2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்ற HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் Shangri-La ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றதுடன் HNB FINANCE வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் பிரிவில் வெண்கல விருதை வென்றது (20 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான குழும சொத்துக்களுடன்). TAGS விருது வழங்கும் நிகழ்வில் HNB FINANCE தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், நிதி அறிக்கையிடல் மற்றும் பெருநிறுவன வெளிப்படைத்தன்மையில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கிறது. இந்த விருதின் மூலம், HNB FINANCE ஆனது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடையே அதன் சிறப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதித் துறையின் நிலையை உயர்த்துவதற்காக நிதி அறிக்கை தரநிலைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கான HNB FINANCE இன் அர்ப்பணிப்பு TAGS விருது வழங்கும் விழாவில் அங்கீகரிக்கப்பட்டது, இதன் மூலம் நிறுவனத்தின் சிறப்பிற்கான அர்ப்பணிப்பு மற்றும் உயர்தர நிறுவனமாக HNB FINANCE இன் நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத், “இந்த விருது நிதி அறிக்கையின் தரநிலைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கும் ஒரு வாய்ப்பு என்று என்னால் கூற முடியும். இந்த விருதினூடாக, எமது சேவை நெறிமுறைகள் மற்றும் தொழில்துறையின் நிதி அறிக்கை தரநிலைகளை பேணுதல் என்பன TAGS விருதுக் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டன, மேலும் TAGS விருதுக் குழுவிற்கும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதுக்கு பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி கொழும்பு Shangri-La ஹோட்டலில் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட கூட்டாண்மை அறிக்கையிடல் நடைமுறைகளை மேலும் மேம்படுத்துவதைக் குறிக்கும் வகையில் பல சிறந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். CA Sri Lanka இன் நோக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் முதல் கூட்டு நிறுவனங்கள் வரை, நிதி மற்றும் நிதி அல்லாத அறிக்கையிடலின் அடிப்படைக் கருத்துக்களை மேம்படுத்துவதற்காக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கான நிறுவனங்களுக்கு இடையே போட்டியை உருவாக்குவதாகும்.

කොකා-කෝලා, ශ්‍රී ලංකාවේ සෑම විශේෂ...
Sampath Bank Becomes the First...
Fortude partners with Ettos to...
සුව සේවා සඳහා ප්‍රවේශය වැඩිදියුණු...
Galaxy F06 மற்றும் F16 5G...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
Hachajah puts Sri Lanka on...