வறுமை ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வுக் கருத்தரங்கானது பொருளாதார நெருக்கடியினை எதிகொள்ளும் சந்தர்பத்தினில் வறுமை ஒழிபிற்கான உபாயமுறைகளைப் பற்றி ஆராய்கின்றது

Share

Share

Share

Share

வறுமை ஆராய்ச்சி நிலையமானது, “பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில் வறுமை ஒழிப்பு” எனும் தலைப்பின் கீழ் ஆய்வுக்கருத்தரங்கு ஒன்றினை நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தினில் (BMICH) இல்  வறுமை ஆராய்ச்சி நிலையத்தினால் (CEPA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் துறைசார் நிபுணர்கள், தொழில் விற்பனர்கள் மற்றும் பலதரப்பு ஆர்வலர்கள் அனைவரும்  இலங்கையின் வறுமை தொடர்பான மிகமுக்கிய பலதரப்பட்ட  விடையங்களினை  அலசி ஆராயும் நோக்கோடு ஒன்று கூடவுள்ளார்.

1990 ம் ஆண்டுகளில் இருந்து வறுமைக் குறைப்பு தொடர்பாக இலங்கையானது  குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது. 1990 களில் 26.1% ஆக இருந்த வறுமை நிலையானது, 2016 க்குள் சுமார் 4% ஆகக் குறைந்தது எனக்கூறலாம்.  என்றபோதிலும், COVID-19 பெரும் தொற்றினைத் தொடர்ந்து எமது  பொருளாதாரமானது ஓர் பாரிய வீழ்ச்சிக்கு முகம் கொடுத்தது. இதன் விளைவாக எம் நாட்டின் வறுமை நிலையானது 26% ஆக அதிகரித்தது.

இவ்வியத்தகு மாற்றத்தினைத் தூண்டும் அடிப்படைக் காரணிகள் மிகச்சிக்கலானவை என்பதோடு  பன்முகத்தன்மை கொண்டவையுமாகும் . இவ்வழுத்தமான சிக்கலினைத் தீர்க்க, வறுமைக் குறைப்புக்கு பங்களித்த கொள்கைகள் மற்றும் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை CEPA  ஆனது இனங் கண்டுகொள்கின்றது மற்றும்  முன்னேற்றங்கள், அபிவிருத்திகள்  என்பன  தலைகீழாக மாறுவதற்கு காரணம் என்ன  என்பதனைக் கண்டறிகின்றது.  இப்புரிதலானது  எதிர்காலத்தில் வறுமையினைச்  சமாளிக்க பயனுள்ள வெற்றிகாண் செயல்திட்டங்களினை வகுப்பதில் இது  ஒரு முக்கிய முதல் படியாகும்.

இவ்வாய்வுக் கருதரங்கானது ஒன்றுடன் ஒன்று பூர்த்தி செய்யும் இரு கூறுகளைக் கொண்ட ஒரு அணுகுமுறையினைப் பின்பற்றும் வகையினில் “பின்நோக்கிய மீளாய்வு ” மற்றும் ” எதிர்கால அபிவிருத்தியினை நோக்கியவை.”  எனும் தொனிப்பொருளில் எமது புரிதலினை விரிவுபடுத்துவதோடு  காலப்போக்கில் வறுமை தொடர்பான பிரச்சினைகளை மதிப்பாய்வு செய்து அவை தொடர்பான  அளவீடுகளுக்குக்  கவனம் செலுத்தி   தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் அதற்கு அப்பாலும் சென்று  வறுமை நிலையினை  நிவர்த்தி செய்தலுமாகும். 29ஆம் திகதி நடைபெறவுள்ள இவ் அங்குரார்ப்பண நிகழ்வினில்       முக்கிய உரைகளை முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிராந்தியங்கள் தொடர்பான பொருளாதார நிபுணரான கலாநிதி ராணா ஹசன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.  இவ்வாய்வுக் கருதரங்கின்  முக்கிய விளைவாக  எதிர்கால வறுமைக் குறைப்பு மற்றும்  கடந்த கால வெற்றிகரமான அணுகுமுறைகளில் மிகப் பொருத்தமானவற்றினை மதிப்பீடு செய்வதாகும்.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில்  வறுமையினை  நிவர்த்தி செய்வது என்பது  பாரிய   தனித்துவமான பல  சவால்களினை  முன்வைக்கின்றது. பருவின / விரிநிலைப் பொருளாதார  (Macroeconomic) தொடர்பான சவால்கள், வறுமை மற்றும் சமத்துவமின்மை மீதான அவற்றின் விளைவுகள் பற்றிய தொடர்ச்சியான காலத்துக்கு ஏற்ற புத்தம் புது பேச்சுமேடை தளம் என்பன இவ் ஆய்வுக் கருதரங்கினில் முக்கிய கவனம் செலுத்தப்படவிருக்கின்றன.  நிலையான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சர்வதேசிய நாணய நிதியத்தின்  ( IMF) உறுதிப்படுத்தல் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் என்பனவற்றினை எடுத்துக்காட்டுவது இதன் சிறப்பம்சமாகும். பொருளாதார நிலைப்படுத்தலானது முக்கியமானதென்ற போதிலும், அது மட்டுமே போதுமானதாகாது. வறுமையினைக்  குறைப்பதற்கான சூழ்நிலையினை  உருவாக்குவதில் பொருளாதார வளர்ச்சியானது முக்கிய பங்கு வகிக்கின்றது. பொருளாதார சீர்திருத்தங்கள், உறுதிப்படுத்தல் கொள்கைகளுக்கு அப்பால், ஏழைகளை நியாயமற்ற விதத்தினில் பாதிக்கக் கூடும் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, இப்பாதிப்புகளினைக் குறைத்துக்கொள்ள பல  துணைக்  கொள்கைகளும்  அவசியமாகும்.

