆவணமற்ற முதலீட்டுச் செயல்முறையின் மூலம் முதலீட்டாளர்கள் தடையின்றி நிதியை அணுக வழிவகுப்பதுடன் சௌகரியத்தையும் மேம்படுத்துகிறது.

இதை மேம்படுத்துவதன் ஊடாக First Capital Asset Management, மாறிவரும் முதலீட்டாளர் தேவைகள் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ப, எளிதில் அணுகக்கூடிய, செயல்திறன் சார்ந்த நிதித் தீர்வுகளை வழங்கி, தனது வாடிக்கையாளர் சார்ந்த முதலீட்டுச் சேவையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

*பொறுப்புத் துறப்பு: இந் நிதியத்தில் செய்யப்படும் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. வருமானம் உத்தரவாதப்படுத்தப்படுவதில்லை. கடந்தகால செயல்திறன் எதிர்கால பெறுபேறுகளுக்கான உத்தரவாதமாகக் கருதப்பட முடியாது.

ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு...
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator...
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல்...
BYD Launches RACCO in Japan,...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...
அடுத்த 3 பில்லியன் டொலர்களை நோக்கி:...