கொழும்பில் தரையிறங்கும் JETSTAR ASIA

Share

Share

Share

Share

சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கிய Jetstar Asia (3K) அண்மையில் தனது விமான சேவை போக்குவரத்தில் ஒரேயொரு குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக மாறியுள்ளது. அதன்படி இன்று காலை சிங்கப்பூரின் ‘சாங்கி’ விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை ஆரம்பித்த 3K333 என்ற விமானம் கொழும்பு நோக்கி பயணித்தது. அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்கும் இலங்கையின் அழகைக் கண்டுகளிக்க Jetstar Asia மிகக் குறைந்த கட்டணத்தில் வசதியான விமான சேவையை வழங்கவுள்ளது.

Jetstar Asia இன் A320 விமானங்களைக் கொண்டு சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கு வாரந்தோறும் 5 விமானச் சேவைகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் அனைவருக்கும் எளிதான விருப்பத்தை வழங்கும் முகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு காலை மற்றும் மாலை விமானச் சேவைகளில் தங்களுக்கு விருப்பமான நேரத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பயணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்த விமானக் கட்டணத்தில் 90,000 இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதிகளை வழங்கும் Jetstar Asia, சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கும், அப்பகுதி முழுவதும் பரவியுள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகளுக்கும் ஒரு கவர்ச்சிகரமான பயணத் தளத்தை உருவாக்குவதற்குப் பணிபுரிந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த Jetstar Asia இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. John Simeone, Jetstar Asia வலையமைப்பிற்கு இலங்கை இணைந்து கொண்டமை ஒரு கவர்ச்சிகரமான மதிப்பை சேர்த்துள்ளது..” என அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

“கண்கவர் கடற்கரைகள், அழகிய இயற்கைக்காட்சிகள், செழுமையான கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றைக் கொண்ட தனித்துவமான பயண இலக்கைத் தேடும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலங்கை சிறந்த இடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”
“வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் விமான

சேவைகள் மற்றும் குறைந்தபட்ச கட்டணங்களை வழங்குவதற்கு நாங்கள் உழைத்துள்ளோம், இதன் மூலம் இலங்கையில் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் வர்த்தகங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் நாங்கள் உழைத்துள்ளோம். தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கைக்கு வருவதற்கான குறைந்தபட்ச பயணத் தேர்வுகளை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.”

“Changi விமான நிலைய குழுமம் மற்றும் ஹேலிஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டாளர்களுக்கும் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது நன்றிகள்.”

இங்கு உரையாற்றிய இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் தலைவர் திரு.புத்திக ஹேவாவசம். “அடுத்த ஆண்டுக்குள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என இலங்கை எதிர்பார்க்கிறது மற்றும் Jetstar நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது அதற்கான சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது சிங்கப்பூரைத் தாண்டி ஆவுஸ்திரேலிய மற்றும் தூர கிழக்கு சந்தைகளுக்கு மலிவு விலையில் பயணச் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என தெரிவித்தார்.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் (AASL) தலைவர் (ஓய்வு) எயார் சீஃப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான Jetstar Asiaஇன் திட்டமிடப்பட்ட விமான சேவைகளைத் தொடங்குவது, நமது சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமாக இருக்கும், மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவும்.

இவ்வாறு Jetstar Asia விமான சேவைகள் நிறுவனம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) தமது விமான பயணத்தை ஆரம்பித்துள்ளதை அடுத்து இலங்கையின் விமான சேவைக்கும் மற்றும் உல்லாச பயணிகள் துறைக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக எமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதாகவும், இந்த புதிய வர்த்தகம் தொடர்பாக Jetstar Asia விமான சேவைகள் நிறுவனத்திற்கும் எமது அனலான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் எமது இந்த பெறுமதியான பயணிகளுக்கான சிறந்த உல்லாசபயண அனுபவத்தை உறுதியளிப்பதற்காக நாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த Hayleys Advantis Limitedஇன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. Shano Saber, Jetstar Asiaவுடனான இந்த உறவானது இலங்கையின் வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைக்கு சிறந்த வாய்ப்பை உருவாக்கும். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை சிறந்த விடுமுறை இடமாக கருதப்பட்டாலும், அதன் உண்மையான மதிப்பை உலகம் அங்கீகரித்திருப்பது சமீபத்தில்தான். இதன் விளைவாக, Jetstar Asia உடனான இந்த கூட்டு இலங்கை சுற்றுலாத்துறைக்கு சரியான நேரத்தில் அமைந்துள்ளதுடன் இது ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கிறது என்று குறிப்பிடலாம்.”

“இந்த முதலாவது குறைந்த கட்டண நேரடி விமான சேவை சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பயணிப்பவர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும். புதிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுடன், உள்ளூர் வர்த்தகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்பதால், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன் இலங்கையின் தனித்துவமான அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.” என தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு jetstar.com என்ற இணையத் தளத்திற்கு பிரவேசித்து சிங்கப்பூர் மற்றும் கொழும்புக்கு இடையில் நேரடி விமான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

விமான சேவைகள் தொடர்பான அட்டணை

விமானம் #  இட ஒதுக்கீட்டு திகதி இருந்து வரை புறப்படுதல் வந்தடைதல்
3K331 திங்கள், புதன், சனிக்கிழமை சிங்கப்பூர் கொழும்பு 2100 2230
3K332 திங்கள், புதன், சனிக்கிழமை கொழும்பு சிங்கப்பூர் 2330 0600 +1
3K333 வியாழன், ஞாயிறு சிங்கப்பூர் கொழும்பு 0855 1030
3K334 வியாழன், ஞாயிறு கொழும்பு சிங்கப்பூர் 1130 1800

 

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்”...
இலங்கையில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதற்காக...
இலங்கையின் சுகாதார சேவையில் பத்தாண்டுகால அர்ப்பணிப்புடன்...
கொழும்பில் தரையிறங்கும் JETSTAR ASIA
10 ஆண்டுகால கூட்டாண்மையின் அடையாளத்தைக் குறிக்கும்...
தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி...
9 மாதங்களில் 22 பில்லியன் GWPஐ...
நவலோக்க உயர்கல்வி நிறுவனம் மாணவர்களின் அதிகாரமளிக்கும்...
தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி...
9 மாதங்களில் 22 பில்லியன் GWPஐ...
நவலோக்க உயர்கல்வி நிறுவனம் மாணவர்களின் அதிகாரமளிக்கும்...
பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய...