பாடசாலை மாணவர்களின் படைப்புத் திறன்கள் மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், HNB FINANCE PLC இன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட ”HNB Finance Yalu Daskam” கலைப் பயிற்சிப் பட்டறை, கடந்த ஆண்டு ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியின் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு HNB FINANCE “யாலு” சிறுவர் சேமிப்புக் கணக்கு பூரண அனுசரணை வழங்கியது.
கல்வி அமைச்சின் முன்னாள் கலை ஆலோசகர் திரு. தயாவன்ச குமாரசாரு அவர்களால் நடத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு படைப்பு சிந்தனையின் அடிப்படைகள், வடிவங்களின் பயன்பாடு மற்றும் வண்ணமயமாக்கல் பற்றிய புரிதலை வழங்கியது, மேலும் பயிற்சிப் பட்டறையின் போது குழந்தைகள் வரைந்த சிந்திரங்களும் அவர்களின் பெற்றோர் முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்டன. பட்டறையில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் HNB FINANCE நிறுவனம் மதிப்புமிக்க பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியதுடன், சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் நிதி வைப்புத்தொகையுடன் கூடிய HNB FINANCE “யாலு” சிறுவர் கணக்கைத் ஆரமபித்துக் கொடுத்தது.
HNB FINANCEஇன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியும் பெறுநிறுவன தொடர்பாடல் அதிகாரியுமான திரு. உதார குணசிங்க கருத்து தெரிவிக்கையில், “HNB FINANCEஇன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களில் முதன்மையான திட்டங்களில் ஒன்றான இந்தக் கலைப் பயிற்சிப் பட்டறை, குழந்தைகளிடையே கலைத் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதில் சிறந்த பங்களிப்பைச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மட்டத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.