இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல் புரட்சி: 4,000 பதிவிறக்கங்களைக் கடந்து சாதனை படைத்த BYD மொபைல் செயலி (App)

Share

Share

Share

Share

BYD நிறுவனம் மற்றும் இலங்கையிலுள்ள அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் (John Keells CG Auto) இணைந்து ‘BYD Mobile App’ செயலியை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளன. இது நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, குறுகிய காலத்திற்குள் 4,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் ஆரம்பித்துள்ளனர். இது இலங்கையின் வாகனத் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சாதனையாகவும், BYD வாகனங்களுக்கான மக்களின் அதிக வரவேற்பைப் பறைசாற்றுவதாகவும் அமைந்துள்ளது.

இந்தச் செயலியின் வருகையானது, இலங்கை வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து எதிர்பார்க்கும் வசதிகளில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச தரத்திற்கு இணையான தடையற்ற புதிய ஆற்றல் வாகன (NEV) அனுபவத்தையும் வழங்குகிறது.

இதுகுறித்து ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் எமது வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்துள்ள அமோக வரவேற்பானது, தொழில்நுட்பத்தை அவர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. வாகனத்தை தூரத்திலிருந்தே கட்டுப்படுத்தும் வசதியும், நிகழ்நேரக் கண்காணிப்பும் அவர்களுக்குப் புதிய அனுபவத்தையும் மன அமைதியையும் தருகின்றன. இலங்கையின் வாகனத் துறையில் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்தின் ஆரம்பமே இது.” என்றார்.

கொழும்பில் உள்ள வாகன விநியோக மையத்தில் (Delivery Hub) புதிய வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்கும் போது இந்தச் செயலியைப் பயன்படுத்தும் வசதி முதன்முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது கொழும்பு, வத்தளை, கண்டி, காலி, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள சேவை நிலையங்களுக்கும் இது விரைவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள BYD வாகன உரிமையாளர்கள் அனைவரும் இந்தச் சேவையைப் பயன்படுத்தும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

BYD மொபைல் செயலியின் மூலம், வாகனத்தின் உரிமையாளர் தூர விலகிச் சென்றாலும் வாகனம் எப்போதும் இணைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். உரிமையாளர்கள் உலகின் எந்த இடத்திலிருந்தும் தங்கள் வாகனத்தை தூரத்திலிருந்து பூட்டவும் (Lock) திறக்கவும் (Unlock) முடியும். பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வாகனத்தின் உட்பகுதியைக் குளிரூட்டவோ (Pre-cool) அல்லது சூடேற்றவோ (Pre-heat) முடியும். அத்துடன், வாகனத்தின் விளக்குகள் மற்றும் ஹோர்ன் (Horn) சத்தத்தை தூரத்திலிருந்தே இயக்கி, வாகனம் இருக்கும் இடத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். பேட்டரி அளவுகள், வாகனம் பயணிக்கக்கூடிய தூரம் மற்றும் சார்ஜிங் நிலவரங்களைச் செயலி வழியே உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். சுருக்கமாகக் கூறின், இச்செயலி ஒரு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வாகனத்தின் முழுமையான கட்டுப்பாட்டு மையமாக மாற்றுகிறது.

இந்தச் செயலி வழங்கும் நன்மைகள் வெறும் சௌகரியத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. வாகன உரிமையாளர்களின் பாதுகாப்புக்கும், மன அமைதிக்கும் முன்னுரிமை அளிக்கும் தற்போதைய சந்தைச் சூழலில், தூரம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் ‘BYD மொபைல் செயலி’ வாடிக்கையாளர்களுக்குத் தம் வாகனத்துடன் தொடர்ச்சியான மற்றும் உறுதியான தொடர்பை உறுதிசெய்கிறது.

நீண்டநாள் வேலைக்குப் பிறகு வாகனத்தின் நிலையைச் சரிபார்ப்பதாகட்டும், அல்லது இரவு நேரத்தில் வாகனம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு சார்ஜ் ஆகிறதா என்பதை உறுதிப்படுத்துவதாகட்டும் தங்களது வாகனம் எப்போதும் கைக்கெட்டும் தூரத்தில் கைப் பையிலேயே உள்ளது என்பதை அறிவதன் மூலம் ஒவ்வொரு வாகன உரிமையாளரும் கூடுதல் பாதுகாப்பு உணர்வைப் பெறுகின்றனர்.

BYD மொபைல் செயலியை Apple App Store மற்றும் Google Play Store ஆகியவற்றிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்து BYD கணக்கை உருவாக்கிய பின், வாகனம் விநியோகிக்கபடும் போதோ அல்லது இலங்கை முழுவதிலும் உள்ள எந்தவொரு BYD சேவை நிலையத்திற்கும் செல்லும் போதோ தங்களது வாகனத்தைச் செயலியுடன் பாதுகாப்பாக இணைத்துக் கொள்ள முடியும்.

2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2...
ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு...
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator...
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல்...
BYD Launches RACCO in Japan,...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...