Atlas நிறுவனம் புத்தம் புதிய Pastel தொடரை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் அடுத்ததலைமுறையின் கற்பனைத்திறன் மற்றும் சிந்தனைத் திறனை ஊக்குவிக்கிறது

Share

Share

Share

Share

ஜூலை 06, 2024: ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் கீழ் Atlas Axilliaஇன் முதன்மை எழுதுபொருள் வர்த்தக நாமமான (Stationery Brand) Atlas, அதன் துணை பிராண்டான ‘Atlax Colour Sparx’ கீழ் அதன் புதிய Pastel தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த Pastelகள் குழந்தைகளின் கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது ஒரு தனித்துவமான மற்றும் ஊடாடும் கலை அனுபவத்தை வழங்குகிறது. சமீபத்திய Havelock City Mallஇல் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றதுடன், இதில் குழந்தைகள், பெற்றோர்கள், Atlas Axillia இன் பிரதிநிதிகள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

Atlas Colour Sarx Pastels வண்ணமயமான மற்றும் தலைப்பு சார்ந்த தொகுப்பில் வருகின்றன, இதில் நான்கு கவர்ச்சிகரமான தலைப்புக்கள் உள்ளன: டைனோசர், விண்வெளி, காடு மற்றும் கடல். Stompy the Dinosaur, Ollie the Octopus, Luna the Space Traveler மற்றும் Jumbo the Elephant போன்ற கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மூலம் ஒவ்வொரு தலைப்பும் உயிர்ப்பிக்கப்படுகிறது. இந்த கதாபாத்திரங்கள் குழந்தைகளை கற்பனை பயணங்களுக்கு அழைத்துச் செல்ல, படைப்பாற்றல் மற்றும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், Atlas Colour Sparx குழந்தைகளுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும், தலைப்பு கருத்து சார்ந்த சாகசங்கள் மூலம் புதிய கருத்துகளைக் கற்றுக்கொண்டு ஆராயவும் கருவிகளை வழங்குகிறது.

ஜூலை 06 அன்று நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வு, ‘கற்பனை உலகை ஆராயுங்கள்’ என்ற ஊக்கமளிக்கும் செய்தியைத் அடிப்படையாகக் கொண்டிருந்தது. புத்தக வாசிப்பு, Art Hacks மற்றும் ஊடாடும் கதைசொல்லல் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான உற்சாகம் மற்றும் செயல்பாடுகளால் நாள் நிரப்பப்பட்டது. நிகழ்வின் சிறப்பம்சமாக, இலங்கையில் முதன்முறையாக, ஒரு மாயாஜால மற்றும் புத்தாக்கமான அனுபவத்தை வழங்கும், டிஜிட்டல் திரையில் குழந்தைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

“கற்பனை என்பது குழந்தைகளின் வளர்ச்சியின் ஒரு மூலக்கல்லாகும், இது அறிவாற்றல், சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை உந்துகிறது. மேலும், கற்பனைச் செயல்பாடுகள் குழந்தைகளிடையே புத்தாக்கம் மற்றும் உண்மைத் தன்மையை வளர்த்து, மோட்டார் திறன்கள் மற்றும் இடஞ்சார்ந்த விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகின்றன,” என Atlas Axillia நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அசித்த சமரவீர தெரிவித்தார். “அட்லஸ் கலர் ஸ்பார்க்ஸின் கீழ் எங்கள் புதிய Pastel சேகரிப்பு படைப்பாற்றலைத் தூண்டுவதற்கும் கற்பனையான விளையாட்டை வளர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தரமான பண்புகளைக் கொண்ட நபர்களை உருவாக்குவதில் இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகின்றன, மொழி மற்றும் தொடர்பு திறன்களை மேம்படுத்துகின்றன, மேலும் அனுதாபத்தையுமு; தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றன.

“இது போன்ற ஒரு தயாரிப்பு மூலம் புத்தாக்கம் மற்றும் உண்மைத் தன்மையை வளர்ப்பதன் மூலம், அட்லஸ் ஆக்சிலியா அடுத்த தலைமுறையினருக்கு விரிவான மற்றும் செறிவூட்டப்பட்ட வளர்ச்சி பயணத்திற்கு தேவையான கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அவர்கள் சிந்தனைமிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் நெகிழ்ச்சியான நபர்களாக வளர உதவுகிறது,” என்று சமரவீர மேலும் வலியுறுத்தினார்.

