2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியது TikTok

Share

Share

Share

Share

பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதிப்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3 2025) சமூக வழிகாட்டுதல் அமலாக்க அறிக்கையை (Community Guidelines Enforcement Report) TikTok நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, தளத்தின் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்குவதற்கு TikTok எடுத்துள்ள தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரிக்கிறது. இதன் மூலம் உலகளாவிய பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதிசெய்ய நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த காலாண்டில், TikTok உலகளவில் மொத்தம் 20.4 கோடி (204,534,932) வீடியோக்களை நீக்கியுள்ளது. இது அந்தத் தளத்தில் பதிவேற்றப்பட்ட மொத்த உள்ளடக்கத்தில் 0.7மூ ஆகும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 18.6 கோடிக்கும் அதிகமான வீடியோக்கள் தானியங்கி தொழில்நுட்பம் (Automated detection) மூலம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட வீடியோக்களில் 89 லட்சம் வீடியோக்கள் மறுஆய்வுக்குப் பிறகு மீண்டும் தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விதிமீறல்களை முன்கூட்டியே கண்டறிந்து நீக்கும் விகிதம் (Proactive removal rate) 99.3% ஆக உள்ளது. மேலும், பதிவிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே 94.8% வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன. தளத்தின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், இந்தக் காலாண்டில் சுமார் 11.8 கோடி போலி கணக்குகளும், 13 வயதிற்கு குறைவானவர்களின் கணக்குகள் என சந்தேகிக்கப்பட்ட 2.2 கோடி கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.

அகற்றப்பட்ட வீடியோக்களில் 30% முதிர்ந்த அல்லது உணர்திறன் கொண்ட (Sensitive/Mature) கருப்பொருள்களைக் கொண்டிருந்தன. இவை TikTok-இன் உள்ளடக்கக் கொள்கைகளுக்கு பொருந்தாதவை என கண்டறியப்பட்டுள்ளன. இதில் பாதுகாப்பு மற்றும் நாகரீக நெறிமுறைகளை மீறியதற்காக 15.7% வீடியோக்களும், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை விதிகளை மீறியதற்காக 2.7% வீடியோக்களும் நீக்கப்பட்டன. குறிப்பாக, தவறான தகவல்களைப் பரப்பியதற்காக (Misinformation) 32.9% வீடியோக்களும், மாற்றியமைக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்காக (AI-generated content) 34.4% வீடியோக்களும் அகற்றப்பட்டுள்ளன.

சமூக வழிகாட்டுதல் அமலாக்க அறிக்கையின் காலாண்டு வெளியீடானது, உள்ளடக்க நடவடிக்கைகள் மற்றும் கணக்கு மேலாண்மை தொடர்பான விரிவான பார்வையை வழங்குகிறது. இது TikTok நிறுவனத்தின் முழுமையான வெளிப்படைத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

2025 மூன்றாம் காலாண்டு அறிக்கை தொடர்பான முழுமையான தகவல்களையும், TikTok-இன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள், கருவிகள் மற்றும் கொள்கைகள் குறித்த விரிவான விபரங்களையும் அறிய, TikTok-இன் வெளிப்படைத்தன்மை மையத்தை (Transparency Centre) ஆங்கிலத்தில் பார்வையிடவும்.

අටාලේ ශ්‍රී ලංකාවේ විශාලතම රබර්...
2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும்...
கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில், தனது...
CINEC Celebrates 1,800 Graduates and...
Sunshine Holdings to Acquire 75%...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, Norfund සහ OP...
Sri Lanka Chamber of the...
Felix Fernando elected Chairman of...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, Norfund සහ OP...
Sri Lanka Chamber of the...
Felix Fernando elected Chairman of...
அட்டாலே எஸ்டேட்: இலங்கையின் மிகப்பெரிய ரப்பர்...