உலக சுற்றுலா தினத்தில் இலங்கையின் கடற்கரை பாதுகாப்பிற்காக Cinnamon Life இன் Beach Care திட்டம் அங்குரார்ப்பணம்

Share

Share

Share

Share

2025 ஒக்டோபர் 03 – கொழும்பு நகரத்தின் அழகிய அடையாளமாகவும், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்ற Cinnamon Life at City of Dreams அண்மையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு அழகைச் சேர்க்கின்ற அற்புதமான கடற்கரைகளைப் பாதுகாக்கும் “Beach Care” திட்டத்தின் முதல் கட்டத்தை உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் அங்குரார்ப்பணம் செய்தது.

நாட்டின் அழகை மேலும் மேம்படுத்துவதற்காக சுத்தமான கடற்கரைகளை உலகிற்கு வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் இருந்து 400 கிலோகிராமுக்கும் அதிகமான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்ற Cinnamon Life நடவடிக்கை எடுத்தது. இதில் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கடற்கரையை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், கடற்கரை மீண்டும் மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர குப்பைத் தொட்டியை நிறுவுவதற்கு Cinnamon Life நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த Cinnamon Life இன் நிலைபேறான்மை மற்றும் இணக்க பணிப்பாளர் சமீர ரணசிங்க, “சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை அனுபவிக்க முடியும் என்பது மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் மேம்படுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இன்று அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். Beach Care திட்டமானது வெறும் சுத்தம் செய்யும் திட்டம் மட்டுமல்ல, எதிர்கால தலைமுறைகளுக்காக அழகான கடற்கரையை உருவாக்கும் பெரிய முயற்சியாகவும் இதனைப் பார்க்க முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கடற்கரைப் பாதுகாப்பிற்காக செயல்பட்டு, அதில் பங்கேற்ற அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கி மற்றுமொரு நிலைபேறான திட்டத்தை Cinnamon Life வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சுற்றுச்சூழல் அழகிற்காக செயல்படுவதற்கு மக்களை ஊக்குவிப்பதன் மூலம் பொறுப்பான சுற்றுலாத் துறைக்கு தேவையான சூழலை உருவாக்கவும் Cinnamon Life-க்கு இதன் மூலம் முடிந்துள்ளது.

ஆசியாவின் முன்னணி சுற்றுலா தலமாக பெயர் பெற்றுள்ள Cinnamon Life, அதன் புதிய Beach Care திட்டத்தின் மூலம், நாட்டின் அழகு சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கும், இலங்கையர்களுக்கும் அற்புதமான கடற்கரைகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதையும் Cinnamon Life உறுதிப்படுத்துகிறது.

BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...
BYD Automobile සමාගමේ ප්‍රකාශය –...
Atlas Pays Tribute to Teachers...
NÜWA Sri Lanka වෙත පැමිණි...
HNB ක්‍රීඩා තානාපති ලෙස ඔලිම්පික්...
Atlas Pays Tribute to Teachers...
NÜWA Sri Lanka වෙත පැමිණි...
HNB ක්‍රීඩා තානාපති ලෙස ඔලිම්පික්...
Sampath Bank and NCE Empower...