கற்பனையானது இலங்கையின் எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதற்கும், கனவு காண்பதற்கும், புத்தாக்கங்களை உருவாக்குவதற்கும், குழந்தைகளை வலுவூட்டுவதற்கு ஒரு வலுவான தளத்தை வழங்குகிறது. இருப்பினும், திரைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான பிணைப்பு பெரும்பாலும் பலவீனமடைந்துள்ளது. அட்லஸ் கற்பனையானது இந்த இடைவெளியைக் குறைக்கிறது என்று நம்புகிறது, கதைகள் வெளிப்படும் மற்றும் சாகசங்கள் ஒன்றாக வடிவமைக்கப்படும் ஒரு பகிரப்பட்ட சாம்ராஜ்யத்தை வழங்குகிறது. கற்பனையான விளையாட்டின் மூலம், குழந்தைகளும் பெற்றோரும் ஆழமாக இணைக்க முடியும், பரஸ்பர புரிதல் மற்றும் உணர்ச்சி மென்மையை வளர்க்கலாம். இந்த கூட்டுப் படைப்பாற்றல் குழந்தையின் வளர்ச்சிப் பயணத்தை வளப்படுத்துகிறது மற்றும் பெற்றோர்-குழந்தை உறவை மீண்டும் வலுப்படுத்துகிறது, ஒரு ஒருங்கிணைந்த மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் சமுதாயத்திற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறது. இன்று அட்லஸ் கலர் ஸ்பார்க்ஸ் போன்ற ஒரு தயாரிப்பு மூலம் கற்பனையை ஊக்குவிப்பது, நாட்டின் வளர்ந்து வரும் தலைமுறை அறிவார்ந்த திறன், உணர்வு ரீதியாக மீள்தன்மை மற்றும் அவர்களின் வேர்களுடன் ஆழமாக இணைந்திருப்பதை உறுதி செய்கிறது.

முன்னணி உளவியலாளர் மற்றும் மனநல சுகாதார நிபுணரான ரசினி பண்டார கருத்து தெரிவிக்கையில், “குழந்தைகளின் வளர்ச்சியில் கற்பனைத் திறன் மிக முக்கியமானது. அட்லஸ் கலர் ஸ்பார்க்ஸ் மூலம் படைப்பாற்றல் மற்றும் கற்றலை வளர்ப்பதற்கான அட்லஸின் முன்முயற்சி சரியான திசையில் ஒரு அற்புதமான படியாகும். கற்பனையான விளையாட்டு சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை அதிகரிக்கிறது, மொழி மற்றும் தகவல்தொடர்பு திறன்களை ஆழப்படுத்துகிறது, மேலும் குழந்தைகள் அனுதாபம் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடுகளை வளர்க்க உதவுகிறது. மேலும், பேஸ்டல் தொடர் திரை நேரத்திற்கு மதிப்புமிக்க மாற்றீட்டை வழங்குகிறது, அதிகப்படியான திரைப் பயன்பாட்டின் எதிர்மறையான தாக்கத்தைத் தணிக்க உதவுகிறது. நன்கு வட்டமான, கற்பனைத்திறன் மற்றும் உணர்வுபூர்வமாக அறிவார்ந்த நபர்களை வளர்ப்பதற்கு இது அவசியம்.” என தெரிவித்தார்.

“கற்பனையை ஊக்குவிக்கும் கருவிகளை வழங்குவதன் மூலம், அட்லஸ் புத்தாக்கம் மற்றும் உண்மைத் தன்மையை வளர்த்து, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஆதரிக்கிறது. இந்த அணுகுமுறை குழந்தைகளின் படைப்பாற்றலை ஆராயவும், நம்பிக்கையை வளர்க்கவும், மற்றவர்களுடன் ஆழமான தொடர்புகளை உருவாக்கவும் உதவுகிறது, இவை அனைத்தும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் அவசியம்.” என பண்டார மேலும் தெரிவித்தார்.

Atlas தொடர்பாக

Atlas என்பது Atlas Axillia (Pvt) Limited இன் முதன்மை எழுதுபொருள் வர்த்தக நாமமாகும், மேலும் இது இலங்கையின் மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கையின் சிறந்த கற்றல் வர்த்தக நாமமாக ‘கற்றல்களை வேடிக்கையாக்குவதற்கு’ அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், 60+ வருடங்களாக இலங்கையில் கற்றல் சுற்றுச்சூழலை வழிநடத்தி, சிறந்த வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் மலிவு விலையில் குழந்தைகளுக்கான கற்றல் கருவிகளை உற்பத்தி செய்யும் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தியாளராக திகழ்கிறது. அட்லஸ் ஆக்சிலியாவின் பணி, ‘எதிர்கால தலைமுறைகளின் திறனை வெளிக்கொணர வேண்டும்.’ உயர்தர, பயனர் நட்பு கற்றல் தயாரிப்புகளை வழங்குவதன் மூலமும், படிப்பை முழுமையான கற்றலாக மாற்றுவதன் மூலமும், விரிவான மற்றும் சுவாரஸ்யமான கற்றல் சூழலை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் மற்றும் அனுபவிப்பதற்கும் பயனர்களை ஊக்குவிப்பதன் மூலம் நிறுவனம் இந்த பார்வை மற்றும் நோக்கத்தை உள்ளடக்கியது.

 

நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய...
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා...
JAAF supports ‘Clean Sri Lanka’...
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...