Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்த ‘Ather Experience Zone’ இல் 2025 Ather 450Xஐ எட்டு வருட பற்றரி உத்தரவாதத்துடன் அறிமுகம் செய்தது

Share

Share

Share

Share

கொழும், இலங்கை, 17 ஆகஸ்ட் 2025 – Evolution Auto, Ather Energy உடன் இணைந்து கொழும்பில் பிரத்தியேகமான Ather Experience Zoneஐ ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 17ஆம் திகதி மு.ப. 10 மணி முதல் பி.ப. 10 மணி வவரை காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதிலல் பங்கேற்றவர்களுக்கு புதிய 2025 Ather
450X ஸ்கூட்டரை test ride செய்து பார்க்கும் வாய்ப்பு மற்றும் அதனைப் பற்றியே மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளும வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

Ather Experience Zone இனால் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கு, தோரிப்பு காட்சிப்படுத்தலுக்கு அப்பாலான அனுபவம் வழங்கப்பட்டிருந்தது. Ather ஸ்கூட்டர்களின் வினைத்திறன் மற்றும் ஸ்டைலை நேரடியாக அனுபவித்து பார்க்கும் வாய்ப்பு இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்கேற்றவர்கள் Atherஇல் test ride களை மேற்கொண்டு, அதன் acceleration, handling மற்றும் ride comfort பற்றிய அனுபவத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்டனர். தொழில்நுட்ப விளக்கமளிப்புகளினூடாக ஸ்மார்ட் இணைப்பு மற்றும் app ஒன்றிணைப்பு போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், நிபுணத்துவ அமர்வுகளினூடாக EV கன உரிமையாண்மையின் அனுகூலங்கள் மற்றும் கிடைக்கும் சார்ஜ் செய்யும் உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் பொருத்தமான வர்த்தக நாமங்கள் பொறிக்கப்பட்ட நிறுவுகை கட்டமைப்புகளுடன் பலர் புபப்படமெடுத்துக் கொண்டனர்.

Evolution Auto (Pvt) Ltd இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி சஹ்ரான் சியாவுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “மின்சார போக்குவரத்து தீர்வுகளின் விறுவிறுப்பை அனுபவிப்பதற்காக Ather Experience Zoneக்கு அனைவரையும் அழைத்திருந்தோம். நிலைபேறாண்மையில் வினைத்திறனை உள்வங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்ததுடன், கொழும்பு நகரின் இரு-சக்கர பயண அனுபவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.” என்றார்.

Ather Energyஇன் CBO ரவ்னீத் சிங் போகெலா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் 2025 Ather 450Xஐ அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த ஆண்டில் எமது அறிமுகத்தைத் தொடர்ந்து, 450X க்கு பெருமளவு கேள்வியை நாம் அவதானித்துள்ளோம். தற்போது 2025 Ather 450X உடன், இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த பயண அனுபவத்தை வழங்க எதிர்பார்க்கிறோம். கடந்த சில மாதங்களில், பிராந்தியத்தில் எமது விநியோகத்தை நாம் துரிதமாக விரிவாக்கம் செய்து, எமது ஸ்கூட்டர்களை அதிகளவு கிடைக்கச் செய்துள்ளோம். வினைத்திறன், தங்கியிருக்கும் திறன் மற்றும் தரம் ஆகியயவற்றில் அதிகளவு கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள 2025 Ather 450X, இலங்கையின் புவியியல் அமைப்பு மற்றும் வீதிகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என கருதுகிறோம்.” என்றார்.

நிகழ்வின் போது, 2025 Ather 450X சுப்பர் ஸ்கூட்டரை Evolution Auto இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்திருந்தது. இலங்கையின் மின்சார வலுவூட்டப்பட்ட போக்குவரத்து பிரயாணத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக இந்த அறிமுகம் அமைந்துள்ளது. சுப்பர் ஸ்கூட்டராக வர்த்தக வகைப்படுத்தப்பட்டுள்ள 2025 Ather 450X இல் உயர்ந்த தொழில்நுட்பம், வலிமையான வீனைத்திறன் மற்றும் நவீன தோற்ற வடிவமைப்பு போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மின்சார வாகன சந்தையில் புதிய நியமத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 Ather 450X ஆனது, Ather இன் மென்பொருள் என்ஜினான AtherStack 6இனால் வலுவூட்டப்பட்டுள்ளது. இதில் Google Maps, Alexa, WhatsApp notifications போன்ற dashboardஇல் காண்பிக்கப்படுவதுடன், “Ping My Scooter”இனால் வாகனத்தின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட நபருடன் வாகனத்தின் live location sharing வசதியும் வழங்கப்படுகிறது.

ஸ்கூட்டர் Stealth Blue மற்றும் Hyper Sand ஆகிய இரு வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டயர்கள் மற்றும் சிறந்த செலுத்தும் உறுதித்தன்மை ஆகியவற்றையும் கொண்டுள்ளது. பசுமையான போக்குவரத்து தெரிவுகளை நோக்கி இலங்கை நகரும் நிலையில், 2025 Ather 450X சக்தி வாய்ந்த மற்றும் இணைப்பைக் கொண்ட போக்குவரத்துத் தெரிவாக அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பற்றரியின் ஆயுள், வினைத்திறன் மற்றும் மாற்றச் செலவுகள் தொடர்பில் நீண்டகால நம்பிக்கையை வழங்கும் வகையில், தொழிற்துறையில் முதன் முறையாக எட்டு-வருட கால பற்றரி உத்தரவாதத்தை Ather அறிமுகம் செய்திருந்தது. உத்தரவாதத்தினூடாக எட்டு வருடங்கள் வரை அல்லது 80,000 கிலோமீற்றர்கள், 70 சதவீத பற்றரி ஆயுள் உறுதியளிப்பு வழங்கப்படுகிறது.

புதிய 450X தெரிவு இரு பற்றரி கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. ஒன்று 161 கிலோமீற்றர்கள் (IDC) வரை வழங்குவதுடன், மற்றயது 130 கிலோமீற்றர்களை (TrueRange) வழங்குவதாக அமைந்துள்ளது. இதில் காணப்படும் சீறப்பம்சமாக, மோட்டார் சைக்கிளை செலுத்துபவருக்கு இலங்கையின் பல்வேறு வீதிச் சூழல்களில் சிறந்த grip மற்றும் கட்டுப்பாட்டை கொண்டிருப்பதற்காக Rain, Road மற்றும் Rally போன்ற mode தெரிவுகள் வழங்கப்படுகின்றன. விசேடமாக வடிவமைக்கப்பட்ட multi-compound டேர்கள் MRF உடனான பங்காண்மையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வினைத்திறன் மற்றும் நீண்டகால பாவனையை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...
சிறந்த விற்பனை குழுவை வலுப்படுத்துவதற்காக எதிர்காலத்திற்கு...
TikTok, ශ්රී ලංකාව තුළ STEM...
Evolution Auto மற்றும் Ather Energy...
சிறந்த விற்பனை குழுவை வலுப்படுத்துவதற்காக எதிர்காலத்திற்கு...
TikTok, ශ්රී ලංකාව තුළ STEM...
TikTok partners with the Government...