First Capital, மேம்படுத்தப்பட்ட நீர்கொழும்புக் கிளை ஊடாக சேவை அனுபவத்தை உயர்த்துகிறது

Share

Share

Share

Share

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் முதலீட்டுச் சந்தையில் முன்னணி நிறுவனமுமான First Capital Holdings PLC, வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையையும் சௌகரியமான அனுபவத்தையும் வழங்கும் நோக்கில், புதிதாகப் புனரமைக்கப்பட்ட தனது நீர்கொழும்புக் கிளையைத் திறந்து வைத்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சேவைத் தரங்கள், நவீன உள்ளக வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரியமான சூழல் ஆகியவற்றின் ஊடாக உயர்தர வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது. நிறுவனத்தின் சிறப்பாகச் செயல்படும் கிளைகளில் ஒன்றாகத் திகழும் இக்கிளையின் புனரமைப்பானது, தனது வாடிக்கையாளர் தொடர்பு மையங்களை வலுப்படுத்துவதிலும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தடையற்ற, மேம்பட்ட சேவை அனுபவத்தை வழங்குவதிலும் First Capitalஇன் தொடர்ச்சியான முதலீட்டைக் குறிக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட இக் கிளையில், வாடிக்கையாளர்களுக்கு மேலும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கும் நோக்கில் விரிவாக்கப்பட்ட குழுவும் இங்கு இடம்பெற்றுள்ளது. இது, வாடிக்கையாளர்கள் தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்கவும், மேம்பட்ட நிதி நல்வாழ்வு மற்றும் நிதி முகாமைத்துவத்தை நோக்கிய அவர்களின் பயணத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், முதன்மை அரசுப் பத்திர வர்த்தகர், பெருநிறுவன நிதி ஆலோசகர், சொத்து முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, ‘செயலாற்றுகை முதலில்’ எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. மூலதனச் சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்துத்தை கொண்டுள்ள First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC (துணை நிறுவனம்) ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகள், லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் (LRA) நிலையான கண்ணோட்டத்துடன் கூடிய ‘A+’ என்னும் நிறுவன மதிப்பீடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. First Capital Holdings PLC, உலகப் பொருளாதார இதழ் விருதுகள் 2026 இல் இலங்கையின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டமை முதலீட்டு வங்கித் துறையில் ஒரு நம்பகமான தலைவராக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 2025 இல் இலங்கையில் Superbrands தகுதியை அடைந்த முதல் முதலீட்டு நிறுவனமாக விளங்கி தனது வலுவான வர்த்தகநாம இருப்பையும் சந்தைத் தலைமைத்துவத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
First Capital Holdings PLC – https://firstcapital.lk/

ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு...
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator...
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல்...
BYD Launches RACCO in Japan,...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...
அடுத்த 3 பில்லியன் டொலர்களை நோக்கி:...