பாணந்துறை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை பாணந்துறையில் திறந்துள்ளதன் மூலம், அதன் கிளை விஸ்தரிப்பின் மற்றுமொரு கட்டத்தை அடைந்துள்ளது. HNB FINANCEஇன் இந்த புதிய கிளை இல. 31/1, ஹொரணை வீதி, பாணந்துறையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCEஇன் பாணந்துறை புதிய கிளை திறப்பு நிகழ்விற்கு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மதுரங்க ஹீன்கெந்த ஆகியோரின் தலைமையில் சுப முகூர்த்தத்தில் திறந்து வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்விற்கு நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

HNB FINANCE PLC வழங்கும் அனைத்து நிதிச் சேவைகளும் பாணந்துறை கிளையில் கிடைக்கின்றன, மேலும் இந்த சேவைகளில் லீசிங், சேமிப்பு, நிலையான வைப்பு, வணிகக் கடன், வீட்டுக் கடன் மற்றும் தொழில்துறையில் மிகவும் பிரபலமான தங்கக் கடன் சேவை ஆகியவை அடங்கும்.

பாணந்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கக் கடனுக்கான பெரும் தேவை இருப்பதால், HNB FINANCE பாணந்துறை கிளையில் புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தையும் அமைத்துள்ளது. HNB FINANCE தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் பல தங்கக் கடன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, நிறுவனத்தின் தங்கக் கடன் சேவைகளான “Gold Loan” Gold Plan மற்றும் VIP Gold Loan ஆகியவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள அனைத்து தங்க கடன் சேவைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. HNB FINANCE தங்கக் கடன் சேவையானது குறைந்தபட்ச வட்டியில் ஒரு தங்கப் பவுணுக்கு அதிகபட்ச முன்பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, மேலும் இந்த புதிய தங்கக் கடன் சேவை அலகு சேவைக் கட்டணங்கள் அல்லது பிற மறைமுகக் கட்டணங்கள் இல்லாமல் நம்பகமான பரிவர்த்தனையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

“HNB FINANCE ஐப் பொருத்தவரையில் எங்கள் நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான நிதிச் சேவையை வழங்குவதாகும். பாணந்துறையிலுள்ள இந்த புதிய கிளையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிதி சேவை அனுபவத்தையும், மிக இலகுவாக அணுகக் கூடிய வசதிகள் தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளுடன் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த புதிய கிளையை வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவை மத்திய நிலையமாக மேம்படுத்துவதில் எங்களின் பணிவான மகிழ்ச்சி.” என HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

කොකා-කෝලා, ශ්‍රී ලංකාවේ සෑම විශේෂ...
Sampath Bank Becomes the First...
Fortude partners with Ettos to...
සුව සේවා සඳහා ප්‍රවේශය වැඩිදියුණු...
Galaxy F06 மற்றும் F16 5G...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
Hachajah puts Sri Lanka on...