இவ்வாய்வுக் கருதரங்கில் இடம்பெற விருக்கும்  கருத்தாடல்கள்  கடந்த கால, நிகழ்கால மற்றும் சர்வதேச ரீதியிலான கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து பருவின / விரிநிலைப் பொருளாதார (Macroeconomic)   சவால்களை எமது பட்டறிவுடன் / அனுபவங்களுடன் இணைத்துக்கொண்டு பின்வரும் முக்கிய அமர்வுகளில் கருத்தாடல்கள் மேற்கொள்ள நோக்காகக் கொண்டுள்ளது:

  1. இலங்கையில் வறுமைக் குறைப்பிற்கான கடந்தகாலதில் பின்பற்றப்பட்ட கொள்கைகள்.
  2. கடந்தகால அனுபவங்களிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நிலைமைக்குத் தக்கபடி பொருத்தமாக்கிக் கொள்ளும் தன்மையும்.
  3. 3. நெருக்கடிகளுக்கான தனியான மற்றும் விசேடமாக தயார்படுத்தப்பட்ட வறுமை தொடர்பான அளவீடுகள்.
  4. ஊதிய வறுமைக்கு அப்பாற்பட்ட காரணிகள் தொடர்பாக கவனம் செலுத்துதல்.

5.நெருக்கடிகளுக்குப் பிந்தைய வறுமைக் குறைப்பை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி.

  1. வறுமை தொடர்பான மோசமான ஆளுகை ஏற்பட்ட தாக்கவிளைவுகள்.
  2. மற்றைய நாடுகளின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளல்.

இந்த இரு   முக்கியமான நாட்களிலும், நன்மதிப்பிற்குரிய பேச்சாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் “BMICH” இல் ஒன்று கூடி, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்  இலங்கையில் வறுமை ஒழிப்பைச் சுற்றியுள்ள மிக முக்கிய கருப்பொருட்கள் தொடர்பாக  விவாதிக்க இருக்கின்றனர். இலங்கையின் பருவின / விரிநிலைப் பொருளாதார (Macroeconomic) தொடர்பான  தாக்கங்கள் மற்றும் அபிவிருத்திப் பாதை தொடர்பாகவும் ஆய்வினை மேற்கொள்ளும் ஓர் அமர்வாக முதல் நாள் ஆனது அமையப்போகின்றது. கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் கலாநிதி ராணா ஹசன் போன்ற புகழ்பெற்ற பிரமுகர்களினால்   இலங்கையின் பொருளாதாரச்  சூழல் தொடர்பாக  கலந்துரையாடல்களின் போது  விசேட கவனம் செலுத்தப்படவிருக்கின்றது. அத்தோடு இலங்கை வாழ் இளைஞர்களின் அபிவிருத்தி தொடர்பாகத் தொகுக்கப்பட்ட ஆவணப்படமும்  திரையிடப்படவிருக்கின்றது. மேலும் குழுக்களாகப்  பிரிக்கப்பட்டு,  வறுமை தொடர்பான  பின்நோக்கிய மீளாய்வு, நிகழ்கால  போக்குகள் தொடர்பான  பகுப்பாய்வு   மற்றும் விரிவான சமூகப்  பாதுகாப்புத் தொடர்பான வினைத்திறன் மிக்க செயல்திட்டங்களினை முன்வைத்தல்,  அதே நேரத்தில், நெருக்கடிகளின் போது பெண்ணியல்வாத அணுகுமுறைகள்,  விவசாயம்  தொடர்பான உருநிலை மாற்றத் திட்டங்கள், அதோடுகூட  சிறிய  மற்றும் நடுத்தர தொழில் முயற்சியான்மைகளின்(SMEs) நிலைத்தன்மை தொடர்பான மூலோபாயங்கள் என்பன இங்கு பேசுபொருளாக அமையப்போகின்றன. பின்னர், பல்வேறு சூழல்களில் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்தான ஆழமான விவாதமானது மேற்கொள்ளப்படும்.  அபிவிருத்திக்  கற்கைகளுக்கான  நிறுவனத்தின் நிபுணர்களின்  சர்வதேசிய  ரீதியான கண்ணோட்டத்துடன்  வறுமை பற்றிய பார்வையினைக் கொண்ட பல்வேறு நிபுணர்களின் நுட்பநோக்குகளை கொண்ட  ஒரு பகுதியும் இங்கு  நோக்கப்படுகிறது.

