40ஆவது அகில இலங்கைப் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய MAS Athlete Training Academy வீரர்கள்

Share

Share

Share

Share

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 40ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் பிரதான நிகழ்ச்சியான மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், 4 வயதுப் பிரிவுகளின் கீழ் 118 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் இம்முறை ஆரம்ப சுற்றுப் போட்டிகளுக்காகக் கலந்துகொண்ட பாடசாலை வீர வீராங்கனைகளின் எண்ணிக்கை 35,000 க்கும் அதிகமாகும். 14 வயதுக்கு உட்பட்ட, 16 வயதுக்கு உட்பட்ட, 18 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட வயதுப் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இம்முறை போட்டிகளில் 23 போட்டிச் சாதனைகளும், 2 புதிய இலங்கை இளைஞர் போட்டிச் சாதனைகளும் படைக்கப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், இம்முறை ஆரம்ப சுற்றுப் போட்டிகளுக்காகப் பங்கேற்ற பாடசாலை வீர வீராங்கனைகளின் எண்ணிக்கை 35,000 இற்கும் அதிகமாகும். 14, 16, 18, மற்றும் 20 ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளின் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் 23 போட்டிச் சாதனைகளும், புதிய இலங்கை இளையோர் போட்டி சாதனைகள் இரண்டும் பதிவாகியமை மற்றொரு சிறப்பம்சமாகும்.

இதில் பாடசாலை மெய்வல்லுநர் வீர வீராங்கனைகளின் மிகச்சிறந்த திறமைகளுக்காக வழங்கப்படும் பிரதான 10 விருதுகளில் 6 ஐ MAS அத்லீட் ட்ரேனிங் அகெடமியைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. போட்டிகளின் போது வழங்கப்படும் இந்தச் சிறப்புமிக்க 10 விருதுகளும், வெவ்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் திறமைமிக்க வீர வீராங்கனைகளுக்கும், ஒட்டுமொத்தப் போட்டியின் திறமைமிக்க வீரர் மற்றும் வீராங்கனைக்கும் என வழங்கப்பட்டன.

இம்முறை போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறந்த வீரருக்கான விருதினை MAS அத்லீட் ட்ரேனிங் அகெடமியைச் சேர்ந்த கிசல் ஓஷத தனதாக்கிக் கொண்டார். ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், 14.06 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்தார்.

அதேபோன்று 18 வயதுக்குட்பட்ட சிறந்த வீராங்கனைக்கான விருதை MAS அத்லீட் ட்ரேனிங் அகெடமியைச் சேர்ந்த முப்பாய்ச்சல் வீராங்கனை தில்னி ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியில் 12.73 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்த அவர், புதிய பாடசாலைப் போட்டிச் சாதனையையும் நிலைநாட்டினார்.

இந்த நிலையில், 20 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறந்த வீரருக்கான விருதினை MAS அத்லீட் ட்ரேனிங் அகெடமியின் கவீஷ டில்ஷான் குலதுங்க தனதாக்கிக் கொண்டார். ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், 14.02 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து இந்த விருதைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதினை 200 மீற்றர் ஓட்டப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரிசன்ஸா ஹிருபமா பெற்றுகொண்டார். குறித்த போட்டியை 24.23 செக்கன்களில் நிறைவு செய்த அவர், முழுப் போட்டித் தொடரினதும் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

அதற்கமைய, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் பிரதான நிகழ்ச்சியான மெய்வல்லுநர் போட்டியின் முதன்மையான இரண்டு விருதுகளான தொடரின் சிறந்த வீரர் மற்றும் போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனை ஆகிய இரண்டு விருதுகளுமே MAS அத்லீட் ட்ரேனிங் அகெடமிக்கே கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

உயர்ந்த ஆளுமை கொண்ட இலங்கை மெய்வல்லுநர் வீர வீராங்கனைகளை ஒலிம்பிக் கனவு நோக்கி அழைத்துச் செல்லும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ள MAS அத்லீட் ட்ரேனிங் அகெடமி, எப்போதும் வீர வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்திக்கொள்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி வருகின்றது. அவற்றுள் இந்நாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர்களின் திறன்களை உயர்த்திக் கொள்ளத் தேவையான சர்வதேச பயிற்சி ஆலோசனைகள் மற்றும் முறைகளை அறிமுகப்படுத்துவதும் அடங்கும். இந்த எண்ணக்கருவின் கீழ் சர்வதேச மட்டத்திலான சிறந்த மெய்வல்லுநர் பயிற்சி ஆலோசகர்களை வரவழைத்து, இலங்கைக்குள் நடத்தப்படும் முதலாவது வதிவிடப் பயிற்சி அமர்வை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, சர்வதேச வெற்றிகளுக்காகத் தேவையான சர்வதேச மட்டத்திலான பயிற்சி அமர்வு இந்த ஆண்டு இந்த வீர வீராங்கனைகளுக்குக் கிடைக்கவுள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் பதின்ம வயதினர்களின் மனநலனையும்,...
JAAF calls for evidence before...
40ஆவது அகில இலங்கைப் பாடசாலைகள் மெய்வல்லுநர்...
ජාතික තරුණ අනාගත සංසදය විසින්...
Sampath Bank and Mastercard collaborate...
කෘෂිකර්මාන්තයේ හෙට දවස වෙනුවෙන් HNB...
Healthguard Expands Retail Footprint with...
Sampath Bank and Mastercard collaborate...
කෘෂිකර්මාන්තයේ හෙට දවස වෙනුවෙන් HNB...
Healthguard Expands Retail Footprint with...
பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிகாட்டி பாதுகாப்பான சூழலுக்காக...