சீனப் புத்தாண்டை முன்னிட்டு City of Dreams Sri Lanka வழங்கும் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள்

Share

Share

Share

Share

சுபீட்சம், அதிர்ஷ்டம் மற்றும் புதிய ஆரம்பங்களை வரவேற்கும் சீனப் புத்தாண்டை (Lunar New Year) விமர்சையாகக் கொண்டாடும் வகையில், City of Dreams Sri Lanka தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களை அறிவித்துள்ளது. இப்புதிய ஆண்டை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கும் நோக்கில், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விசேட அம்சங்களுடன் கூடிய இந்த கொண்டாட்டங்கள் விருந்தினர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கவுள்ளன.

பெப்ரவரி 17 முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை, ‘சுன் ஜியே’ (Chun Jie) எனப்படும் வசந்த கால விழாவின் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த உல்லாச விடுதி வளாகம் மங்களகரமான ஆற்றல் நிறைந்த ஒரு விறுவிறுப்பான களமாக மாறவுள்ளது. அதிஷ்டம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை ஈர்க்கும் வகையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அற்புத உலகிற்குள் இணைந்து புதிய அனுபவத்தைப் பெறுமாறு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாகத் திகழும் ‘சென்டர் ஸ்டேஜ்’ (Centre Stage) தளம், உற்சாகம் நிறைந்த பல்வேறு கலாசார கலை நிகழ்ச்சிகளால் விழாக்கோலம் பூணவுள்ளது. குறிப்பாக, சுபீட்சத்தின் அடையாளமாகவும், தீய சக்திகளை விரட்டும் விதமாகவும் அமையும் பாரம்பரிய சிங்க நடனத்தின் (Lion Dance) அதிரடித் தாளகதியையும், நேர்த்தி மற்றும் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் நளினம் மிக்க விசிறி நடனங்களையும் (Fan Dance) இங்கு கண்டுகளிக்கலாம். இவற்றுக்கு மேலும் மெருகூட்டும் வகையில், செல்வம் மற்றும் வெற்றியின் ஆசீர்வாதங்களை வழங்கப்போகும் ‘அதிஷ்டத் தெய்வங்களின்’ (Gods of Fortune) விசேட வருகையும் இடம்பெறவுள்ளது. அத்துடன், கனிவான விருந்தோம்பல் மற்றும் சுவாரஸ்யமான கலந்துரையாடல் தருணங்கள் ஊடாக விழா வரவேற்பாளர்கள் இக்கொண்டாட்டத்தின் உற்சாகத்தை மேலும் அதிகரிப்பர்.

அதுமாத்திரமின்றி, இந்தக் கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்டும் வகையில், ஸ்பைஸ்8 (Spice8) உணவகம் பாரம்பரிய விழாக்கால அடையாளங்கள் நிறைந்த செழுமையான சீனப் புத்தாண்டு Buffet விருந்தை வழங்குகின்றது. செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளை வலியுறுத்தும் பாரம்பரியங்களால் ஈர்க்கப்பட்டு, விசேடமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு உணவு வகைகளை விருந்தினர்கள் இங்கு சுவைக்க முடியும். சுபீட்சத்தைப் பறைசாற்றும் விசேட உணவுகள் முதல், ஒருமைப்பாடு மற்றும் நல்வாய்ப்பைக் கொண்டாடும் தனித்துவமான சுவைகள் வரை அனைத்தும் இந்த விருந்தில் உள்ளடங்கியுள்ளன.

இந்த விழாக்கால அனுபவத்திற்கு 6 ஆவது மாடி மற்றும் ஸ்பைஸ்8 உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்கவர் அலங்காரங்கள் மேலும் உயிரூட்டுகின்றன. அதிஷ்டம் மற்றும் சுபீட்சத்தின் அடையாளமான அடர் சிவப்பு மற்றும் பொன்னிற வர்ணங்கள், பாரம்பரியக் கலை நுணுக்கங்கள் ஆகியன இவ்விழாவின் உற்சாகத்தைப் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு மூலையிலும் இந்த வசந்த கால விழாவின் சாராம்சம் மிளிர்வதால், வாடிக்கையாளர்கள் ஒரு ஆடம்பரமான மற்றும் கலாசார ரீதியாக ஆழமான சூழலை இங்கு அனுபவிக்க முடியும்.
உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சங்களையும், அர்த்தமுள்ள பாரம்பரிய விழுமியங்களையும் ஒன்றிணைத்து, City of Dreams Sri Lanka நடத்தும் இந்த தனித்துவமான சீனப் புத்தாண்டு கொண்டாட்டமானது வெறும் ஒரு நிகழ்வு என்பதற்கும் அப்பால், சுபீட்சத்தை வரவேற்கும் ஒரு உன்னதமான அழைப்பாக அமைகிறது. புதுமைகளை ஏற்று, பிறக்கவிருக்கும் சீனாவின் புத்தாண்டை மிகவும் நேர்த்தியான முறையில் கொண்டாடுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

சீனப் புத்தாண்டின் மங்களகரமான உற்சாகத்தில் இணைந்து, உங்கள் அதிஷ்டம் பெருகும் வாய்ப்பினை City of Dreams Sri Lanka-வில் பெற்றிடுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு +94 76 316 0481 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

ஜப்பானிய பிரதிநிதிகள் 250 பேர் பங்கேற்கும்...
Syntetica raises $30M Series A...
ජපන් නියෝජිතයින් 250කගේ සහභාගීත්වයෙන් ‘Little...
Geoffrey Bawa Trust Expands Sri...
කොළඹ නගරයේ ආගන්තුක සත්කාර සහ...
Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Sri Lanka to Host Leading...