மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிகாட்டுதல் தியான அம்சத்தை அறிமுகப்படுத்தும் TikTok

Share

Share

Share

Share

தூக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புதிய செயலி

TikTok தனது உலகளாவிய பாவனையாளர்களின் மனநலத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வயதினருக்கும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளை அணுகக்கூடியதாக்க ஒரு புதிய in-app வழிகாட்டுதல் தியான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளம் உலகம் முழுவதும் உள்ள நம்பகமான நிறுவனங்களுக்கு ஆதரவாக $2.3 மில்லியன் மனநல கல்வி நிதியையும் அறிவித்துள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் பாடசாலை வாழ்க்கையில் சிரமப்படும் மாணவர்கள் முதல் அன்றாட வேலைப்பளுவை சமாளிக்கும் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக மன அமைதி பெறுவதற்கு உதவுவதாகும். இது TikTok இன் டிஜிட்டல் சகவாழ்வு மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்புச் செய்வதற்கான பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

TikTok இன் தூக்க நேர அம்சத்தில் புதியாக சேர்க்கப்பட்ட தியான அனுபவம் பாவனையாளர்கள் இரவில் அமைதியாக ஓய்வெடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தியானம் எல்லா வயதினரின் தூக்கத்தையும் மேம்படுத்தும் என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளதால், TikTok இந்த அம்சத்தை அனைவருக்கும் கொண்டு வந்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இது தானாகவே இயக்கப்படும். இரவு 10.00 மணிக்குப் பிறகு, இளைஞர்களின் “For You” ஊட்டம் தற்காலிகமாக தியான வழிகாட்டுதலுடன் மாற்றப்படும். அவர்கள் தொடர்ந்து பார்த்தால், மூடுவதற்கு கடினமான இரண்டாவது திரை தோன்றும். இது ஆரோக்கியமான கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டு பழக்கத்தை வளர்க்க உதவும். சமீபத்திய ஆய்வொன்றில் 98% இளைஞர்கள் இந்த அம்சத்தை தொடர விரும்புவதாக TikTok கண்டறிந்துள்ளது. பெரியவர்கள் தங்கள் திரை நேர அமைப்பிலிருந்து இதை இயக்கிக் கொள்ளலாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஓய்வெடுப்பது மிக முக்கியம். மன அழுத்தம் குறைக்கவும் கவனம் அதிகரிக்கவும் நிபுணர்கள் தினமும் 10 நிமிடம் தியானம் செய்ய பரிந்துரைக்கின்றனர். மேலும், JAWA மற்றும் Harvard ஆய்வுகள் படி தூக்கத்திற்கு முன் 10-15 நிமிட தியானம் தூக்க தரத்தை மேம்படுத்தவும், கவலையை குறைக்கவும், உணர்ச்சி சமநிலையை ஆதரிக்கவும் முடியும் என்று காட்டுகிறது.

இப்புதிய செயலியில் உள்ள அம்சத்துடன் கூடுதலாக, TikTok தனது 2025 மனநல கல்வி நிதியின் மூலம் 22 நாடுகளில் உள்ள 31 மனநல நிறுவனங்களுக்கு விளம்பர கடன்களாக $2.3 மில்லியன் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிதி மற்றும் TikTok இன் பயிற்சி உதவியால் இந்த நிறுவனங்கள் பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடையும் நம்பகமான மனநல உள்ளடக்கத்தை உருவாக்க முடியும். மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் தெற்காசியாவில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த TikTok திட்டமிட்டுள்ளது.

இப்புதிய செயலி தொடர்பில் TikTok இன் தெற்காசிய பிராந்திய பாதுகாப்பு தலைவர் அஸ்மா அன்ஜும் கூறுகையில், ‘பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகளில் மனநலம் பற்றி பேசுவது முன்பு தவறாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது விழிப்புணர்வு அதிகரித்து, திறந்த மனதுடன் பேசுவதால் நல்ல மாற்றம் தெரிகிறது. தற்போது அதிகமான மக்கள் திறந்த மனதுடன் பேசி, உதவி தேடி, ஆதரவை ஏற்றுக்கொள்கிறார்கள்.இந்த நேர்மறையான மாற்றத்தை ஆதரிக்க TikTok தொடர்ந்து செயலி அம்சங்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களில் முதலீடு செய்வதில் உறுதியாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

தியான அம்சம் மற்றும் மனநல கல்வி நிதி ஆகியவை TikTok இன் டிஜிட்டல் சகவாழ்வு மற்றும் சமூக பொறுப்புணர்வுக்கான பரந்த அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது இதனுடன் கூடுதலாக, குறிப்பாக இளம் வயது பாவனையாளர்களுக்காக ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை ஊக்குவிக்க கல்வி ஊட்டங்கள், பாதுகாப்பு கருவிகள் மற்றும் பெற்றோர் கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. #GivingSzn தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், STEM ஊட்ட கற்றல் தருணங்கள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க AMBER எச்சரிக்கைகளுக்கு உதவுவது போன்ற பல்வேறு சமூக நலன் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.

தொழில்நுட்பம், சமூக ஈடுபாடு மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை இணைத்து, TikTok வெறும் பொழுதுபோக்கு தளம் மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள மாற்றங்கள் மூலம் சமூகங்களை வலுப்படுத்தி உயர்த்தும் தளமாக மாறுவதற்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

TikTok இன் சகவாழ்வு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து TikTok செய்தி அறை அல்லது TikTok இளைஞர் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு நிலையத்தை பார்வையிடவும்.

Maliban Brings Korean Flavour to...
கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் அறிக்கை
Mahindra Ideal Finance 2025 මූල්‍ය...
மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிகாட்டுதல் தியான...
Mahindra Ideal Finance 2025 நிதியாண்டில்...
Mahindra Ideal Finance delivers strong...
Press Release: Guided Meditation on...
Samsung සිය Neo QLED, OLED,...
Mahindra Ideal Finance delivers strong...
Press Release: Guided Meditation on...
Samsung සිය Neo QLED, OLED,...
Sunshine Holdings concludes ‘Smart Life...