இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhythm of Unity’ ஊடாக இளம் திறமையாளர்களைக் கொண்டாடுகிறது

Share

Share

Share

Share

‘Rhythm of Unity’ – கலாசார மாலை 2026 நிகழ்வை வழங்குவதற்காக இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் (SOSCV SL) ஒன்றுகூடுகின்றது.

இலங்கை முழுவதிலும் உள்ள ஆறு SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த இளம் சிறார்களின் இசை, நடனம் மற்றும் கலாசார நிகழ்வுகள் ஊடாக தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு மேடையை இந்நிகழ்வு வழங்குகிறது. 2026 செப்டம்பர் 19 ஆம் திகதி கொழும்பு, பிஷப்ஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் மாலை 7.00 மணி முதல் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையின் கொண்டாட்டத்தில் சிறுவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கும்.

சிறுவர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் தங்களது குடும்பத்தினருடன் வலுவான பிணைப்புகளை ஏற்படுத்திக்கொள்வதுடன், மென்மேலும் வளர்ச்சியடைவதற்கேற்ற முயற்சிகளுக்கு முன்னுரிமையளித்து, ‘Rhythm of Unity’ நிகழ்வு சிறுவர்கள் தம்மைப்பற்றியும், குழுப்பணி மற்றும் சுய-வெளிப்பாட்டிற்கான தங்களது திறனைப் பற்றியும் கண்டறிவதற்கான ஒரு தனித்துவமான அனுபவ அடிப்படையிலான தளத்தை உருவாக்குகிறது. அத்துடன், சிறுவர்கள் தமது சொந்தக் குரல்களையும் அடையாளங்களையும் கண்டறிந்து கொள்வதற்கு ஊக்கமளிப்பதன் அளப்பரிய முக்கியத்துவத்தையும் இது வெளிப்படுத்தும்.

பிலியந்தலை, நுவரெலியா, காலி, அனுராதபுரம், மொனராகலை, யாழ்ப்பாணம், கந்தர மற்றும் பெரலிய ஆகிய பகுதிகள் உட்பட இலங்கையிலுள்ள SOS சிறுவர் கிராமங்கள் மற்றும் குடும்பத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் முழுவதும் ஒத்திகைகள் நடைபெற்று வரும் நிலையில், சிறுவர்களைச் சிறந்த குடிமக்களாக வளர்த்தெடுப்பதற்குத் தேவையான அனுபவங்கள் மற்றும் திறன்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இம்மாலை பொழுது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைகின்றது.

இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நிகழ்வு நம் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கும் ஒரு நாளாகும். எமது பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் நாங்கள் கொண்டாடுவது மட்டுமன்றி, படைப்பாற்றல் மூலமாக குழந்தைகள் தங்களுக்கு இடையிலான பிணைப்பைக் கண்டறிவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்குகிறோம். மேலும், குழந்தைகளை நேர்மையான குடிமக்களாக வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அடிப்படையான சொந்த உணர்வை அவர்களுக்குள் ஊன்றியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பையும் இம்மாலை பொழுது நமக்கு வழங்குகிறது.” என்றார்.

ஒவ்வொரு குழந்தையும் ஆதரவான குடும்பத்துடன் கூடிய ஒரு வீட்டிற்கு மட்டுமன்றி, அவர்களின் தன்னம்பிக்கையையும் சுயமதிப்பையும் கட்டியெழுப்பும் ஆரோக்கியமான அனுபவங்களுக்கும் தகுதியானவர்கள் என்பதை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. SOS அமைப்பின் உயரிய நோக்கத்தையும், உலகில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் மற்றும் உயர்த்தவும் அது முன்னெடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளையும் வெளிப்படுத்தி, தேசத்தின் எதிர்காலத்திற்காக ஆழமான மற்றும் அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை விரிவுபடுத்தும் SOS சிறுவர் கிராமங்களின் விரிவான இலக்கின் மீது ‘Rhythm of Unity’ கவனத்தை ஈர்க்கிறது.

இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் https://www.soschildrensvillages.lk/about-us

இலங்கையின் முதல் தேசிய அறுவை சிகிச்சை...
BestWeb.LK Awards 2026 நிகழ்வில் Lina...
ආචාර්ය රුවන් පෙරේරාගේ ආරාධනයෙන් මෙරටට...
The Cove Hiriketiya Debuts as...
Superbrand පිළිගැනීම පිළිබඳව Samsung Sri...
ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் ‘மூணமல்’ விருதுக்கான...
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக...
First Capital named a Great...
ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் ‘மூணமல்’ விருதுக்கான...
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக...
First Capital named a Great...
Eicher වාණිජ වාහන සඳහා HNB...