பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவரும் பெரும்பாலான உரையாடல்கள் மற்றும் பெரியவர்களிடையே நடக்கும் பெரும்பாலான உரையாடல்களில் எதிர்மறை தகவல்கள் நிறைந்து காணப்படும் பின்னணியில், இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமும், சுகாதார காப்புறுதியில் சந்தையில் உள்ள முன்னணி நிறுவனமுமான Softlogic Life உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு #ChangeTheStory என்ற ஒரு புதிய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பிரச்சாரம் குழந்தைகளிடையே வளர்ச்சி, நெகிழ்திறன் மற்றும் கனவுகளை வளர்க்கும் சூழலை உருவாக்கி, நம்பிக்கை, ஊக்கம் மற்றும் நேர்மறையான சிந்தனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய ஆய்வுகளின்படி [1] 10 குழந்தைகளில் 7 பேர் தொடர்ந்து எதிர்மறையான செய்திகள் மற்றும் ஊக்கமளிக்காத கதைகளுக்கு ஆளாகின்றனர். இது குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்வதுடன், உலகம் மற்றும் அவர்களின் எதிர்காலம் பற்றிய கண்ணோட்டத்தை வடிவமைக்கிறது. மேலும், தொடர்ச்சியாக எதிர்மறையான ஊடக உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளிடையே கவலை, பயம் மற்றும் உதவியற்ற தன்மை உள்ளிட்ட நிலையை உருவாக்கலாம் என்று இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
தொலைக்காட்சி, பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற உரையாடல்கள் மூலம் பரப்பப்படும் எதிர்மறை மனப்பான்மைகள் நாட்டின் குழந்தைகளின் கனவுகளை வரையறுக்கும் காரணியாக குறிப்பிடலாம். படைப்பாற்றல் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை தளர்த்துவது நேர்மறையான மாற்றத்திற்கான பயணத்தையும் தடுக்கிறது. இலங்கையின் எதிர்காலத்தை பொறுப்பேற்கப் போகும் தலைவர்களின் மனநிலை இவ்வாறு ஆபத்திற்குள்ளாவது ஒரு நாடாக பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள காரணமாக இருக்கும், எனவே அத்தகைய தாக்கங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.
இத்தகைய சூழலில், ஒக்டோபர் முதலாம் திகதி, Softlogic Life இந்த செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்ல அசாதாரணமான ஒரு வழியை தேர்ந்தெடுத்தது. அவர்கள் பத்திரிகைகளுடன் கூட்டு சேர்ந்து, அவற்றின் முகப்பு பக்கத்தை விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த ஊடகமாக பயன்படுத்தினர். வழக்கமாக பெரும்பாலும் எதிர்மறையாக இருக்கும் தலைப்புச் செய்திகள், குழந்தைகளின் கையெழுத்தில் வண்ணமயமான மற்றும் அப்பாவித்தனமான பாணியில் மீண்டும் எழுதப்பட்டன. இவை செய்திகளுடன் கூர்மையாக வேறுபட்டு, இளம் மனங்களில் இந்த கதைகளின் தாக்கத்தை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தன. அத்தோடு, நமது நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நேர்மறையான பார்வையை பரப்புவதன் மூலம் கதையை மாற்றும்படி கேட்டுக் கொண்டன. இதன்படி, பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் பதிக்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது, நமது எதிர்கால தலைமுறையினரின் குரல்கள் மூலம் இந்த செய்தி மிகவும் அர்த்தமுள்ளதாக வழங்கப்பட்டது.
