2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவை JAAF : அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது

Share

Share

Share

Share

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) முன்வைத்த பல பரிந்துரைகள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காகத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏற்றுமதிப் போட்டித்தன்மை, முதலீடுகள் மற்றும் வர்த்தக வசதிகள் மேலும் வலுப்பெறும் எனச் சுட்டிக்காட்டியுள்ள JAAF, ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதன் நன்மைகள் சென்றடையும் வகையில் இம்முன்மொழிவுகளை விரைவாகவும் தெளிவாகவும் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆடைத் துறையானது இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி வருமானம் ஈட்டும் ஒரு வழியாக தொடர்ந்து கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. இது மொத்த ஏற்றுமதி வருமானமான 17.25 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 32% ஆக அமைவதால், இத்துறையிலுள்ள ஏனைய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் எந்தவொரு நடவடிக்கையும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதாகும்.

JAAF வரவேற்றுள்ள முன்மொழிவுகள்,
உயர்த்தப்பட்ட மூலதனக் கொடுப்பனவு: இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) அனுமதி பெற்ற, ஏற்றுமதி உற்பத்திகளில் ஈடுபடும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தால், அந்த முதலீட்டுச் செலவைப் போன்று 200% வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும். நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

வர்த்தக வசதிகளை ஏற்படுத்துதல்: 1,990 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், 2027 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஏற்றுமதியாளர்கள் தேசிய ஒற்றைச் சாளர (National Single Window) முறைமையுடன் இணைக்கப்படுவார்கள். அத்துடன், சுங்கக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல், TIEP செயல்முறையை நவீனமயமாக்குதல் மற்றும் காகிதப் பாவனையற்ற (டிஜிட்டல்) சுங்க அனுமதி முறைமைக்கு மாறுதல் ஆகியனவும் இதில் அடங்கும்.

இறக்குமதிச் செலவுகளைக் குறைத்தல்: 800 பொருள் வகைப்பாட்டுக் குறியீடுகளுக்கு (HS Codes) விதிக்கப்பட்டிருந்த செஸ் (CESS) வரி வீதங்களை 25% ஆல் குறைத்தமையானது, இறக்குமதித் தீர்வைகளைக் கட்டம் கட்டமாகக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு சாதகமான நடவடிக்கையாகும்.

ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளித்தல்: பெறுமதி சேர் வரிக்கு (VAT) புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள், தகுதிபெற்ற ஏற்றுமதியாளர்களாக விரைவாக அங்கீகாரம் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், சட்டபூர்வமான VAT வரி மீளளிப்புகள் மற்றும் உள்ளீட்டு வரி வரவுகள் இழக்கப்படுவதற்குக் காரணமாக அமையும் நிர்வாக ரீதியான நிபந்தனைகளையும் அரசாங்கம் மீளாய்வு செய்யும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மை: 2027 முதல் 2030 வரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் 3,430 மில்லியன் ரூபா பெறுமதியான ‘இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய நிலையான வர்த்தக மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புத் திட்டத்தின்’ மூலம் ஏற்றுமதிப் போட்டித்தன்மைக்கும் நிலையான உற்பத்திக்கும் ஆதரவு கிடைக்கும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) தலைவர் ஃபீலிக்ஸ் பெர்னாண்டோ, “2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏற்றுமதியாளர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வலுவான அடித்தளம் வழங்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நம்பிக்கையை ஏற்படுத்திய போதிலும், அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே உண்மையான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். முதலீட்டாளர்கள் உறுதியான நம்பிக்கையுடன் தமது திட்டங்களை வகுத்துக்கொள்ளும் வகையில், இம்முன்மொழிவுகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம்.” என தொிவித்தார்.

அரசாங்கத்துடன் கலந்துரையாடி பின்வரும் சில விடயங்கள் தொடர்பில் மேலும் தெளிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ள ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) எதிர்பார்க்கிறது.

