ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம், இந்த ஆண்டு அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து திருத்தப்பட்ட பெறுமதிசேர் வரி (VAT) முறையை நீக்குவது குறித்த அரசின் முடிவை ஏற்பதாகத் தெரிவித்து, இந்த முடிவுக்கு ஏற்ப அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் மேலும் வலியுறுத்தியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில், திருத்ததப்பட்ட பெறுமதிசேர் வரி முறையை நீக்குவது குறித்த முடிவை மாற்ற முடியாது என்பதால், இதன் விளைவாக ஆடை தொழிற்த் துறை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அந்தச் சவால்களை சமாளிப்பதற்கான காலத்திற்கேற்ற தீர்வுகள் குறித்து உரிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து கோரிக்கை விடுத்து, இவை பற்றி கொள்கை வகுப்பாளர்களுடன் மேலும் விவாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தியது.ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றமானது சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட 45 நாள் காலக்கெடுவிற்கு முன்னதாகவே பணத்தைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகளைச் செய்வதற்கு தேவையான அமைப்புகள் தயாராக உள்ளன என IRD யிடமிருந்து மீண்டும் மீண்டும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளால் ஊக்கமடைந்துள்ளது. இருப்பினும், இதனைச் சோதித்துப் பார்ப்பதற்கான எந்தவொரு முன்னோட்டமும் செய்யப்படவில்லை என்பதை ஒன்றிணைந்த ஆடைச்சங்கங்களின் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணத்தின் பயன்பாடு மற்றும் விநியோக சங்கிலி குறித்து கவனம் செலுத்துதல்
இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் ஆடைத் தொழிற் துறை, திருத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறை நீக்கப்படுவதால், 12 பில்லியன் ரூபா தொகையை பெறுமதிசேர் வரியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஏற்றுமதியாளர்கள் இவ்வாறு செலுத்தும் பெறுமதிசேர் வரி, 45 நாட்களுக்குள் மீண்டும் அவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டும். எனவே, தகுந்த தாமதமின்றி ஏற்றுமதியாளர்களுக்கு பெறுமதிசேர் வரி திரும்பக் கிடைப்பதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் தங்கள் பணத்தை எவ்வித அழுத்தம் இல்லாமே நிர்வகிக்க முடியும். அமெரிக்க வரி மற்றும் உலகளாவிய விலைச் சரிவு ஆகியவை நிலவும் நிலையில், இந்த நிலைமை மேலும் முக்கியமானதாகிறது.
இதனோடு, திருத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறை நீக்கப்படுதல் விநியோகஸ்தர்களை நேரடியாகப் பாதிக்கும். குறிப்பாக, அமெரிக்க டொலர் 1 பில்லியன் மதிப்புள்ள மூலப்பொருட்களின் அடித்தளத்தை நாட்டிற்குள் அமைப்பதில் பங்களிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள், இதன் காரணமாக உடனடி போட்டித் தன்மையை எதிர்கொள்ளும் சவாலான நிலைக்கு உள்ளாகுவர்.
முறையின் தயார்நிலை மற்றும் அமுலாக்க அபாயம்
அரசாங்க அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளபடி, 45 நாட்களுக்குள் பெறுமதிசேர் வரி திரும்பக் கொடுப்பதை, ஒரு ஒழுங்குமுறை திட்டமின்றி அமுல்படுத்துவதற்கான திறன் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களினன் மன்றத்தில் சில நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. பெறுமதிசேர் வரி திரும்பப் பெறும் முறையின் தயார்நிலை குறித்த கேள்விகள் காரணமாக, நடைமுறைச் செயல்பாட்டில் இடர்பாடுகள் ஏற்படக்கூடும் என்பதே ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் கருத்தாகும். இலங்கை சுங்கத் துறை, உள்நாட்டு வருவாய்த் துறை மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் உள்ள தரவுகள் ஒத்துப்போகாத நிலையில், இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கான ஒரு பொதுவான செயல்திட்டம் இன்னும் முன்வைக்கப்படவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் ஊடகப் பேச்சாளர், “எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறையை திருத்தும் முன், இதன் மூலம் எழக்கூடிய சவால்களை சந்திக்க ஒரு முறையை அமுல்படுத்துவதற்கு வலியுறுத்தப்பட்ட போதிலும், RAMIS முறையை அமுல்படுத்துவது செயல்திறன் சிக்கல்கள் பலவற்றை உருவாக்கியது. மேலும், ஒரு மைக்ரோ வரி முறைக்கு மாறுவதன் மூலம் மிகவும் மென்மையான டிஜிட்டல் வரி திரும்பப் பெறும் அமைப்புக்கு உயரும் சாத்தியம் உள்ளது என்பது ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் கருத்தாகும். இந்த கருத்து ஒரு முன்னோடி திட்டமாக அமுல்படுத்துவது இன்னும் தொழில்நுட்ப கட்டத்தில் உள்ளது, மேலும் அக்டோபர் முதலாம் திகதிக்குள் இந்த அனைத்து பணிகளையும் முடிக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு.” என தெரிவித்தார்.
நடைமுறைச் செயல்பாட்டின் தேவை
துறையின் நிலைத்தன்மையை பராமரிக்க, ஒரு சீரான மீள் நிரப்பு முறைமையை பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றதத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில், “பெறுமுதிசேர் வரி திரும்பப் பெறுதலை 45 நாட்களுக்குள் செயல்படுத்துவது, ஆயிரக்கணக்கான ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதித் தொடர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தி, அது சரிந்து வீழ்ச்சியடையக் காரணமாகலாம். டிஜிட்டல் சேவைகளுக்கு பெறுமதிசேர் வரி விதிக்கப்படும் விதம் போல, பெறுமதிசேர் வரி திரும்பப் பெறும் முறைமை சரியாக செயல்படும் வரை, திருத்தப்பட்ட வரி முறையை நீக்குதலை தாமதப்படுத்துவது அல்லது படிப்படியாக அமுல்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்பதை நாங்கள் மிகவும் மரியாதையாக வலியுறுத்துகிறோம்.” என தெரிவித்தார்.
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் மேலும் கூறுகையில், இந்த விஷயத்தில் தங்கள் பங்கிற்கு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கம் மற்றும் பிற தொடர்புடைய அரசு அதிகார ஆணையங்களுடன் இன்னும் நெருக்கமாக ஒத்துழைப்பார்கள் என்றும். மேலும், திருத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறையிலிருந்து பொதுவான பெறுமதிசேர் வரி முறைக்கு மாறும் மாற்றம் செயல்முறையின் போது, ஏற்றுமதித் துறையின் போட்டித்திறனில் குறைந்தபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் தாங்கள் மேலும் கவனம் செலுத்துவார்கள் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.