மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கை

Share

Share

Share

Share

இலங்கை, மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முயற்சிகளில் ஒன்றை இன்று நடத்தியது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற பன்முகத்தன்மையைத் தழுவுதல் – மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலை தேடுபவர்கள் முன்னணி முதலாளிகளுடன் நேரடியாக இணைந்தனர்.

GIZ இலங்கையின் தொழில்சார் பயிற்சி (VTSL) திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் ஏனைய அபிவிருத்திப் பங்காளிகளின் ஆதரவுடன், திறன் மற்றும் கெளரவமான பணிக்கான வழிகளை வலுப்படுத்த நிறுவனங்கள், அரசாங்க முகவர் நிலையங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த தொடக்க விழாவில் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக்க கலுவெவ, “இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அவசியமானவை. ஏனெனில், இலங்கையின் மிக நீடித்த தொழிலாளர் சந்தை இடைவெளிகளில் ஒன்றை இவை நிவர்த்தி செய்கின்றன. பல மாற்றுத்திறனாளிகள் பயிற்சியை முடிக்கின்றனர். ஆனால் அவர்களின் வேலைவாய்ப்புக்கான பாதை அணுகல் சிக்கல்கள் மற்றும் முதலாளி வெளிப்பாடு இல்லாததால் தடுக்கப்படுகிறது. இன்றைய தளம் திறன்களுக்கும் உண்மையான வேலைகளுக்கும் இடையே நேரடி இணைப்பை உருவாக்குகிறது.” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், இலங்கையின் முதல் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புப் போட்டி மேடை (Disability Job Match Pavilion) அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு, வேலைவாய்ப்புக்காக 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகளள் தங்களது சுயவிவரக் கோவையை (CV) சமர்ப்பித்தனர். மேலும், விருந்தோம்பல் தொழில், தகவல் தொழில்நுட்பத் துறை, சில்லறை வணிகம், உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத்துறை ஆகியவற்றிலிருந்தும் நிறுவனங்களின் வேலைதாரர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் ஒரு பொருளாதார வலயம் அமைக்கப்பட்டிருந்தது. அது மாற்றுத்திறனாளிகள் நடத்தும் வருமானம் ஈட்டும் திட்டங்களை முன்னிலைப்படுத்தியது. பல்வேறு பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் சூழலியல் ரீதியாகப் பாதிப்பற்ற பொருட்கள் ஆகியவற்றை அங்கு காட்சிப்படுத்தினர். சித்திரா லேன் சிறப்பு குழந்தைகள் பாடசாலை (Chitra Lane School for Special Children) ஏற்பாடு செய்த ஒரு படைப்பு வலயம் (Creative Zone) குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆகிய மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலைப்படைப்புகளை முன்வைத்தது.

நிகழ்வு முழுவதும், முதலாளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் பணியிட அணுகல் மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய நியமன வழிகளை விரிவாக்குவது குறித்து விவாதித்தன. நிறுவுனர்கள் குறிப்பிட்டதாவது: மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு அணுகலில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இன்னும் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் நிலவுகின்றன.

இந்த நிகழ்வை, ஜெர்மன் கூட்டாட்சி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைச்சின் (BMZ) சார்பாக, Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) நிறுவனம், சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (SDC) ஆதரவுடன் செயல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...