இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC தனது நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களின் நிதி அறிவை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்திய “அபிவிருத்திக்கான நிதி கல்வியறிவு” திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தை குறிக்கும் வகையில் இந்த வருடத்தின் முதல் இரண்டு நிகழ்ச்சிகள் அண்மையில் அம்பலாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்றன. HNB Finance இன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் கடந்த சில வருடங்களாக தீவின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களின் நிதி அறிவை மேம்படுத்த முடிந்தது.
HNB FINANCEஇன் திறன் அபிவிருத்தித் துறைத் தலைவர் அனுர உடவத்த இந்தத் தொடரின் நிதிய கல்வியறிவு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். இங்கு, நுண் மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு வணிகக் கணக்குகளை பராமரித்தல், கடன் நிர்வகிப்பு, இலாபத்தில் ஒரு பகுதியை மறு முதலீடு செய்தல், வணிகத்தின் செலவு நிர்வகிப்பு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளைத் தேடுதல் ஆகிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. HNB FINANCE இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தொழில்முனைவோரிடமிருந்து மிகவும் ஆக்கப்பூர்வமான 10 யோசனைகளைத் தேர்ந்தெடுத்து அந்த யோசனைகளுக்கு பரிசுகளை வழங்கியது. இதுதவிர, இந்நிறுவனம் உருவாக்கிய “வளர்ச்சிக்கான நிதி அறிவு” கையேடு இங்கு வந்த அனைத்து தொழில்முனைவோருக்கும் வழங்கப்பட்டது.
HNB FINANCE நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறுகையில், “நிதி கல்வியறிவு என்பது எந்தவொரு வணிகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும். நிதி அறிவு இல்லாமல் வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. இந்நிலையைப் புரிந்துகொண்டு, கடந்த சில ஆண்டுகளாக நுண் மற்றும் சிறு வணிக சமூகத்தின் நிதி அறிவை அதிகரிக்க அதிக பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தின் முதல் கட்டம் முதல் தற்போது வரை, தொழில்முனைவோருக்கு நிதி அறிவை வழங்க முடிந்துள்ளது.” என தெரிவித்தார்.