LPL கிரிக்கெட் போட்டித் தொடருக்குத் தெரிவான Airtel Fastestகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் Airtel Sri Lanka

Share

Share

Share

Share

இளைஞர்களால் மிகவும் விரும்பத்தக்க தொலைத்தொடர்பு நிறுவனமான எயார்டெல் ஸ்ரீலங்கா, லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட Airtel Fastest போட்டியின் இறுதிப் போட்டியில் தெரிவான வீரர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Airtel Fastest போட்டியில் தனது தனித்துவமான Sling-Bowling Actionஆல் ஒட்டுமொத்த வெற்றியாளராக தெரிவான Eshan Malinga மற்றும் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவான Rathnaraja Thenurathan ஆகிய இருவரும் முறையே Colombo Strikers மற்றும் Jaffna Kings அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்டனர்.

Airtel Sri Lanka’s Fastest ஆனது 2019 பெப்ரவரியில் ஆரம்பமானது, ஆரம்ப தேர்வுக்கு நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் இருந்து 10,000 பங்கேற்பாளர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். 145 பந்து வீச்சாளர்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுடன், இந்த வேகப்பந்து வீச்சாளர்களின் முழு திறனையும் வெளிப்படுத்த 360 பாகை அணுகுமுறையை வலியுறுத்தும் அதே வேளையில் போட்டி அதன் வெவ்வேறு நிலைகளில் முன்னேறியது.

அவர்களின் உடற்தகுதி, On-site Trainings மற்றும் விதிமுறைகளுக்கான அமர்வுகள் வரை, வேகப்பந்து வீச்சாளர்கள் Airtel’s Superstar பயிற்சியாளர் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், Anusha Samaranayake, புகழ்பெற்ற Death Bowling Sensation, லசித் மாலிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் போட்டியில் முன்னேறினர். இந்த குழுவில் மாலிங்க, இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர்களான சமிந்த வாஸ், ஹஷான் திலக்கரத்ன மற்றும் உபுல் சந்தன ஆகியோர் அடங்குகின்றனர்.

“நாங்கள் 2019 ஆம் ஆண்டு Airtel Fastest ஐ அறிமுகப்படுத்தியபோது, இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சு திறமையை வெளிக்கொணரவும், அதனை வெளிப்படுத்தவும் மற்றும் மேம்படுத்தவும் ஒரு தேசிய தளத்தை உருவாக்குவதன் மூலம், இந்த பணியை ஒரு படி மேலே கொண்டு செல்ல விரும்பினோம். அப்போதிருந்து, எங்கள் போட்டியாளர்கள் உள்நாட்டிலும் உலக அளவிலும் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நாங்கள் பெருமையுடன் அவதானித்து வருகிறோம். Eshan மற்றும் Thenuruthan இருவருக்குமே எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.” என Airtel Lanka CEO/MD, அஷிஷ் சந்திரா தெரிவித்தார்.

Eshan மற்றும் Thenuruthan தவிர, Airtel Fastest போட்டியின் மேலும் இரண்டு பழைய வீரர்கள் இதற்கு முன்பு முன்னிலை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. இதில் ‘Airtel Sri Lanka’s Fastest’ பெண் பகிரங்க பிரிவு வெற்றியாளரும், Sling-Bowling வீராங்கனையுமான ஷயானி சேனாரத்ன ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) வளர்ந்து வரும் அணியிலிருந்து ஆசிய கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

About Airtel:

இலங்கையில் அதன் வர்த்தக நடவடிக்கைகளை எயர்டெல் லங்கா 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அத்துடன் மிக வேகமாக 1 மில்லியன் வாடிக்கையாளர்களை தமது வலையமைப்பிற்குள் கொண்டு வந்த அதிவேக செயற்பாட்டாளராக காணப்படுகின்றது. இலங்கையில் முதலீட்டுச் சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள எயார்டெல், நாடு முழுவதும் உலகத் தரம் வாய்ந்த மொபைல் பிராட்பேண்ட் அனுபவங்களை வழங்குவதற்காக அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் 5ஜி-தயாரான வலையமைப்பை மேம்படுத்தி மேம்படுத்தப்பட்ட 4ஜி அனுபவத்தை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளது.

 

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...