யாழ்ப்பாணத்தில் ‘பந்தம்’ வாடிக்கையாளர் மற்றும் விநியோகஸ்தர் இணைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது Mahindra Ideal Finance

Share

Share

Share

Share

மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் பிஎல்சி (Mahindra Ideal Finance PLC), வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன விநியோகஸ்தர்களை ஒருங்கிணைக்கும் ‘பந்தம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்தை யாழ்ப்பாணத்தில் 2026 ஒக்டோபர் 7 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. இந்நிறுவனத்துடனான வணிக உறவுகளை வலுப்படுத்தவும், நிறுவனத்துடன் நீண்டகாலக் கூட்டாண்மையை கட்டியெழுப்பவும் இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் வாகன விநியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

‘மக்களை இணைப்போம், நம்பிக்கையை வளர்ப்போம், ஒன்றாக வளர்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த ‘பந்தம்’ நிகழ்ச்சித் திட்டம், வாடிக்கையாளர்களுக்கும் வாகன விநியோகஸ்தர்களுக்கும் மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவும், தங்களது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயவும் ஒரு நேரடி தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

குறிப்பாக, மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் குத்தகை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும், வாகனங்களைக் கொள்முதல் செய்யும் இடத்தில் வாடிக்கையாளர்களை நிறுவனத்துடன் இணைப்பதிலும் முக்கியப் பங்காற்றும் வாகன விநியோகஸ்தர்களுக்கு இத்திட்டத்தில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தவும், விநியோகஸ்தர் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கவும் மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முஃபத்தல் சூனியா கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு வாடிக்கையாளருக்கும் மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான உறவு பெரும்பாலும் வாகன விநியோகஸ்தர்களிடம் இருந்தே தொடங்குகிறது. எனவே, அந்தக் கூட்டாண்மையின் வலிமையே நாங்கள் வழங்கும் சேவையின் தரத்தைத் தீர்மானிக்கிறது. ‘பந்தம்’ திட்டம் எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் கட்டமைக்கப்பட்ட முறையில் தொடர்புகொள்ளவும், அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்பச் செயல்படவும் உதவுகிறது. இத்திட்டத்தை எங்களது கிளைகளின் வலைப்பின்னல் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது கிளைகள் வாயிலாக மேலும் பல வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் சந்திப்புகளை நடத்துவதன் மூலம் பந்தம் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் பிஎல்சி பற்றி:
மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் பிஎல்சி (MIFL) என்பது இலங்கையின் மத்திய வங்கியினால் முறைமைப்படுத்தப்பட்ட உரிமம் பெற்ற வங்கிசாரா நிதி நிறுவனமாகும். இது இந்தியாவின் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும். நாடு முழுவதும் விரிவடைந்து வரும் கிளை வலைப்பின்னலுடன், பல்வேறு வகையான வாகனங்களுக்கான நிதியுதவி, குத்தகை, தங்கக் கடன்கள் மற்றும் சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிதியுதவி உள்ளிட்ட பலதரப்பட்ட, தொழில்நுட்பம் சார்ந்த நிதிச் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. Fitch நிறுவனத்தின் ‘AA– (Stable)’ மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்நிறுவனம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்க நிதிச் சேவைகளை வழங்குவதோடு, இலங்கை முழுவதும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி வலுவூட்டலுக்குப் பங்களிப்பதிலும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

ශ්‍රී ලාංකේය සංචාරක කර්මාන්තයේ සුවිසල්...
LifeServ Celebrates 25 Years of...
JXG, together with The Ceylon...
යුරෝපීය වෙළෙඳපොලෙහි දිගු කාලීනව රැඳී...
TikTok மூலம் கொழும்பின் மறைந்திருக்கும் உணவு...
ඩිජිටල් යුගයේ තාරුණ්‍ය ආරක්ෂා කර...
Samsung இன் Dialog Finance Lesi...
Samsung, Dialog Finance හි පහසු...
ඩිජිටල් යුගයේ තාරුණ්‍ය ආරක්ෂා කර...
Samsung இன் Dialog Finance Lesi...
Samsung, Dialog Finance හි පහසු...
MAS Recognised for Environmental Leadership...