இரண்டாம் நாளிலும் கூட அதே உத்வேகத்தோடு நிகழ்ச்சியானது தொடரவிருக்கின்றது. வறுமையின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை  இலக்காகக் கொண்ட அரசாங்க முன்முயற்சிகள் குறித்தான கருத்தரங்கில்  தனது  சொற்பொழிவினை  விரிவுபடுத்தும்போது . திரு. ஆர்.எச்.டபிள்யூ. அனுராத குமாரசிறி அரசாங்க வினைமுறை செயல்திட்டம் தொடர்பான  கலந்துரையாடல்களை முன்னெடுப்பார். கலாநிதி ஹேரத் குணதிலக்க, பேராசிரியர் ஹேமசிறி கொட்டகம மற்றும் கலாநிதி ரஞ்சித் புண்யவர்தன போன்ற நிபுணர்கள் தமது பெறுமதிமிக்க  நுட்பநோக்குகளை வழங்குவதன் மூலம், பொருளாதார நெருக்கடிகள், வறுமை மற்றும் பாதிப்பு என்பனவற்றுடன்  பின்னிப்பிணைந்த காரணிகளைப் வகையறுத்துக் காட்டவுள்ளனர். உரையாடலின் பின்னர் வறுமைக் குறைப்பு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு தொடர்பாகவே அமைந்திருக்கும். நிகழ்வின் முடிவில், கருத்தரங்கினில் பங்கு பற்றிய அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் ஒருங்கிணைந்த அறிவு நுட்பத்தினை பெறுவது என்பது  எதிர்காலத்திற்கான வளமான வாய்ப்புகளினை  கற்பனை செய்து பார்க்க  முடியும். இரண்டு நாட்களின் போதும் இக்கருத்தரங்கானது நுணுக்கமான விவாதங்களுக்கு ஊக்கியாக அமையும் என்பது நிச்சயம். இலங்கையில் வலுவான வறுமை ஒழிப்பு வினைமுறை செயல்திட்டங்களினை நோக்கிய கூட்டுத் தொலைநோக்குப்  பார்வையினை விருத்திசெய்யும்.

“பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில் வறுமை ஒழிப்பு”    எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கானது நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு “BMICH” இல் நடைபெறவுள்ளது, தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் அதற்கு அப்பாலும் வறுமையினைக் கையாள்வதற்கான ஆழமான மற்றும் விரிவான கலந்துரையாடல்கள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளுக்கான ஒரு அரங்கை வழங்குவதாக உறுதியளிக்கின்றது. இந்நிகழ்விலிருந்து உருவாக்கப்படும் நுட்பநோக்குகள்  மற்றும் பரிந்துரைகள் இலங்கையில் வறுமை ஒழிப்புக்கான பயனுள்ள வினைமுறைச்  செயல்திட்டங்களினை  வடிவமைக்கும் ஆற்றலினைக்  கொண்டுள்ளன.

Softlogic Life to introduce AI...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய...
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා...
JAAF supports ‘Clean Sri Lanka’...
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய...
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා...
JAAF supports ‘Clean Sri Lanka’...
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை...