இலங்கை போக்குவரத்தில் ஒரு தனித்துவமான திருப்புமுனை: JKCG Auto நிறுவனம் EV Motor Show 2024இல் BYDஐ அறிமுகம் செய்கிறது

Share

Share

Share

Share

• BYD புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துகிறது – BYD DOLPHIN, BYD ATTO 3, BYD SEAL.

• BYD மிக விரைவில் இலங்கையில் BYD DM-i வாகனமான BYD SEALION 6, BYD DM-i தொழில்நுட்பம் (BYD Super Plug-in Hybrid EV Technology) பொருத்தப்பட்ட முதல் மாதிரியை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

• நாடு முழுவதும் விரிவான காட்சியறை வலையமைப்பை அமைக்கும் முகமாக முதல் காட்சியறை விரைவில் அமைக்கப்படவுள்ளது.

• வாகன உரிமையாளர்களின் சார்ஜிங் (Charging) கவலையை போக்க போதுமான Charging வலையமைப்பு.

உலகின் முன்னணி NEVகள் (புதிய மின்சார வாகனங்கள்) உற்பத்தியாளர், BYD, அதன் பயணிகள் வாகன அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மூலம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் மிகப் பெரிய கூட்டு நிறுவனமான (CSE) John Keells Holding PLC (JKH) மற்றும் CG Auto Pte. Ltd., டுபாயை தலைமையிடமாகக் கொண்ட CG Corp Global இன் துணை நிறுவனம், BYD மின்சார வாகனங்களான BYD NEVகளை உத்தியோகபூர்வமாக இலங்கையில் EV மோட்டார் ஷோ 2024 இல் வெளியிட்டது, இது போக்குவரத்து தொழில்நுட்பத்தின் ஒரு புரட்சிகரமான மைல்கல்.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை BMICH இல் நடைபெற்ற கண்காட்சிக்கான பிரதம அதிதியாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் BYD NEVகளை பொதுமக்களுக்கு வெளியிட்டார். இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு பந்தய வீரர் டிலந்த மாலகமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்ட புதிய மின்சார வாகனங்களில் BYD புதிய மின்சார வாகனங்களான luxury sedan, BYD SEAL அடங்கும். அதன் நேர்த்தியான வடிவமைப்பு, 650 கிமீ வரையிலான அதி நீண்ட தூரம் மற்றும் 0-100 கிமீ/மணி முதல் 3.8 வினாடிகள் அக்ஸ்ரலேஷன் , BYD ATTO 3 ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. BYD ATTO 3, ஒரு பல்துறை மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற SUV, அதன் விசாலமான உட்புறம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் BYD DOLPHIN உடன் இணைந்து 480 கிமீ வரை வரம்பிற்கு தனித்து நிற்கிறது மற்றும் செயல்திறன், 410 கிமீ வரையிலான வரம்பையும், 7.9 வினாடிகள் 0-100 கிமீ/மணியிலிருந்து வேகமான அக்ஸ்ரலேஷன் நேரத்தையும் வழங்குகிறது.

BYD விரைவில் இலங்கையில் BYD DM-i தொழில்நுட்பம் (BYD Super Plug-in Hybrid EV Technology) கொண்ட முதல் மாதிரியான BYD SEALION 6 DM-i வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநேர வரம்பு (Driving Range) 1,100Km வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை புதிய மின்சார வாகனங்களுக்கான மையமாக மாற்றுவதற்கான அதன் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில், JKCG Auto BYD மின்சார (EV) வாகனங்களின் ஆர்வலர்களுக்காக கொழும்பில் ஒரு அதிநவீன காட்சியறையை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும். இந்த காட்சியறை, அதிநவீன மின்சார (EV) வாகனங்களின் தொழில்நுட்ப, அம்சங்கள் மற்றும் நன்மைகளை காட்சிப்படுத்துவதுடன் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.

