முன்னணி வடிவமைப்பாளர் மற்றும் நிலையான ஜவுளி உற்பத்தியாளரான Noyon Lanka Pvt., இலங்கையில் தனது 20வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. விநியோக தீர்வுகள் வழங்குனராக உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற Noyon, கடந்த 21 ஆம் திகதி பியகம தலைமை அலுவலகத்தில் “100 வருட ஜரிகை பாரம்பரியம், 20 வருட வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன்” என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து இந்த தனித்துவமான மைல்கல்லை கொண்டாடியது. இந்நிகழ்வில் MAS Holdings நிறுவனத்தின் தலைவர் மகேஷ் அமலியன், உப தலைவர் ஷரத் அமலியன் மற்றும் MAS Holdings மற்றும் பிரெஞ்ச் லேஸ் உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட Noyon Calais இன் முன்னாள் தலைவர் Olivier Noyon ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் Marie Noelle, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பதில் தூதுவர். பியகம சுதந்திர வர்த்தக வலய முதலீட்டு சபையின் பணிப்பாளர் கித்சிறி குமாரசிங்க, MAS Holdings பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ மற்றும் Noyon பிரதம நிறைவேற்று அதிகாரி Husni Salieh ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Noyon உடனான தொடர்பு குறித்து கருத்து தெரிவித்த திரு. மகேஷ் அமலியன், “பிரெஞ்சு ஓவியக் கலையை புதிய மைல்கல்லுக்கு கொண்டு வந்த நிறுவனமாக Noyon Lankaவை குறிப்பிடலாம். தற்போது இந்த நாட்டின் ஜவுளிப் பொருட்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது, இதன் மூலம் பெரும் முன்னேற்றம் அடைந்து பல்வகைப்படுத்தல் மூலம் இரண்டையும் தாண்டி எங்களின் சிறப்பை வெளிப்படுத்த முடிந்தது.” என தெரிவித்தார்.
இந்த கூட்டாண்மையின் ஆரம்பம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து Olivier Noyon கருத்து தெரிவிக்கையில், “Noyon Lanka பிரஞ்சு வடிவமைப்பில் சிறந்து விளங்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது மற்றும் தொழிற்துறையில் உயர் தரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றது.” என கூறினார்.
ஐரோப்பா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் சீனாவில் தனது இருப்பை நிலைநிறுத்திய Noyon Lanka, ஜரிகை கலைக்கு அப்பால் தனது திறன்களை விரிவுபடுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. நெருக்கமான உடைகள் மற்றும் சுறுசுறுப்பான ஆடை தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், அவை உலகின் முன்னணி பிராண்டுகளுக்குத் தேவையான வண்ணங்களை 100% இயற்கை சாயங்களுடன் வழங்குகின்றன.
Noyon Lankaவின் எதிர்காலம் குறித்து திரு ஹூஸ்னி சாலேஹ் கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் எதிர்கால தயாரிப்புகளில், கோடுகளுக்கு அப்பால் சென்று உலகின் மிகவும் புத்தாக்கமான Warp Knit தீர்வுகளுக்கு மாற வேண்மென நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செயல்படும் சமூகங்களை ஆதரிக்கும் அதே வேளையில் புத்தாக்கமான மற்றும் நிலையான தயாரிப்புகளில் முன்னணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வானது 20 வருடங்களின் பெருமையை கொண்டாடுவது மட்டுமன்றி, Noyon Lankaவின் 105 வருட வர்த்தக நாம பாரம்பரியத்தை பாராட்டுவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.