கொழும்பு, திங்கட்கிழமை 09 நவம்பர் 2026: சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா வளாகத்தில் அமைந்துள்ள ‘நுவா’ (Nüwa) சொகுசு ஹோட்டலானது, தனது முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்மஸ் கேக் கலவை நிகழ்வை கோலாகலமாக நடத்தி, இவ்வாண்டிற்கான பண்டிகைக் காலத்தை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது. பாரம்பரிய பண்டிகை நடைமுறைகளையும், நுவா ஹோட்டலுக்கு உரித்தான உயர்தர சொகுசு விருந்தோம்பல் அனுபவத்தையும் ஒன்றிணைத்து இந்நிகழ்வு மிகக் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிறிஸ்மஸ் கேக் தயாரிப்பதற்கான பாரம்பரிய கலவை நிகழ்வுடன், கொக்டெயில் பானங்கள் மற்றும் பண்டிகைக் கால மகிழ்ச்சிப் பகிர்வுகளுடன் இந்த நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது. அத்துடன், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா வளாகத்தில் அமைந்துள்ள நுவா ஹோட்டலில் எதிர்வரும் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி மற்றும் ஒன்றுகூடல்களுக்கான ஒரு சிறப்பான ஆரம்பமாகவும் இது அமைந்தது.

இந்த நிலையில், வரவிருக்கும் பண்டிகைக் காலம் குறித்து நுவா ஹோட்டலின் முகாமையாளர் தக்சில கலப்பதி கருத்து தெரிவிக்கையில், “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் நுவா ஹோட்டலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது, கொண்டாட்டங்கள் முடிந்த பிறகும் எமது விருந்தினர்களின் மனதில் நீண்டகலாம் நிலைத்திருக்கும் தருணங்களை உருவாக்குவதாகும். நுவா ஹோட்டலுக்கே உரித்தான பிரத்தியேக விருந்தோம்பல், கவனமாகத் திட்டமிடப்பட்ட பண்டிகைக் கால அனுபவங்கள் மற்றும் தனித்துவமான உணவுகள் மூலம், மகிழ்ச்சியும் நினைவுகளும் நிறைந்த இந்தப் பண்டிகைக் காலத்தில் எமது விருந்தினர்களை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். எமது இந்த முதலாவது கிறிஸ்மஸ் கேக் கலவை நிகழ்வு என்பது, மிகச் சிறப்பான முறையில் அமையவுள்ள ஒரு பண்டிகைக் காலத்தின் ஆரம்பம் மட்டுமே.” என்று கூறினார்.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கான எதிர்பார்ப்பும், அதற்கான நாட்களும் நெருங்கி வரும் நிலையில், காலத்தால் அழியாத பாரம்பரியங்களும் நவீன ஆடம்பரமும் இணையும் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற, நுவா ஹோட்டல் தனது விருந்தினர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கிறது.