மேலும், உள்ளூர் திறமைகளை மேம்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் புதிய மின்சார வாகனங்களுக்கான (NEVs) பிரத்யேக மையத்தை உருவாக்குவதற்கும் BYD செயல்படுகின்றது. இந்த நோக்கத்திற்காக, BYD ஆனது EVகளுக்கான இலங்கையின் முதல் அதிநவீன சேவை நிலையத்திற்கான முதல் தொகுதிக்கு பயிற்சிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. சர்வதேச தரத்தை பூர்த்தி செய்ய உள்ளூர் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு இது ஒரு முன்னோடியாக அமைகிறது.

அத்துடன், நாடு முழுவதும் விரிவான EV Charging வலையமைப்பை நிறுவுவதற்கு JKH இன் பரந்த அளவிலான வளங்களைப் பயன்படுத்தி இலங்கையில் நிலையான போக்குவரத்து உட்கட்டமைப்பு அமைப்பை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை JKCG Auto வலுப்படுத்தியது. வேகமாக Charge செய்யும் வசதிகள் கொண்ட நிலையங்களை அமைக்கும் நடவடிக்கை அடுத்த சில மாதங்களில் நிறைவடையவுள்ளது. இதன் மூலம், EV வாகனங்கள் மூன்று மடங்கு வேகமாக சார்ஜ் செய்யும் திறனைப் பெறும், இது சந்தேகத்திற்கு இடமின்றி EV உரிமையாளர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

JKCG தொடர்பில்

John Keells CG Auto Private Limited (JKCG) என்பது John Keells Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 2023 இல் வாகனத் துறையில் பிரவேசித்தது, JKCG Auto இலங்கையில் BYD பயணிகள் வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் சேவைகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். புதிய மின்சார வாகனங்களில் (NEV) வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், NEVகளுக்கான புதிய தரநிலைகளை அமைப்பதற்கும் மற்றும் இலங்கையில் EVகளுக்கான உள்கட்டமைப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

JKH தொடர்பில்

JKH, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய குழும நிறுவனமாவதோடு, 7 வேறுபட்ட தொழில் ரீதியான துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 14,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோடு, LMD பத்திரிகையால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என்ற தரவரிசையில் இடம்பெற்று வருகிறது. வெளிப்படைத் தன்மைக்கான சர்வதேச இலங்கை நிறுவனத்தின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டின் வெளிப்படைத் தன்மை’ மதிப்பீட்டில் ஜோன் கீல்ஸ் தொடர்ச்சியாக நான்காம் ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகள் சபை உலக ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருப்பதுடன், ஜோன் கீல்ஸ் ஆனது தனது சமூக நல குறிக்கோளான “நாளைக்கான தேசத்தை வலுப்படுத்துதல்” – என்பதை அதன் சமூக சேவை மூலம் அடைய எத்தணித்து வருகின்றது. ஜோன் கீல்ஸ் குழுமத்தினால் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதற்கு ‘பிளாஸ்டிக் சைக்கிள்’ மூலம் செயல்படுகின்றது.

BYD தொடர்பில்

BYD என்பது ஒரு பல்தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய பேட்டரி தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD, தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளை கொண்டுள்ளது. BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் சேமிப்பகம் முதல் அதன் பயன்பாடுகள் வரை, zero-emission energy solutions வழங்குவதற்கு BYD அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. அதன் புதிய மின்சாரவாகனமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.bydglobal.com ஐ பார்வையிடவும்.

CG Corp Global தொடர்பில்

140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட CG Corp Global என்பது சிங்கப்பூரில் உள்ள குளோபல் எலெக்ட்ரிக் மொபிலிட்டி தலைமையகத்துடன் டுபாயில் உள்ள ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமாகும். இன்று, இந்நிறுவனம் நேபாளத்தின் மிகப்பெரிய மற்றும் முன்னணி வணிக நிறுவனமாக வளர்ந்துள்ளது. தற்போது, CG Corp Global 20,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது மற்றும் பல்வேறு வணிகத் துறைகளை உள்ளடக்கிய 32 நாடுகளில் செயல்படுகிறது. 2001 முதல் CG Corp Global, குறிப்பாக கொழும்பு தாஜ் சமுத்ரா, ஜெட் விங், CHC போன்ற முன்னணி ஹோட்டல்களுடன் இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்துள்ளது. மேலும், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அதன் மக்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பு யூனியன் வங்கியின் ஊடாக நிதிச் சேவைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

 

 

 

 

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...