2026 உலகப் பயண விருதுகளில் இரண்டு விருதுகளை வென்று City of Dreams Sri Lanka சாதனை

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி ஆடம்பர விடுதிகளில் ஒன்றான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, தனது முதலாம் ஆண்டு நிறைவில், 2026ஆம் ஆண்டுக்கான உலகப் பயண விருதுகள் (World Travel Awards 2026) நிகழ்வில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இதன்படி, ‘ஆசியாவின் முன்னணி புதிய உல்லாச விடுதி 2026’ (Asia’s Leading New Resort 2026) மற்றும் ‘இலங்கையின் முன்னணி ஆடம்பர உல்லாச விடுதி 2026’ (Sri Lanka’s Leading Luxury Resort 2026) ஆகிய இரண்டு உயரிய விருதுகளை இந்த நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்த அங்கீகாரமானது, பிராந்திய மற்றும் தேசிய விருந்தோம்பல் வரைபடத்தில் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவை மிக வலுவாக நிலைநிறுத்தியுள்ளதுடன், ஆசியாவின் ஆடம்பர சுற்றுலாத் துறையில் ஒரு புதிய இடமாகவும், இலங்கையின் உயர்தர விருந்தோம்பல் சேவையின் பரிணாம வளர்ச்சிக்கு இந்நிறுவனம் வழங்கும் பங்களிப்பையும் இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

கடுமையான போட்டி நிறைந்த ஆசியப் பிராந்தியச் சந்தையில் நிறுவனம் தன் அடையாளத்தை நிலைநிறுத்தும் தருணத்தில் ‘ஆசியாவின் முன்னணி புதிய உல்லாச விடுதி’ விருது கிடைத்துள்ளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேவேளை, ‘இலங்கையின் முன்னணி ஆடம்பர உல்லாச விடுதி’ விருதானது, நாட்டின் ஆடம்பர சுற்றுலாத் துறையின் அதிநவீன வளர்ச்சியையும் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது.

தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த உல்லாச விடுதியாகக் திகழும் ‘சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, கொழும்ப்பின் மையப்பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர தங்குமிடங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், நல்வாழ்வு மையங்கள், சில்லறை விற்பனை அங்காடிகள், வணிக மற்றும் நிகழ்வு அரங்குகளுடன் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது. இதன் அதிநவீன ஆடம்பர ஹோட்டலான ‘நுவா’ (Nüwa) மற்றும் ‘சினமன் லைஃப்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், சர்வதேச அளவிலான விருந்தோம்பல் தரத்துடன், இலங்கையின் தனித்துவமான பண்பையும் அன்பான உபசரிப்பையும் இணைத்து விருந்தினர்களுக்கு தடையற்ற பலவித அனுபவங்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ தனது முதல் ஆண்டை நிறைவு செய்யும் இத்தருணத்தில் இவ்விருதுகள் கிடைத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இக்காலப்பகுதியில் புதிய விருந்தோம்பல், உணவு மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சர்வதேச நிகழ்வுகளின் பட்டியலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொழும்பை ஒரு சிறந்த உல்லாசப் பயணம், வணிகம் மற்றும் சர்வதேசப் பயணிகளுக்கான முதன்மையான இடமாக மாற்றுவதற்கு இந்நிறுவனம் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையையும், பரந்த தெற்காசிய சுற்றுலாத் துறையில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதிலுள்ள அதன் பங்களிப்பையும் இந்த அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இது குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீங்கா’வின் துணைத் தலைவரும், சொத்துப் பொது முகாiமாளருமான மைக்கல் ஹபாஷி கருத்து தெரிவிக்கையில், “எமது முதல் ஆண்டிலேயே இந்த இரண்டு உலக பயண விருதுகளையும் பெறுவதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இவை சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’விற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். அதைவிட முக்கியமாக, எங்களது ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சிறப்பான சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இலங்கையின் ஆடம்பர விருந்தோம்பல் மற்றும் ஒருங்கிணைந்த உல்லாச விடுதி அனுபவங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவரும் நோக்குடனேயே நாங்கள் காலடி எடுத்து வைத்தோம். இந்த அங்கீகாரம் எமது பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. எமது நோக்கம் இதுவரை அடைந்த சாதனைகளோடு நின்றுவிடுவதல்ல, மாறாக சேவைத் தரத்தை மேலும் உயர்த்தி, விருந்தினர்களின் மனதைக் கவரும் அனுபவங்களை உருவாக்குவதும், பிராந்தியத்தின் முன்னணி சுற்றுலா மையமாக இலங்கை உருவெடுப்பதற்குப் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதுமே ஆகும்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த அங்கீகாரமானது 2026 ஆம் ஆண்டுக்கான உலக பயண விருதுகளில் Melco Resorts & Entertainment நிறுவனம் பெற்ற மாபெரும் வெற்றிகளின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. இதன்படி, City of Dreams Macau, ‘மக்காவுவின் முன்னணி கசினோ உல்லாச விடுதி 2026’ மற்றும் ‘மக்காவுவின் முன்னணி உல்லாச விடுதி 2026’ ஆகிய விருதுகளை வென்றது. அதேபோன்று, City of Dreams Manila, ‘ஆசியாவின் முன்னணி கசினோ உல்லாச விடுதி 2026’ மற்றும் ‘பிலிப்பைன்ஸின் முன்னணி உல்லாச விடுதி 2026’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா பெற்றுள்ள ‘ஆசியாவின் முன்னணி புதிய உல்லாச விடுதி’ விருதுடன் சேர்த்து இந்த விருதுகள் அனைத்தும், ஆசியா முழுவதும் மெல்கோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உல்லாச விடுதித் தொகுப்புக்குக் கிடைத்துவரும் தொடர்ச்சியான அங்கீகாரத்தையும், தனித்துவமான விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதில் அது கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகின்றன.

පුල්ලේ මඩුවෙන් වෛද්‍ය පීඨයට වැවිලි...
The cost of hesitation: lessons...
TikTok strengthens AI transparency and...
රෙදිපිළි හා ඇඟලුම් උපාංග නිෂ්පාදකයින්ගේ...
Deleted Scenes by BBDO Sri...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
පාරිභෝගිකයින්ට සුවිශේෂී ප්‍රතිලාභ රැසක් පිරිනමමින්...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
පාරිභෝගිකයින්ට සුවිශේෂී ප්‍රතිලාභ රැසක් පිරිනමමින්...
BBDO Sri Lanka හි ‘Deleted...