‘ஒரு நாடாக, எதிர்மறையான சூழ்நிலைகளிலும் கூட, இலங்கை வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் மாற்றத்திற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை குழந்தைகளுக்குக் காட்டுவது நமது கூட்டுப் பொறுப்பாகும்,’ என்று Softlogic Life சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமிந்த்ரி பிலிமதலாவ கூறினார். ‘இன்று நாம் சொல்லும் கதைகள் நாளைய தலைவர்களை வடிவமைக்கும். நாம் எதிர்மறை மற்றும் நம்பிக்கையற்ற கதையாடலை நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறுகளால் மாற்ற வேண்டும். நமது நாட்டிற்குத் தேவையான முன்னேற்றத்தை அவர்களால் கொண்டு வர முடியும் என்ற தைரியம், தொலைநோக்கு மற்றும் நம்பிக்கையை நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இலங்கையின் சிறந்த சுகாதார காப்புறுதி நிறுவனமாக இந்த விவாதத்தை முன்னெடுப்பது காலத்திற்கேற்றதும் அவசியமானதுமாகும் என்று கருதுகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் முன்னணி மருத்துவ மற்றும் ஆலோசனை உளவியலாளரான டாக்டர் அவந்தி ஜயசிங்க, ‘எதிர்மறையான தகவல்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள் தாங்கள் செய்யக்கூடியவை குறித்து எப்போதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர். இது குழந்தைகளின் திறன்களை வரையறுக்கிறது மற்றும் அவர்களை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் சிக்க வைக்கிறது. இதன் காரணமாக, அவர்களின் படைப்பாற்றல், வலிமை மற்றும் அபிலாஷைகளை வளர்ப்பதற்கு நேர்மறையான தகவல்களையும் கதைகளையும் அவர்களுக்கு வழங்குவது முக்கியமாகிறது’ என்று கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘நாட்டிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக Softlogic Life ஆரம்பம் செய்த இந்த சமூக சேவை திட்டம் மிகவும் சிறப்பானது. இதற்காக நான் Softlogic Life நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேர்மறையான மற்றும் நிலையான கலாச்சாரத்திற்காக, தற்போது பலர் எதிர்கொள்ளும் ஒரு சமூகப் பிரச்சினையை நன்கு எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளை வழங்க அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த திட்டம் இலங்கையின் எதிர்கால தலைமுறையினரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் இது பிற தரப்பினரையும் ஊக்குவிக்கும் வாய்ப்பாக அமையும் என்று நான் நம்புகிறேன்’ என்றார்.
Softlogic Life இன் இப்புதிய நிகழ்ச்சியின் மூலம், பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் குழந்தைகளுடன் உரையாடும்போது மிகவும் கவனமாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மேலும், பல்வேறு ஊடகங்கள் மூலம் நேர்மறையான செய்திகளை அவர்களுக்கு வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த Softlogic Life திட்டமிட்டுள்ளது. எனவே, திறன், புத்தாக்கம் மற்றும் தீர்வுகளுக்கான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலுக்கு அனைவரையும் அழைக்கிறது.
இதுதொடர்பில் Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகார் அஹமட் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் மையமாக நேர்மறையான அணுகுமுறையை எப்போதும் முன்னிலைப்படுத்தி வந்துள்ளோம். இதற்கு மிகப்பெரிய சான்றாக, எங்கள் நிறுவனம் இலங்கையின் காப்புறுதி துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. அச்சம் சார்ந்த எதிர்மறையான அணுகுமுறையை மாற்றி, இருண்ட கருப்பொருள்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை இன்பத்தை மையமாகக் கொண்ட நேர்மறையான அணுகுமுறைக்கு மாற்றினோம். இந்தத் துணிச்சலான நடவடிக்கை Softlogic Life ஐ சந்தையில் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், சுகாதார காப்புறுதியில் சந்தைத் தலைமைத்துவத்தையும் பெற உதவியது. மேலும், இது ஒட்டுமொத்த தொழில்துறையையும் முன்னேற்றியது. இன்று நாங்கள் 1.5 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பாதுகாக்கிறோம். நேர்மறையான சிந்தனையில் நம்பிக்கை கொண்ட நிறுவனமாக, இலங்கையர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு குறித்த விடயங்களை, குறிப்பாக இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்கால தலைமுறை பற்றி பேசுவதை எங்கள் பொறுப்பாகக் கருதுகிறோம் என தெரிவித்தார்.
பொறுப்புமிக்க இலங்கை நிறுவனமாக, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நேர்மறையான சூழலை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தை உறுதி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த உலக சிறுவர் தினத்தில், Softlogic Life அனைவரையும் அழைக்கிறது. நாட்டின் எதிர்காலத்திற்காக, நாட்டின் எதிர்கால தலைமுறையினரிடையே நேர்மறையான மனப்பான்மையையும் உற்சாகத்தையும் உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறது.