2026 Calin Popular Awards மற்றும் SLIM DIGIS 2.6 விருதுகளை வென்று Coca-Cola சாதனை

Share

Share

Share

Share

இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் Coca-Cola வர்த்தக நாமம் இணைந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், காலத்திற்கேற்ப மக்களின் விருப்பமான வர்த்தக நாமமாக அது தொடர்ந்து மிளிர்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்ற Calin Popular Awards 2026 மற்றும் SLIM DIGIS 2.6 ஆகிய விருது விழாக்களில் Coca-Cola நிறுவனம் உயரிய அங்கீகாரங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

Calin Popular Awards 2026 விருது விழாவில் Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம் ‘ஆண்டின் மிகவும் பிரபலமான பான வர்த்தக நாமம்’ (Most Popular Beverage Brand of the Year) விருதை வென்று, இலங்கை நுகர்வோரின் முதன்மைத் தேர்வாகத் தான் தொடர்வதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல, SLIM DIGIS 2.6 விருது விழாவில், Coca-Cola-வின் Real Magic பிரச்சாரமானது களரீதியான நேரடி அனுபவங்களை டிஜிட்டல் தளங்களுடன் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்காக ‘சிறந்த அனுபவபூர்வ மற்றும் களரீதியான டிஜிட்டல் விரிவாக்கம்’ (Best Use of Experiential & On-Ground Digital Amplification) என்ற அங்கீகாரத்தையும் வென்றுள்ளது. நிஜ உலக அனுபவங்களை டிஜிட்டல் தொடர்புகளுடன் இணைப்பதன் மூலம், மக்களுடனான தனது உறவை Coca-Cola எவ்வாறு காலத்திற்கேற்ப புதுப்பித்து வருகிறது என்பதை இச்சான்று வெளிப்படுத்துகிறது.

Coca-Cola-வின் இந்த மைல்கல் ஆண்டிற்கு இவ்விரு அங்கீகாரங்களும் பெரும் சிறப்பைச் சேர்க்கின்றன. 2026 ஆம் ஆண்டில், இலங்கையில் தனது 65 ஆவது ஆண்டு நிறைவை Coca-Cola கொண்டாடுகிறது. பல தலைமுறைகளாகக் குடும்பச் சந்திப்புகள், கொண்டாட்டங்கள், உணவருந்தும் தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியான நிமிடங்களில் இது நீடித்த ஒரு பயணமாகும். இதனை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட ‘எப்போதும் Coca-Cola-வை தேர்ந்தெடுப்பதற்கு நன்றி’ (Thank You for Always Picking Coca-Cola) என்ற 65 ஆம் ஆண்டு நிறைவுப் பிரச்சாரமானது, நுகர்வோருடனான இந்த நீண்டகால உறவையே முதன்மைப்படுத்துகிறது.

இது குறித்து Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்தியத் தலைவர் மரியோ பெரேரா கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் நமது 65 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரங்கள் மிகவும் அர்த்தமுள்ளவை. இலங்கை மக்கள் தலைமுறை தலைமுறையாகக் Coca-Cola-வை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த நம்பிக்கையை நாங்கள் எப்போதும் உயர்வாகக் கருதுகிறோம். அதேவேளையில், காலத்திற்கேற்பப் பொருத்தமாக இருப்பதற்கு நுகர்வோருடன் நாம் தொடர்புகொள்ளும் விதத்தைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். Calin Popular விருதுகள் மற்றும் Calin Popular ஆகிய இரண்டின் மூலமும் கிடைத்துள்ள இந்த அங்கீகாரமானது, நுகர்வோருடனான எங்களது நீண்டகால உறவுக்கும், இன்றைய தலைமுறைக்கு ஏற்ற அனுபவங்களை உருவாக்குவதற்கும் இடையிலான சரியான சமநிலையைப் பிரதிபலிக்கிறது,” எனக் குறிப்பிட்டார்.

அரையாண்டிற்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு வர்த்தக நாமத்திற்கு, மீண்டும் ஒருமுறை ‘ஆண்டின் மிகவும் பிரபலமான பான வர்த்தக நாமம்’ என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதானது வெறும் அறிமுகத்தை மட்டும் குறிக்கவில்லை. புதிய தலைமுறையினர் வர்த்தக நாமங்களை எவ்வாறு கண்டறிகிறார்கள், அனுபவிக்கிறார்கள் மற்றும் அவற்றுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, நுகர்வோரின் முதன்மைத் தேர்வாக Coca-Cola தொடர்ந்து விளங்குவதையே இது காட்டுகிறது.

ஒட்டுமொத்தத்தில் Calin Popular Awards மற்றும் SLIM DIGIS ஆகிய இரு அங்கீகாரங்களும் இந்த வெற்றியின் இரு பக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. ஒன்று, இலங்கை மக்கள் இன்றும் தொடர்ச்சியாக விரும்பித் தேர்ந்தெடுக்கும் பானம் மற்றொன்று, நுகர்வோருடன் இணைந்திருக்க புதிய வழிகளைக் கண்டறியும் ஒரு வர்த்தக நாமம்.

Huawei Cloud Named a Leader...
Softlogic Life Pioneers AI-Powered Corporate...
විබ්මෝ වංචා සහ අවදානම් කළමනාකරණ...
A Milestone Achievement: Barista Coffee...
ஜனசக்தி லைஃப், வாழ்வைப் பாதுகாத்து, நம்பிக்கையைக்...
Darin Leads Sri Lanka’s Powerlifting...
2026 Calin Popular Awards மற்றும்...
Sumathi IT Marks 25 Years...
Darin Leads Sri Lanka’s Powerlifting...
2026 Calin Popular Awards மற்றும்...
Sumathi IT Marks 25 Years...
ஜனசக்தி லைஃப், யாழ்ப்பாணத்தில் சமூக ஈடுபாட்டை...