புதிய கட்டிடத்திற்கு மாற்றமடையும் HNB FINANCEஇன் பண்டாரகம கிளை

Share

Share

Share

Share

ஒருங்கிணைந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வினைத்திறனான சேவைக்கான அதிகரித்துவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வகையில், HNB FINANCE PLCஇன் பண்டாரகம கிளை, இலக்கம் 55, ஹொரண வீதி, பண்டாரகமையில் அமைந்துள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பண்டாரகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும்.
இந்த விசாலமான மத்திய நிலையத்தின் மூலம் லீசிங் வசதிகள், சேமிப்புகள், உட்பட அனைத்து HNB FINANCEஇன் சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையான வைப்புத்தொகைகள், வணிகக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற நிதிச் சேவைகளைத் தவிர, இது தொழில்துறையில் முன்னணி தங்கக் கடன் சேவை வசதிகளையும் வழங்குகிறது.
புதிய பண்டாரகம கிளையின் திறப்பு விழா நிகழ்வில் HNB FINANCE முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் பண்டாரகம கிளையின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
“இந்த நாட்டின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமாக, HNB FINANCE, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு முழுவதும் கிளைகளை இடமாற்றம் செய்து புதிய கிளைகளைத் திறந்து வருகிறது. அதன் மூலம் மிகவும் திறமையான மற்றும் விரிவான சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம். புதிதாகத் திறக்கப்பட்ட இந்தக் கிளையின் மூலம், பண்டாரகம சமூகம் எங்கள் வாடிக்கையாளர் சேவைகளை மிகவும் எளிதாகவும் நம்பிக்கையுடனும் அனுபவிக்க முடியும், மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் சிறந்த நிதிச் சேவை அனுபவத்தை அனுபவிக்க முடியும். HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

Samsung SmartThings ස්වයංක්‍රීය නිවසක අසමසම...
TikTok, සිය පරිශීකයින්ගේ අත්දැකීම ඉහළ...
City of Dreams Sri Lanka...
பயனர்களுக்கான நேர மேலாண்மை மற்றும் நல்வாழ்வு...
3S வசதிகளுடன் கூடிய BYD-இன் ஏழாவது...
Advice Lab forges strategic alliance...
Huawei and Partners Win 3...
2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது...
Advice Lab forges strategic alliance...
Huawei and Partners Win 3...
2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது...
வீட்டு உபகரணங்களை ஒரே இடத்தில் இருந்து...