HNBஇன் 800வது ஸ்மார்ட் சுயசேவை இயந்திரத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைக்கிறது

Share

Share

Share

Share

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைந்துள்ள டிஜிட்டல் வங்கி வலயத்தில் பண மீள்சுழற்சி இயந்திரத்தை (Cash Recycle Machine – CRM) HNB அண்மையில் திறந்து வைத்தது.
CRM ஆனது HNB இன் 800வது சுயசேவை இயந்திரமாக (Self Service Machine -SSM) HNB இன் சேவை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்த மேம்பட்ட வசதி வளாகத்தில் பணிபுரியும் ஏராளமான பணியாளர்களுக்கு, பணம் மீள எடுப்பது, வைப்பு செய்வது, நிகழ்நேர நிதிப் பரிமாற்றங்கள், கிரெடிட் கார்டு செட்டில்மென்ட்கள், கையடக்க தொலைபேசி ஊடாக பணப் பறிமாற்றம், மொபைல் ரீலோட்கள், மற்றும் பிற கட்டண செலுத்தல்கள் போன்ற சுய-வங்கித் தேவைகளுக்கு வசதியான சேவையை வழங்கும்.
இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், HNBஇன் டிஜிட்டல் வங்கிச் சேவையின் சிரேஷ்ட முகாமையாளர் சக்ஷிக அமரவர்தன, HNB சிரேஷ்ட முகாமையாளர்- ஊழியர் வங்கி, பியகர ஜயரத்ன, HNB முகாமையாளர் பத்தரமுல்ல வாடிக்கையாளர் மையம், தினெத் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் 254 வாடிக்கையாளர் மத்திய நிலையங்கள் மற்றும் 800+ சுயசேவை இயந்திரங்களுடன் (SSM), HNB இலங்கையின் மிகப்பெரிய, மிகவும் தொழில்நுட்ப ரீதியாக புத்தாக்கமான தனியார் வங்கிகளில் ஒன்றாகும். பேண்தகைமை, நல்லாட்சி மற்றும் கூட்டாண்மைச் சிறப்புடன் தனது பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து, இலங்கை வர்த்தக சம்மேளன சிறந்த பெரு நிறுவன பிரஜை விருது வழங்கும் நிகழ்வில் HNB 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கூட்டாண்மை குடிமகனாக முடிசூட்டப்பட்டது. சிறந்த 10 பெருநிறுவன குடிமக்கள் பட்டியலில் இடம்பிடித்து, ஆளுமைப் பிரிவு மற்றும் நிதித் துறை விருதுகளுக்கான நிலைத்தன்மை சாம்பியன் ஆகிய நான்கு மேலதிக கௌவப்படுத்தல்களையும் வங்கி பெற்றுள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற வங்கியாளர் சஞ்சிகையால் தொகுக்கப்பட்ட உலகின் தலைசிறந்த 1,000 வங்கிகளின் பட்டியலில் HNB இடம் பெற்றது, Asian Banker இதழால் நடத்தப்பட்டது வாடிக்கையாளர் நிதிச் சேவைகள் விருதுகள் 2023 இல் 13வது முறையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக கௌரவமான சர்வதேச விருதினையும் வங்கி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் சிறந்த வளர்ந்துவரும் Podcast விருதை...
2026 FIFA உலகக் கிண்ணத்தின் முதல்...
2026 FIFA ලෝක කුසලාන තරඟාවලිය...
From Exam Tips to Career...
S&P Sri Lanka சுட்டெண்ணில் இணையும்...
HNB, විශ්වාසය, නායකත්වය සහ නවෝත්පාදන...
TikTok releases Q3 2025 Community...
Softlogic Life Ignites the Resilient...
HNB, විශ්වාසය, නායකත්වය සහ නවෝත්පාදන...
TikTok releases Q3 2025 Community...
Softlogic Life Ignites the Resilient...
TikTok to bring FIFA World...