City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்

Share

Share

Share

Share

கொழும்பு, இலங்கை – 2 ஆகஸ்ட் 2025: இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும், தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழும் “City of Dreams Sri Lanka” (COD SL) அதன் பெருமைக்குரிய பயணத்தைத் தொடங்கியது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆடம்பரமும், உள்ளூர் வடிவமைப்பும் ஒன்றிணைந்த ஒரு தனித்துவமான இடமாக இந்த City of Dreams Sri Lanka, இலங்கையின் லட்சியங்கள், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையின் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

இலங்கை மற்றும் சர்வதேச கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய City of Dreams Sri Lankaவின் அங்குரார்ப்பண விழா, கண்கவர் நிகழ்ச்சிகளும் உணவு விருந்து நிகழ்வுகளும் நிறைந்து விளங்கியது. இந்த நிகழ்வின் போதே, புத்தாக்கமான அணுகுமுறைகள் மூலம் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை உருவாக்க முனைந்த City of Dreams, நாளை முதல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத சுவாரஸ்யமான அனுபவங்களை வழங்க தயாராக இருப்பதை வெளிப்படுத்தியது.

John Keels Holdings மற்றும் Melco Resorts and Entertainment – MRE ஆகியவற்றின் வலுவான கூட்டு முயற்சியின் ஒரு மிகுந்த வெற்றிகரமான திட்டமாக City of Dreams Sri Lanka அமைந்துள்ளது. இது புத்தாக்கம், தேசிய பெருமை மற்றும் உலகளாவிய அங்கீகாரம் கொண்ட ஒரு இலங்கையை உருவாக்குவதற்கான மையமாகவும் அமைந்துள்ளது.
“இது இலங்கைக்கு ஒரு திருப்புமுனையான தருணம்,” என John Keels குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா தெரிவித்தார். “City of Dreams, நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தனியார் முதலீடாகும் – இது ஒரு லட்சியமிக்க தேசிய தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பித்துள்ளது. இது ஒரு கட்டுமானத்தை விட மேலானது, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், நமது உலகளாவிய மதிப்பை உயர்த்தவும், எதிர்வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு நவீன, முன்னோக்குச் சிந்தனையுள்ள இலங்கையை வடிவமைக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு உலகத் தரம் வாய்ந்த இடமாகும்.” என தெரிவித்தார்.

Melco Resorts and Entertainment இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி Lawrence Ho இந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், “இந்த தொலைநோக்குத் திட்டத்தில் ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். City of Dreams Sri Lanka, Melcoவின் நிபுணத்துவத்துடன் இலங்கையின் அன்பு மற்றும் கலாச்சாரத்தை இணைத்து ஒரு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது.

NÜWA மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கெசினோ வசதிகளை இயக்குவதில் எங்களது பங்கின் மூலம், தெற்காசியாவில் ஆடம்பரம் மற்றும் விருந்தோம்பலுக்கான புதிய தரநிலைகளை அமைக்கும் அதே வேளையில், இலங்கையின் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டாடும் ஒரு இடத்திற்குப் பங்களிப்பு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

கடந்த ஒரு வருட காலமாக, 500க்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்கள், ஹோட்டல் நிபுணர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள், சர்வதேச வடிவமைப்பு நிபுணர்கள் மற்றும் Melcoவின் உலகளாவிய நிபுணர்களுடன் இணைந்து, ‘City of Dreams Sri Lanka’ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். குறிப்பாக, சுவர்களில் கைவண்ணம் வரைந்த ஓவியங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப்படைப்புகள் மூலம் இலங்கையின் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவதோடு, ‘City of Dreams’ இன் தனித்துவத்தையும் உலகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் புதிய அத்தியாயம்
‘City of Dreams Sri Lanka’ என்பது ஒரு ஆடம்பர ஹோட்டல் திட்டத்தையும் தாண்டி, இலங்கையின் திறன்கள் மற்றும் புத்தாக்கமான சின்னங்களை சிறப்பாக வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகும். கொழும்பு நகரத்தின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக இது எளிதாக மாறியுள்ளது. தனித்துவமான விழாக்களுக்கான ஆடம்பர வசதிகளுடன் கூடிய ‘City of Dreams’, உயர் வருமானம் பெறும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதோடு, உள்நாட்டு வணிகங்களின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாக, இந்தத் திட்டம் அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெறும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது அவர்களுக்கு அதிகப்படியான வசதியையும் எளிமையாக்குகிறது.

687 அறைகளைக் கொண்ட Cinnamon Life மற்றும் Nüwa ஹோட்டலில் 113 அதி சொகுசு அறைகளைக் கொண்டுள்ளது. City of Dreams Sri Lanka சர்வதேச தரத்திற்கு ஈடான சேவைகளை வழங்குகிறது. Melco நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் நவீன கெசினோ மற்றும் பொழுதுபோக்கு வலயம், சர்வதேச தரநிலைகள் மற்றும் நிர்வாக முறைகளுடன் இயங்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.

