TikTok, தனது பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பு திறனுக்கான ஆதரவை மேம்படுத்தும் நவீன அம்சங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளம், படைப்பாற்றல் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுவதற்கு நிரந்தரமாக பணியாற்றி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் உள்ளிட்ட பரந்த சமூகத்தை குறிவைத்து, மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, புதிய அம்சங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
இன்று, குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, TikTok பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பவர்களின் கணக்குகளுடன் இளைஞர்களின் கணக்குகளை இணைக்க அனுமதிக்கும் சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் திறனையும், தொடர்ச்சியான உரையாடல்களை ஊக்குவிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.
மேலும், இந்த முறையின் கீழ், இளைஞர்கள் தங்கள் TikTok கணக்கில் பொது வீடியோ அல்லது வேறு எந்த உள்ளடக்கத்தையும் பதிவேற்றினால், அது தானாகவே பெற்றோர்களுக்கு அறிவிக்கப்படும். இந்த அம்சம் அவர்களின் தனியுரிமை அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் உதவுகிறது, மேலும் குழந்தை எந்தத் துறைகளில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்பதைப் பற்றி பெரியவர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.
மேலும், இந்த புதிய அம்சங்கள் இளைஞர்களுக்கு ஏற்ற உள்ளடக்கம், திரை நேர வரம்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மெசேஜிங் திறன்கள் போன்ற 50 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கியது. இதன் மூலம், குழந்தைகள் மன அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள முடியும், மேலும் “Digital Safety Partnership for Families” இதை மேலும் மேம்படுத்தும்.
நனவான டிஜிட்டல் நல்வாழ்வை ஊக்குவித்தல்
TikTokஇன் மற்றொரு தனித்துவமான அம்சம் Well-being Missions ஆகும். இது பாவனையாளர்களை விழிப்புடன் TikTok பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதன் மூலம், அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், நேர்மறையான நடத்தைகள் மற்றும் சமநிலையான பழக்கங்கள் பற்றிய புரிதல் மற்றும் பழக்கத்தை உருவாக்க பாவனையாளர்கள் செயல்படுவார்கள்.
மேலும், இதன் மற்றொரு முக்கியமான காரணியாக திரை நேர நிர்வகிப்பு மற்றும் தூக்க நேர வரம்புகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட Digital Well-being Hub குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், பாவனையாளர்கள் எவ்வளவு நேரம் அதில் செலவிடுகிறார்கள், எப்போது உறங்குவது என்பதை நேர நிர்வகிப்பின் மூலம் தங்கள் நல்வாழ்வை நிலையாக பராமரிக்கும் திறன் பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்களில் டிஜிட்டல் சமநிலை உருவாகிறது.
பாவனையாளர்களின் நல்வாழ்வை மேலும் சமநிலையாக பராமரிக்க உதவுவதற்காக, TikTok ஒரு Guided Meditation அம்சத்தையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது விழிப்புடன் வாழத் தேவையான சூழ்நிலை மற்றும் சக்தியை பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. 18 வயதுக்குட்பட்ட பாவனையாளர்களுக்கு இந்த வசதி தானாகவே திறக்கப்படும், அதே நேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பாவனையாளர்கள் இரவு 10 மணிக்குப் பிறகு ஒரு தியான வினாடி வினாவை முடித்த பிறகே இதைப் பயன்படுத்த முடியும்.
படைப்பாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் செயல்திறன் கருவிகள் ஒரு வலிமையாகும்
TikTokஇன் முக்கிய ஆதாரம் அதன் உள்ளடக்க படைப்பாளர்களே. எனவே, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை பராமரிப்பதற்கு ஆதரவை வழங்குவது அவசியம். அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அவர்களின் தொடர்புகளை மேம்படுத்தவும், அனுபவங்களை மேம்படுத்தவும் பல சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு முக்கிய அம்சம் Creator Care Mode ஆகும். இது படைப்பாளர்களுக்கு தேவையில்லாத உள்ளடக்கங்களை தானாகவே அகற்றும் திறனை வழங்குகிறது, மேலும் இது படைப்புகளுக்கு தேவையான பங்களிப்பை வழங்குகிறது. கருத்து பகுதிகளைக் கொண்ட ஒரு நேர்மறையான இடத்தை உருவாக்குவதன் மூலம், இது படைப்பாளரின் தரத்தை உயர்த்துவதற்கும் பங்களிக்கிறது.
அதன் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் TikTok LIVE ஆகும். இது நேரடி பேச்சுத்தொடர்புகளின் போது பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிந்த சூழலை உருவாக்குவதற்காக, குறிப்பிட்ட சொற்கள், வாக்கியங்கள் மற்றும் எமோஜிகளைத் தடுக்கும் விருப்பத்தை வழங்குகிறது. TikTok Studio வலைத்தளத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும், உங்கள் வீடியோக்களை For You feed சேர்க்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது, சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்ற உதவுகிறது மற்றும் படைப்பாளர்களின் கலைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது.
தொடர்ச்சியான ஒழுங்கமைக்கப்பட்ட தகவல்தொடர்புக்கு தேவையான அனுகூலங்களை வழங்கும் வகையில், TikTok தகவல்களை திறம்பட ஒழுங்கமைத்து, விரைவான பதில்கள் மற்றும் வரிசைப்படுத்தப்பட்ட கோப்புறைகள் போன்ற கருவிகள் மூலம் நன்கு நிர்வகிக்கப்படும், தொழில்முறை தகவல்தொடர்பு மையத்தை அறிமுகப்படுத்தியது.
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும், குடும்பம் மற்றும் இளையோருக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், மனநலம் மற்றும் பொதுநல்வாழ்வை மேம்படுத்தவும், அதற்குத் தேவையான அதிநவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் TikTok கொண்டுள்ள அர்ப்பணிப்பை நன்கு வெளிப்படுத்துகிறது. இதன் மூலம், உடல் அல்லது மன அழுத்தம் இல்லாமல், ஆரோக்கியமான நேர நிர்வகிப்பின் மூலம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், கல்விக்காகவும் TikTok தளத்தில் இடம் பிடிக்க முடியும்.




