AI சார்ந்த தொலைக்காட்சி புத்தாக்கங்களை முன்னெடுக்கும் Samsung, உயர்தர மற்றும் மிகப்பெரிய தொலைக்காட்சி சந்தைகளில் முன்னோடியாக திகழ்கிறது.
Samsung Electronics நிறுவனம் தொடர்ந்து 19ஆவது ஆண்டாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. Omdia என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, Samsung 2024ஆம் ஆண்டில் உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் 28.3 சதவீத சந்தைப் பங்கைப் பெற்று, 2006ஆம் ஆண்டு முதல் தன்னிடம் உள்ள முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தொடர்ச்சியான வெற்றிக்கு, உயர்தர மற்றும் மிகப்பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிகளில் நிறுவனத்தின் புத்தாக்க படைப்புகள் மற்றும் அதிநவீன AI தொழில்நுட்ப தொலைக்காட்சிகளின் அறிமுகம் ஆகியவை காரணமாகும்.
‘உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் Samsung இன் 19 ஆண்டுகால ஆதிக்கம் எங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவின் மூலமே சாத்தியமானது,’ என்று Samsung Electronics Visual Display Business இன் நிர்வாகக் குழு உதவித் தலைவர் ஹன் லீ தெரிவித்தார். ‘AI தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சிகள் போன்ற புத்தாக்க படைப்புகளுடன் தொலைக்காட்சி துறையின் எதிர்காலத்தை தொடர்ந்து வடிவமைத்து, மக்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ள முறையில் வளப்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவோம்.’ ஏன குறிப்பிட்டார்.
உயர்தர தொலைக்காட்சி சந்தையில் Samsung தனது தலைமைத்துவத்தை வலுப்படுத்தியுள்ளது, குறிப்பாக பிரீமியம் மற்றும் 75-அங்குலம் மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளில். பிரீமியம் வகையில், நிறுவனம் 49.6% சந்தைப் பங்கை கைப்பற்றி, உலகளாவிய சந்தையில் கிட்டத்தட்ட பாதி அளவைப் பிடித்துள்ளது.
அதே சமயம், மிகப்பெரிய தொலைக்காட்சி பிரிவில், Samsung 28.7% சந்தைப் பங்குடன் முன்னணியில் உள்ளது. இது தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக Samsung தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
QLED மற்றும் OLED தொலைக்காட்சிப் பிரிவுகளில் Samsung நிறுவனம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி, பிரீமியம் தொலைக்காட்சி சந்தையில் தனது செல்வாக்கை மேலும் நிலைநிறுத்தியுள்ளது. Samsung 8.34 மில்லியன் QLED தொலைக்காட்சிகளை விற்று, 46.8% சந்தைப் பங்கை கைப்பற்றியுள்ளது. உலகளாவிய QLED சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு, முதன்முறையாக மொத்த தொலைக்காட்சி விற்பனையில் 10% ஐ தாண்டியுள்ளது, இது இந்த உயர்தர காட்சி தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளரின் ஆர்வம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
பிரீமியம், மிகப்பெரிய, QLED, மற்றும் OLED தொலைக்காட்சி வகைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் Samsung, தொழில்துறையில் புதிய அளவுகோல்களை தொடர்ந்து நிர்ணயிக்கிறது. புத்தாக்கம் மற்றும் தரத்தின் மீதான அதன் அர்ப்பணிப்பு, உயர்தர தொலைக்காட்சிகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தியுள்ளது, மாறிவரும் வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப அதன் போட்டித்தன்மையை வலுப்படுத்துகிறது.
Samsung தொலைக்காட்சிகள் கிடைக்கும் இடங்கள்
Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களான Singer, Damro, Singhagiri மற்றும் Softlogic உள்ளிட்ட நிறுவனங்களில் Samsung தொலைக்காட்சிகளை வாங்கலாம்.