LankaPay Technnovation விருது வழங்கும் நிகழ்வில் HNB தொடர்ந்து இரண்டாவது தடவையாக விருதினை வென்றுள்ளது

Share

Share

Share

Share

டிஜிட்டல் வங்கியில் அதன் முன்னோடி பணியை மேலும் உறுதிப்படுத்தி வாடிக்கையாளர் நட்பு வங்கியாக, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, அண்மையில் நடைபெற்ற LankaPay Technnovation Awards 2023 நிகழ்வில் உயர்மட்ட தனியார் மற்றும் பொது நிதி நிறுவனங்களுடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்டது.

பாரிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளை உள்ளடக்கிய டிஜிட்டல் தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய முன்முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக, A பிரிவில் வாடிக்கையாளர் வசதிக்காக ஆண்டின் சிறந்த வங்கியாக இந்த வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டது. டிஜிட்டல் தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர் வசதியை வழங்குவதற்கும் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கும் HNB சிறந்த வங்கியாக விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தாக்கமான டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகளின் முன்னோடிகளையும் ஊக்குவிப்பாளர்களையும் அங்கீகரிப்பதற்காக LankaPay ஆல் நடத்தப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இவ்விருது குறித்து கருத்து தெரிவித்த HNB வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் SME வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்சய் விஜேமான்ன, “தொடர்ந்து இரண்டாவது முறையாக Technnovation விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகாரம் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இலங்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக வெற்றியாளர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அனைவரின் முயற்சிகளையும் நாம் பாராட்ட வேண்டும். புத்தாக்கமான டிஜிட்டல் கட்டண தீர்வுகளை ஆதரிப்பதில் எங்களின் முயற்சிகளுக்காக இந்த மதிப்புமிக்க வணிகங்களால் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.” என தெரிவித்தார்.

SLIM DIGIS 2.2 விருது வழங்கும் நிகழ்வில் Best Search Engine Optimisation/Search Engine Marketingக்கான தங்க விருதை வென்றது மற்றும் Asian Digital Finance Forumஇன் சிறந்த IoT முன்முயற்சியாக முடிசூட்டப்பட்ட அனுபவமிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கான வெள்ளி விருதை வென்றது, வங்கியின் அர்ப்பணிப்புத் தயாரிப்பான HNB FIT, அண்மைக்காலபாராட்டுக்களில் அடங்கும். Technnovation விருது வழங்கும் நிகழ்வில் இந்த வெற்றியைப் பெற இது மிகவும் உதவியாக இருந்தது.

இலங்கையில் பணம் செலுத்தும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளை அங்கீகரிக்கும் நோக்கில் LankaPay Technnovation விருது வழங்கும் நிகழ்வு 2017 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Health is Wealth: A Call...
MAS Celebrates Student-Led Sustainability at...
அடிப்படை வங்கி அமைப்பின் நவீனமயமாக்கலுக்காக Kiya.ai...
Eco Go Beyond Awardsஇல் மாணவர்களின்...
MAS, 2024 Eco Go Beyond...
Sampath Bank Partners with COYLE...
நகைச்சுவை முதல் வணிகம் வரை:   ஜெஹான்...
නවීන තාක්ෂණය, ආකර්ෂණීය නිමාව හා...
Sampath Bank Partners with COYLE...
நகைச்சுவை முதல் வணிகம் வரை:   ஜெஹான்...
නවීන තාක්ෂණය, ආකර්ෂණීය නිමාව හා...
අනාගත අලෙවි වෘත්තිකයින් බවට පත්වීමට...