  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான (SME) முதலீட்டு எல்லை: உயர்த்தப்பட்ட மூலதனக் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 3 மில்லியன் அமெரிக்க டொலர் குறைந்தபட்ச முதலீட்டு எல்லையை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்காகக் குறைக்க முடியுமா என்பது குறித்த தெளிவுபடுத்தல்.
  • செஸ் (CESS) வரி குறைப்புக்கு உட்பட்ட பொருட்கள்: செஸ் வரி குறைக்கப்பட்டுள்ள பொருள் வகைப்பாட்டுக் குறியீடுகள் எவை என்பது குறித்தும், புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் தெளிவுபடுத்தல்.
  • வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளுக்கான VAT நாணய மாற்று வீதம்: வெளிநாட்டு நாணயத்தில் மேற்கொள்ளப்படும் விநியோகங்களுக்கான பெறுமதி சேர் வரியைக் (VAT) கணக்கிடும்போது பயன்படுத்தப்படும் சுட்டிக்காட்டும் நாணய மாற்று வீதம் குறித்த தெளிவுபடுத்தல்.
  • National Single Window முறைமை: ஏற்றுமதியாளர்களுக்காக இம்முறைமை விரிவுபடுத்தப்படும் கால அட்டவணை மற்றும் அதன் எல்லைகள் (இதன் மூலம் உள்ளடக்கப்படும் சேவைகள்) எவை என்பது குறித்த தெளிவுபடுத்தல்.
  • எரிசக்திச் செலவு மற்றும் ஸ்திரத்தன்மை: உற்பத்தித் துறையின் போட்டித்தன்மைக்கு மிகவும் முக்கியமான மின்சாரம் மற்றும் எரிசக்திக் கட்டணங்கள் அத்துடன் தடையற்ற விநியோகத்தைப் பேணுவது தொடர்பான நிலைமை குறித்த தெளிவுபடுத்தல்.
  • தொழிலாளர் சட்டத் திருத்தத்தின் முடிவுகள்: தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபையின் ஊடாக JAAF அமைப்பும் பங்கேற்க எதிர்பார்க்கும், தொழிலாளர் சட்ட மீளாய்வின் இறுதி முடிவு என்ன என்பது குறித்த தெளிவுபடுத்தல்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைக்குத் தொடர்ச்சியாகப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் முக்கியமானது என்பதை மீண்டும் வலியுறுத்தும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம், GSP+ வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் விண்ணப்பச் செயல்முறைக்கு ஒரு தொழிற்துறை என்ற ரீதியில் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே பெற்றுக்கொள்வதை மேலும் விரிவுபடுத்துவதற்கு இத்தொழிற்துறை அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், அதன் மூலம் உற்பத்திகளின் பெறுமதி சேர்ப்பும் விநியோகச் சங்கிலியின் வலிமையும் மேலும் உறுதிப்படுத்தப்படும்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பெர்னாண்டோ, “ஆடைத் தொழிற்துறையானது லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், எமது நாட்டை உலகின் முன்னணி வர்த்தக நாமங்களுடன் இணைக்கிறது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக எமது அதிகபட்ச பங்களிப்பை வழங்க நாம் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

இலங்கையின் ஏற்றுமதித் தொழிற்துறைகளுக்கு நிலையானதும் நம்பகமானதுமான சூழலைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்கும் வகையில், கொள்கை வகுப்பாளர்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் கூட்டு ஆடைத் தொழிற்சாலைகள் மன்றம் (JAAF) தொடர்ந்தும் இணைந்து செயற்படும்.

SLIM தேசிய விற்பனை விருதுகள் விழாவில்...
Interbrand இன் உலகின் சிறந்த வர்த்தக...
TikTok மூலம் கொழும்பு இனிப்புப் பிரியர்களின்...
Colombo Dockyard represents Sri Lanka...
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...
X-Press Pearl கப்பல் தொடர்பான 250...
HNB පළමු මාස 9 තුළ...
අවදානම් කළමනාකරණය සහ අභියෝගවලට ඔරොත්තු...
X-Press Pearl கப்பல் தொடர்பான 250...
HNB පළමු මාස 9 තුළ...
අවදානම් කළමනාකරණය සහ අභියෝගවලට ඔරොත්තු...
First Capital Holdings, சவாலான சந்தைச்...