வென்னப்புவ சேர் அல்பர்ட் எப்.பீரிஸ் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் நான்கு சம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்றதுடன், தேசிய விளையாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர்.
இம்முறை போட்டித் தொடரில் MAS பெண்கள் அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி மாஸ்டர்ஸ், சம்பியன்ஷிப் மற்றும் சுப்பர் லீக் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தியது. அதேநேரம், ஆண்கள் ‘A’ பிரிவிலும் MAS அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பெண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவு இறுதிப் போட்டியில் MAS கேஷுவல்லைன் அணி மலிபன் அணி 25-09, 25-14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்பிரிவில் MAS கேஷுவல்லைன் அணியின் ரேணுகா நில்மினி சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த தாக்குதலாளி (Best Spiker) விருதுகளையும், நயனா ஜயரட்ன சிறந்த பந்து வழங்குநர் Best Setter) விருதையும் வென்றனர்.
இதனிடையே, விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான ‘A’ பிரிவு இறுதிப் போட்டியில், முதல் செட்டில் யுனிச்செலா அணி தோல்வியை சந்தித்த போதிலும், அடுத்த இரண்டு செட்களில் முன்னிலை பெற்று பிராண்டிக்ஸ் அணியை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. இப்பிரிவில் எஸ்.எச். இசுரு சிறந்த தாக்குதலாளி விருதையும், ஆர்.ஏ.ஏ. மலிந்த சிறந்த பந்து வழங்குநர் விருதையும் தட்டிச் சென்றனர்.
பெண்களுக்கான சுப்பர் லீக் பிரிவு இறுதிப் போட்டியில், MAS கேஷுவல்லைன் அணி ஹைட்ரமனி அணியை 3-0 (25-22 | 25-14 | 25-16) என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. இப்பிரிவில் சிறந்த வீராங்கனை, தாக்குதலாளி, பந்து வழங்குநர், தடுப்பாளி, சர்வர் மற்றும் பாதுகாப்பாளி என அனைத்து தனிநபர் விருதுகளையும் MAS கேஷுவல்லைன் அணி வீராங்கனைகள் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, சம்பியன்ஷிப் பிரிவிலும் MAS கேஷுவல்லைன் அணி ஒமேகா லைன் அணியை 3-0 (25-18 | 25-15 | 25-19) என தோற்கடித்து 2025 வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரின் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்பிரிவில் பி.எச்.பி. திஸாநாயக்க, ஆர்.எம்.பி. உத்தரா மற்றும் எம்.டி.சி.ஐ. சிவந்திகா ஆகியோர் தனிநபர் விருதுகளை வென்றனர்.
சுப்பர் லீக் – பெண்கள் பிரிவு: வெற்றியாளர் – MAS இன்டிமேட்ஸ் கேஷுவல்லைன்
தனிநபர் விருதுகள்
சிறந்த வீராங்கனை – டபிள்யூ.ஏ.எஸ். மதுவந்தி – கேஷுவல்லைன்
சிறந்த ஸ்பைக்கர் – கே.டி. வசனா – கேஷுவல்லைன்
சிறந்த செட்டர் – எச்.எம்.டி.எம். ஹேரத் – கேஷுவல்லைன்
சிறந்த பிளாக்கர் – கே.பி.எஸ். செவ்வந்தி – கேஷுவல்லைன்
சிறந்த சர்வர் – டபிள்யூ.ஏ.எஸ். மதுவந்தி – கேஷுவல்லைன்
சிறந்த லிபரோ – டபிள்யூ.எச்.எச்.ஏ.டி. சஞ்சீவனி – கேஷுவல்லைன்
சம்பியன்ஷிப் – பெண்கள் பிரிவு: வெற்றியாளர் – MAS இன்டிமேட்ஸ் கேஷுவல்லைன்
தனிநபர் விருதுகள்
சிறந்த வீராங்கனை – பி.எச்.பி. திசாநாயக்க – கேஷுவல்லைன்
சிறந்த ஸ்பைக்கர் – ஆர்.எம்.பி. உத்தரா – கேஷுவல்லைன்
சிறந்த செட்டர் – எம்.டி.சி.ஐ. சிவந்திகா – கேஷுவல்லைன்