Huawei மற்றும் HP Inc. இடையே உலகளாவிய காப்புரிமை பகிர்வு ஒப்பந்தம்

Share

Share

Share

Share

தொலைத்தொடர்புத் துறையின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Huawei மற்றும் உலகின் முன்னணி கணினி உற்பத்தி நிறுவனமான HP Inc. ஆகியன அண்மையில் உலகளாவிய காப்புரிமை பகிர்வு (Patent Cross-Licensing) ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நிறுவனங்களும் தங்களுக்குச் சொந்தமான தொழில்நுட்பக் காப்புரிமைகளை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், Huawei நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்தியேக Wi-Fi தொழில்நுட்பக் காப்புரிமைகளை HP Inc. நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அறிவுசார் சொத்துரிமை உரிமம் பெறுவதில் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் இந்த ஒப்பந்தத்தின் மூலம், Huawei நிறுவனத்தின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப பலத்தையும், கணினி மற்றும் அது சார்ந்த சாதனங்கள் துறையில் உலகளாவிய முன்னணி கணினி உற்பத்தி நிறுவனமான HP Inc. நிறுவனத்தின் சிறப்பையும் அனுபவிக்க முடியும்.

இந்த சிறப்புமிக்க ஒப்பந்தம் குறித்துக் கருத்து தெரிவித்த Huawei நிறுவனத்தின் முதன்மை அறிவுசார் சொத்து அதிகாரி திரு. ஆலன் ஃபான், “HP Inc. நிறுவனத்துடன் இத்தகைய காப்புரிமைகளை பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் புதிய துறைகளில் Huawei மேற்கொண்டு வரும் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இந்த ஒப்பந்தத்தைக் கருதலாம். மேலும், இக்காப்புரிமைகள் மூலம் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை முழுத் துறையுடனும் பகிர்ந்து கொள்ள Huawei நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளருக்கு மிகச்சிறந்த தொழில்நுட்ப அனுபவத்தை வழங்க எங்களால் முடியும்,” எனக் குறிப்பிட்டார்.

First Capital, சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு...
MAS, 2026 අයිචි-නගෝයා ආසියානු ක්‍රීඩා...
Gather Around the Table: Hot...
යතුරුපැදි ධාවකයින්ගේ ආරක්ෂාව වෙනුවෙන් Hayleys...
முற்பணங்களில் 224 பில்லியன் ரூபா அதிகரிப்புடன்...
2026 இன் இலங்கையின் மிக மதிப்புமிக்க...
வார இறுதி விடுமுறையை மறக்கமுடியாத நினைவுகளாக...
Huawei மற்றும் HP Inc. இடையே...
2026 இன் இலங்கையின் மிக மதிப்புமிக்க...
வார இறுதி விடுமுறையை மறக்கமுடியாத நினைவுகளாக...
Huawei மற்றும் HP Inc. இடையே...
විවේකය සතුටින් ගෙවන හැටි TikTok...