City of Dreams, இலங்கையின் பிரபலமான சமையல் கலைஞர்களின் பங்களிப்புடன், பாரம்பரிய இலங்கை உணவு மரபுகளுடன் நவீன சுவை அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதற்காக 17 தனித்துவமான உணவகங்கள் மற்றும் Bar வசதிகளைக் கொண்டு, புத்தாக்கமான மற்றும் உயர்தர உணவு-பான வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

City of Dreams, அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் International Branded கடைகளைக் கொண்ட ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மூலம் சிறந்த தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும், இந்த வளாகம் விசேட நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. City of Dreamsஇன் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வீடு அல்லது அலுவலகத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது, இது இதன் மற்றொரு தனித்துவமான அம்சமாகும்.

John Keells தொடர்பில்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) என்பது கொழும்பு பங்குச் சந்தையில் சந்தை மூலதனமயமாக்கலின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வெவ்வேறு தொழில் துறைகளில் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. 155 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 16,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. மேலும், LMD பத்திரிகையால் 20 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பெருநிறுவன அறிக்கையிடல் வெளிப்படைத்தன்மை மதிப்பீட்டில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவால் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருக்கும் JKH, “நாளைக்காக தேசத்தை மேம்படுத்துதல்” என்ற தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) தொலைநோக்குப் பார்வையை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலம் முன்னெடுத்துச் செல்கிறது.

Melco Resorts & Entertainment Limited தொடர்பாக
Nasdaq Global Select Market (Nasdaq: MLCO) அமெரிக்க டெபாசிடரி பங்குகளை பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், ஆசிய மற்றும் ஐரோப்பாவில் ஒருங்கிணைந்த Resort வசதிகளை உருவாக்கி, உரிமையாளராகவும், இயக்குநராகவும் செயல்படுகிறது. இந்த நிறுவனம் தற்போது Macauவின் Cotai மற்றும் Taipa பகுதிகளில் முறையே அமைந்துள்ள ‘City of Dreams’ (www.cityofdreamsmacau.com) மற்றும் ‘Altira Macau’ (www.altiramacau.com) போன்ற ஒருங்கிணைந்த Resortsகளை இயக்குகிறது. மேலும், இந்நிறுவனம் Macauவின் Taipaவில் அமைந்துள்ள ‘Grand Dragon Casino’ மற்றும் Macauவின் மிகப்பெரிய Non-Casino அடிப்படையிலான எலக்ட்ரானிக் கேமிங் இயந்திரங்களை இயக்கும் ‘Mocha Clubs’ (www.mochaclubs.com) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. மேலும், Macauவின் Cotai பகுதியில் சினிமா தலைப்பைக் கொண்ட ‘Studio City’ (www.studiocity-macau.com) என்ற ஒருங்கிணைந்த Resortஐயும் இந்நிறுவனம் இயக்குகிறது. பிலிப்பைன்ஸில், மணிலாவின் Entertainment City Complexஇல் அமைந்துள்ள ‘City of Dreams Manila’ (www.cityofdreamsmanila.com) என்ற ஒருங்கிணைந்த Resortஐ இந்நிறுவனம் இயக்கி நிர்வகிக்கிறது. ஐரோப்பாவில், சைப்ரஸ் குடியரசின் லிமாசோலில் அமைந்துள்ள ‘ City of Dreams Mediterranean’ (www.cityofdreamsmed.com.cy) மற்றும் சைப்ரஸின் பிற நகரங்களில் உள்ள உரிமம் பெற்ற satellite casinos (“சைப்ரஸ் கேசினோக்கள்”) ஆகியவற்றையும் இந்நிறுவனம் இயக்குகிறது. நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.melco-resorts.com ஐப் பார்வையிடவும். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள்

Hong Kong Exchangeஇன் மெயின் போர்டில் பட்டியலிடப்பட்டுள்ள Melco International Development Limited நிறுவனத்திற்கு சொந்தமானது. இதன் பெரும்பான்மை பங்குகளும் நிர்வாகமும் நிறுவனத்தின் தலைவர், நிறைவேற்று அதிகாரமுடைய பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. லோரன்ஸ் ஹோவிற்கு சொந்தமானது.

JAAF Statement on the Revised...
அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும்...
Ceylon Chamber of Coconut Industries...
ශ්‍රී ලාංකේය ආර්ථික සංවර්ධනයේ සුවිශේෂී...
City of Dreams Sri Lanka...
City of Dreams Sri Lanka...
City of Dreams Sri Lanka...
nVentures Emerges as Sri Lanka’s...
City of Dreams Sri Lanka...
City of Dreams Sri Lanka...
nVentures Emerges as Sri Lanka’s...
Sri Lanka’s Textile and Apparel...