2023 SLIM National Sales விருது வழங்கும் நிகழ்வில் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் விற்பனை சாம்பியன்களுக்கு விருது

Share

Share

Share

Share

2023 SLIM National Sales Awards (NSA) நிகழ்வில் 02 தங்க விருதுகள், 06 வெள்ளி விருதுகள், 04 வெண்கல விருதுகள் மற்றும் 01 மெரிட் விருதுகளை வென்றதன் மூலம், இலங்கையில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுவான Sunshine Holdings, தனது விற்பனைக் குழுக்களின் 13 உறுப்பினர்களை அண்மையில் அங்கீகரித்துள்ளது.

குறிப்பாக போட்டி நிறைந்த இந்த வணிகச் சூழலில், விற்பனை செயல்முறை மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் எந்தவொரு வணிகத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இது முற்றிலும் முக்கியமானது. தயாரிப்புகளுக்கும் நுவர்வோர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்தும் பாலமாக அவை செயல்படுகின்றதுடன், இலச்சினைத் தூதுவர்கள் வாடிக்கையாளர் உறவுகளின் பாதுகாவலர்களாகவும் வணிகங்களின் வளர்ச்சி இயக்கிகளாகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில், விற்பனைக் குழுக்களின் விதிவிலக்கான முயற்சிகள் கடுமையான பொருளாதாரப் நிலைமைகளுக்கு மத்தியிலும் இலங்கை நிறுவனங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கு உதவியுள்ளன.

இத்தகைய சூழல் Sunshine Consumer Lanka மற்றும் Sunshine Healthcare Lanka (மருந்தகம் மற்றும் மருத்துவ சாதனங்கள்) விற்பனைக் குழுக்களின் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைத்து செயற்படும் தன்மைக்கு ஒரு சான்றாகும். மேலும், ஒவ்வொரு உறுப்பினரின் ஆர்வம், தைரியம் மற்றும் விடாமுயற்சி ஆகியவை கடுமையான போட்டி மற்றும் மாறிவரும் சந்தை நிலைமைகளில் விற்பனையை அதிகரிக்க விதிவிலக்கான செயல்திறனை உறுதி செய்துள்ளது.

“சன்ஷைன் ஹோல்டிங்ஸில் உள்ள எங்கள் விற்பனைப் பிரிவின் சிறப்பான தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், அதன் அர்ப்பணிப்பு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மையானது 2023 SLIM விருது வழங்கும் நிகழ்வில் பெற்ற விருதுகளில் பிரதிபலிக்கிறது. சவாலான மேக்ரோ பொருளாதார நிலைமைகளுக்கு முகங்கொடுத்து, Sunshine Consumer Lanka மற்றும் Sunshine Healthcare Lankaவில் உள்ள எமது விற்பனைக் குழுக்கள் நிறுவன ரீதியான இலக்குகளை அடைவதில் இணையற்ற ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளன.” என இந்த சாதனைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி தெரிவித்தார்.

“இந்த விருதுகள் தனிப்பட்ட சிறப்பை அங்கீகரிப்பதுடன், எங்கள் வணிகங்களை முன்னோக்கி செலுத்தும் கூட்டு வலிமையை எடுத்துக்காட்டுகின்றன. இந்த அங்கீகாரம் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சன்ஷைன் ஹோல்டிங்ஸின் வெற்றிக்காகவும் பங்களிப்பிற்காகவும் எங்கள் விற்பனைக் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என கோவிந்தசாமி மேலும் கூறினார்.

விண்ணப்பதாரர்கள் மதிப்பிற்குரிய நடுவர்கள் குழுவால் தீர்ப்பளிக்கப்பட்டதுடன், மாறிவரும் சந்தைப் போக்குகள், இலக்குகளை அடைய செயல்படுத்தப்படும் மூலோபாயங்கள், புத்தாக்கமான மூலோபாயங்கள், விற்பனைத் துறையில் வளரும் திறன் மற்றும் சந்தையை வெல்லும் திறன் ஆகியவற்றில் வணிகத்தை நிர்வகிக்கும் அவர்களின் திறனை அவர்கள் மதிப்பீடு செய்தனர். முன்னணி வரிசை பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் அவர்களின் செயல்திறன் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் முன்னேறும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டனர். பிரதேச முகாமையாளர்கள் விற்பனை வருவாயை அதிகரிப்பது, சந்தை அணுகலை அதிகரிப்பது மற்றும் ஒதுக்கப்பட்ட பிராந்தியங்களுக்குள் மற்ற முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் ஆகியவற்றில் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள். பிராந்திய விற்பனை முகாமையாளர்கள் ஒட்டுமொத்த வணிக நோக்கங்களைச் சந்திக்கும் போது சந்தைக்குச் செல்லும் மூலோபாயங்களுக்குள் பிராண்ட் மற்றும் வகை உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து 21 வருடங்களாக, SLIM National Sales Awards விற்பனைத் துறையின் வளர்ச்சியில் தனித்துவமான பங்கைக் கொண்ட முன்னணி விற்பனையாளர்களை அங்கீகரித்துள்ளன. சர்வதேச தரத்திற்கு ஏற்ப விற்பனை நிபுணர்களை அங்கீகரிப்பதும், தெற்காசியாவில் சிறந்த மதிப்பீட்டு செயல்முறையாக விருதுகளை நிறுவுவதும் இதன் நோக்கமாகும். இந்த நிகழ்வின் மூலம், 20க்கும் மேற்பட்ட தொழில்களில் அதிக சாதனை படைத்தவர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் அவர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.

 

Sampath Bank and NCE Empower...
TikTok 2025 දෙවන කාර්තුවේ ප්‍රජා...
Coca-Cola-வின் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும்...
Sri Lanka’s Corporate Professionals Stir...
Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான...
RIUNIT to Promote Sri Lanka’s...
JAAF statement on Apparel export...
TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான...
RIUNIT to Promote Sri Lanka’s...
JAAF statement on Apparel export...
TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான...
China Mobile Shandong and Huawei...