லங்கா அசோக் லேலண்ட் வர்த்தக வாகனங்களைக் கொள்வனவு செய்யவுள்ள வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, நாட்டின் முன்னணி கனரக வர்த்தக வாகன விநியோகஸ்தரான Lanka Ashok Leyland (LAL) உடன் மீண்டும் கைகோர்த்து வாடிக்கையாளர்களுக்கு பல தனித்துவமான நன்மைகள் மற்றும் விதிவிலக்கான வட்டி விகிதங்களை வழங்கியுள்ளது.
DOST டிரக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கூட்டாண்மை மூலம் சிறப்பு லீசிங் தொகுப்புகள் மற்றும் பல மேலதிக நன்மைகளும் வழங்கப்படும்.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த HNB உதவிப் பொது முகாமையாளர் – தனிப்பட்ட நிதிச் சேவைகள், காஞ்சன கருணாகம, “லங்கா அசோக் லேலண்ட் உடனான நீண்டகால உறவைப் புதுப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த இரண்டு வருடங்கள் சவாலானதாக இருந்தாலும், நாடு முழுவதிலும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு வணிகங்களை மீளக் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானதாகும். அந்தவகையில், இலங்கையில் உள்ள முன்னணி வர்த்தக வாகன விநியோகஸ்த நிறுவனத்துடன் நாங்கள் எங்கள் கூட்டாண்மையை புதுப்பித்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வணிகத்தை மேம்படுத்த உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு மூன்று, நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு விசேட வட்டி விகிதங்களுடன் விதிவிலக்கான வட்டி விகிதங்களையும், ஐந்து ஆண்டுகள் வரை 25% எஞ்சிய வீதத்தையும் வழங்குகிறது. HNB General Insurance வாடிக்கையாளர்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியங்களில் கவர்ச்சிகரமான கழிவுகள், விபத்து மரணம் ஏற்பட்டால் ரூ. 4.5 மில்லியன் இலவச ஆயுள் காப்புறுதி மற்றும் ரூ.600,000 இயற்கை மரண காப்புறுதி ஆகியவற்றை வழங்குகிறது.
மேலும், லங்கா அசோக் லேலண்ட் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் HNB Prestige Prime கிரெடிட் கார்டைப் பெறலாம், அங்கு அவர்கள் பல்வேறு கார் தயாரிப்புகள், வாகன உதிரிப்பாகங்களை சரிபார்த்தல் சேவைகள், உதிரி பாகங்கள், டயர்கள் மற்றும் பேட்டரிகள் ஆகியவற்றை நாடு முழுவதும் உள்ள HNBயின் விரிவான விநியோக வலைப்பின்னல் மூலம் சிறப்பு தள்ளுபடியைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த கிரெடிட் கார்டின் முதல் வருடத்திற்கான வருடாந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
லங்கா அசோக் லேலண்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி உமேஷ் கௌதம், “கொவிட்-19 இன் தாக்கம் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஆகியவை போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்தனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் எங்களது வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பாக நின்று அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதன் மூலம் பெருநிறுவன துறைக்கு முன்மாதிரியாக இருப்போம் என்று நம்புகிறோம். எனவே இலங்கையின் மிகவும் மரியாதைக்குரிய வங்கிகளில் ஒன்றான எங்களுடைய கூட்டாண்மையை புதுப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர் தளத்திற்கான எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.” என தெரிவித்தார்.