2025 ஆம்ஆண்டு SEDR கருத்தரங்கில் நீதி மற்றும் தேசியஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன அவர்கள்தமது தொடக்க உரையை வழங்குகிறார்

Share

Share

Share

Share

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் செயல்படும் SEDR திட்டம், இலங்கையில் வருடத்திற்கு 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மத்தியஸ்த சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

கொழும்பு, இலங்கை (தேதி உறுதி செய்ய வேண்டியது) – ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஆசியா அறக்கட்டளை (The Asia Foundation) இணைந்து செயல்படுத்திய Supporting Effective Dispute Resolution (SEDR) திட்டம், 2025 ஏப்ரல் 29-30 தேதிகளில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் (Cinnamon Grand Hotel) நடைபெற்ற SEDR திட்ட நிறைவு கருத்தரங்கில் தனது ஐந்தாண்டு பயணத்தை நிறைவு செய்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், SEDR 8,500-க்கும் மேற்பட்ட தொண்டர் மத்தியஸ்தர்ளின் பணிகளை ஆதரித்து வலுப்படுத்தியுள்ளது. இவர்கள் இணைந்து வருடம் தோறும் இலங்கையில் இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரத்திகும் மேற்பட்ட பினக்குகளை தீர்க்க உதவியுள்ளனர்.

அமைதியான பினக்கு தீர்வுகளை இளம் தலைமுறைகளிடையே நிறுவுவதில் SEDR முன்னணி இடத்தை வகிக்கிறது. பாடசாலை மத்தியஸ்த திட்டத்தின் மூலம் 280 ஆசிரியர்களுக்கும் 1,700 மாணவர்களுக்கும் பினக்கு தீர்வு மற்றும் மத்தியஸ்த திறன்கள் கற்றுத்தரப்பட்டுள்ளன. இதன் மூலம் SEDR அமைதியான உரையாடல் கலாச்சாரத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளது.

கருத்தரங்கில் இலங்கையின் நீதித்துறை அமைப்பில் பினக்கு தீர்வுகளின் பங்கு, நிலம் தொடர்பான பினக்கு தீர்வில் உள்ள சவால்கள் மற்றும் உரையாடலை ஊக்குவிக்க படைப்பாற்றலான கலை வெளிப்பாடுகளின் சக்தி குறித்த கலந்துரையாடல்கள், கதை சொல்லல்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, SEDR மரபு புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், மாற்றுவழி பிணக்குத் தீர்வு முறைகள் வாழ்க்கையையும் சமூகங்களையும் எவ்வாறு மாற்றியமைத்தன என்பதை விளக்கும் 12 தனி நபர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில் பேசிய நீதித்துறை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன PC (Ms. Ayesha Jinasena PC), “கடந்த ஐந்து ஆண்டுகளில், SEDR திட்டம் தேசிய மத்தியஸ்த செயல்முறையை பலப்படுத்தியுள்ளது மற்றும் சமூக மட்டத்தில் நீதிக்கான அணுகலை விரிவாக்கியுள்ளது. பாடசாலை மத்தியஸ்தம் மற்றும் முறைப்பாட்டு பெட்டிகள் போன்ற புதுமையான கருவிகளை அறிமுகப்படுத்தி SEDR அமைதியான உரையாடலுக்கான பண்பாட்டை ஊக்குவித்துள்ளது” என்றார்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கை நாட்டு இயக்குநர் ஓர்லாண்டோ எட்வர்ட்ஸ் (Orlando Edwards), உரையாடலை வளர்ப்பதிலும் நீதி வழிமுறைகளை வலுப்படுத்துவதிலும் பிரிட்டிஷ் கவுன்சிலின் பங்கை எடுத்துரைத்தார், “அர்ப்பணிப்புள்ள மத்தியஸ்தர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி, இந்த திட்டத்தை வழிநடத்தியதில் பிரிட்டிஷ் கவுன்சில் பெருமை கொள்கிறது. SEDR திட்டம் திறனை வளர்த்தது மட்டுமல்லாமல், வரும் ஆண்டுகளில் இலங்கையின் பினக்கு தீர்வு நிலப்பரப்பை தொடர்ந்து வடிவமைக்கும் அர்த்தமுள்ள கூட்டாண்மைகளையும் வளர்த்துள்ளது’’. என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் டாக்டர் யோஹான் ஹெஸ் (Johann Hesse), “இந்த திட்டம் இலங்கையில் நீதிக்கான அணுகல், நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்தை அணுகுவதை ஆதரிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய நுழைவாயில் உத்திக்கு இணங்க, கூட்டாளர் நாடுகளுடனான நமது ஈடுபாட்டிற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு இந்தப் பகுதிகளில் முதலீடு செய்வது முக்கியமாகும்”. என்று கூறினார்.

இந்நிகழ்ச்சி நிறைவடைந்தபின், பங்குபற்றியவர்கள் SEDR திட்டத்தின் தனிப்பட்ட தாக்கத்தைப் பற்றிக் கருத்து பகிர்ந்தனர். இது SEDR மரபுப் புத்தகத்தில் இடம்பெற்ற 12 மாற்றத்தின் கதைகளில் பிரதிபலிக்கப்படுகிறது. இந்த கதைகள், கலந்துரையாடல், நம்பிக்கையூட்டல் மற்றும் கூட்டு அணுகுமுறைகள் எவ்வாறு வாழ்க்கைகள் மற்றும் சமூகங்களை மாற்றியமைத்துள்ளன என்பதை வலியுறுத்துகின்றன.

SEDR மற்றும் அதன் தாக்கம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, www.sedrsrilanka.org இணையதளத்தை பார்வையிடவும்.

தொகுப்பாளர்கள் மட்டும்- Editors only
அடிப்படை விளக்கம்- Boiler plate
பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ஆசியா பவுண்டேஷனுடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து வருட நீதிக்கான அணுகல் திட்டமாகும். இது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் மேற்கொள்ளும் நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கிய ஜனநாயக ஈடுபாட்டை வலுப்படுத்துதல் (STRIDE) நிகழ்ச்சியின் ஓரங்கமாகும்.

ஊடக தொடர்புகள்: Media Contacts
லீ-ஆன் பெர்னாண்டோ
தகவல் மற்றும் ஊடகப் பிரிவு அலுவலர்
இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு
தொலைபேசி: +94 112674413-108

மனிஷா அமரசிங்கே
முக்கிய நிபுணர், தகவல்தொடர்புகள்
பிரிட்டிஷ் கவுன்சில் – SEDR திட்டம்
தொலைபேசி: + (94) 772 521 539
மின்னஞ்சல்: [email protected]
www.SEDRSriLanka.org

 

Maliban Brings Korean Flavour to...
கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் அறிக்கை
Mahindra Ideal Finance 2025 මූල්‍ය...
மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிகாட்டுதல் தியான...
Mahindra Ideal Finance 2025 நிதியாண்டில்...
Mahindra Ideal Finance delivers strong...
Press Release: Guided Meditation on...
Samsung සිය Neo QLED, OLED,...
Mahindra Ideal Finance delivers strong...
Press Release: Guided Meditation on...
Samsung සිය Neo QLED, OLED,...
Sunshine Holdings concludes ‘Smart Life...