இலங்கையில் முதலீடுகளைத் தக்கவைக்க நிலையான கொள்கை அவசியம் என்கிறது ‘ஓனிவர்ஸ்’ குழுமம்

Share

Share

Share

Share

இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் தொழில்துறை தலைவர்களும், குறிப்பாக நிதி மற்றும் செயல்பாட்டு விதிகளில் நிலையான ஒழுங்குமுறைகளை வழங்க வேண்டும்.

முன்னர் Calzedonia Group என்று அழைக்கப்பட்ட ஓனிவர்ஸ் குழுமத்தின் தலைவர் டொக்டர் சாண்ட்ரோ வெரோனேசி இது குறித்துக் கூறுகையில்: “முதலீட்டுச் சுழற்சியின் போதோ அல்லது நீண்டகால செயல்பாடுகளை முன்னெடுக்கும் போதோ ஒழுங்குமுறைகள் மாற்றமடையும் போது, அது முதலீட்டாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நிறுவனங்கள் எப்போதும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய சூழல்களை அடிப்படையாகக் கொண்டே தமது திட்டமிடல்களை மேற்கொள்கின்றன.” என தெரிவித்தார்.

“விதிமுறைகள் எதிர்பாராத விதமாக மாறும்போது, அது அபாயம், செலவு மற்றும் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கிறது. ஒரு நிலையான கட்டமைப்பு மட்டுமே தொடர்ச்சியான முதலீடுகளுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் ஆதரவாக அமையும்.”
ஓனிவர்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இலங்கையின் மதிப்பானது மிகக் குறைந்த செலவிலான ஒரு தெரிவு என்பதில் இல்லை; மாறாக, அனுபவம் வாய்ந்த உள்நாட்டுத் தலைமைத்துவத்தின் ஆதரவுடன், சிக்கலான உள்ளாடைகளை உற்பத்தி செய்யும் ஒரு விசேடமான மற்றும் தொழில்முறை உற்பத்தித் தளமாக விளங்குவதிலேயே உள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் இணக்கப்பாட்டு எதிர்பார்ப்புகள் விநியோகத் தெரிவுகளை மாற்றியமைத்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் செய்தி தெளிவாக உள்ளது: இலங்கை தனது பலங்களைப் பாதுகாத்து, ஏற்றி இறக்கல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை போன்ற சவால்களுக்குத் தீர்வுகண்டு, நிலையான மற்றும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான கொள்கைச் சூழலைப் பேணினால், உயர்தர சந்தைப் பிரிவுகளில் வலுவாகப் போட்டியிட முடியும்.

ஏற்றி இறக்கல் ஒரு முக்கிய தடையாக உள்ளது. “கோவிட் காலத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், ஐரோப்பாவிற்கான விநியோகக் காலம் கணிசமாக அதிகரித்துள்ளது. உலகளாவிய கப்பல் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் போக்குவரத்துத் தடைகள் இதற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன், முன்னரை விட குறைவான கப்பல்களே வருகை தருவதால், இலங்கையின் தீவு என்ற அமைவிடமும் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.”

“இரண்டாவது சிக்கல் மனிதவளம் ஆகும்; இது உலகளாவிய ரீதியில் ஒரு சவாலாக இருந்தாலும், காலப்போக்கில் நிலைத்தன்மை, உற்பத்தித் திறன் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இது இன்னும் ஒரு முக்கிய காரணியாகவே உள்ளது. செலவு அழுத்தங்களும் உண்மையானவை, ஏனெனில் வளர்ந்த சந்தைகளில் ஆடைகளுக்கான நுகர்வோர் செலவினம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதுடன், வர்த்தக நாமங்களால் விலைகளைத் தன்னிச்சையாக உயர்த்த முடிவதில்லை.”

இலங்கையில் தனது 28ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் ஒமேகா லைன் நிறுவனம், ஒனிவர்ஸ் குழுமம் எனும் உலகளாவிய ஆடைத் தயாரிப்பு குழுமத்தின் ஒரு அங்கமாகச் செயற்படுகிறது. இக்குழுமம் வடிவமைப்பு, சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த வணிக மாதிரியைக் கொண்டு, பல்வேறு சர்வதேச வர்த்தக நாமங்களின் கீழ் இயங்கி வருகின்றது.

இலங்கையின் நீண்டகால உள்ளாடைத் தயாரிப்புத் திறன், குறிப்பாக பிரா (Bra) போன்ற நுணுக்கமான திறன்கள், துல்லியம் மற்றும் சீரான தரம் தேவைப்படும் தொழில்நுட்ப ரீதியாக சவாலான தயாரிப்புகளில் கொண்டுள்ள நிபுணத்துவம் காரணமாக, இக்குழுமத்தின் உற்பத்தி வலையமைப்பில் இலங்கை ஒரு முக்கிய தூணாகத் தொடர்ந்து விளங்குவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

எங்களைப் பொறுத்தவரை இலங்கை ஒரு விசேடமான பங்கினை வகிக்கிறது; குறிப்பாக உள்ளாடைகள் மற்றும் பிரா (Bra) தயாரிப்பில் அதன் பங்கு முக்கியமானது. இவை சீரான தரத்துடன் தயாரிப்பதற்கு மிகவும் கடினமான தயாரிப்புகளாகும். வடிவமைப்பு, சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி ஆகியவற்றை நாங்கள் ஒருங்கிணைத்துச் செயல்படுவதால், எங்களது வணிக மாதிரி பல போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டது. இதற்கு வலுவான நிபுணத்துவமும் உயர் மட்டத்திலான தொழில்முறைத் திறனும் அவசியமாகும்.

தயாரிப்பின் சிக்கல்தன்மை அதிகரிக்கும் போது துல்லியம், விசேட திறன்கள் மற்றும் நம்பகமான செயல்முறைகளுக்கான தேவையும் அதிகரிக்கின்றது. அங்குதான் இலங்கை வலுவான திறனைக் கொண்டுள்ளது; குறிப்பாக பொருத்தம், வடிவமைப்பு மற்றும் மூலப்பொருள் கையாளுதல் ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படும் பிரா (Bra) மற்றும் உள்ளாடைத் தயாரிப்புகளில் இலங்கையின் பங்கு மகத்தானது. சந்தைக்கு விரைவாகத் தயாரிப்புகளைக் கொண்டு செல்ல வேண்டிய தேவை மற்றும் காலநிலைக்கு ஏற்ப மாறும் கேள்வி போன்றவை விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, உற்பத்தித் தளங்கள் சீரான தரம் மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் செயல்படும்போது அது கூடுதல் நன்மையாக அமைகிறது.

“எங்களைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக சவாலான உள்ளாடைகள் மற்றும் தரம் மற்றும் வேலைப்பாடு மிக முக்கியமானதாகக் கருதப்படும் தயாரிப்புகளில்தான் இலங்கையின் பலம் சிறப்பாகப் பொருந்துகிறது.”

நிபந்தனை இணக்கப்பாடுகள் குறித்த எதிர்பார்ப்புகள் இன்று ஆடைத் தொழில்துறையில் முதலீட்டுத் தீர்மானங்களை வடிவமைக்கின்றன; இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை போதிய வசதிகளையும் தயார்நிலையையும் கொண்டுள்ளது. பாதுகாப்பு, இரசாயனப் பயன்பாடு மற்றும் நிலைத்தன்மை தரநிலைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, இத்துறை மிகுந்த ஆற்றலுடனும் தயார் நிலையுடனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Samsung Sri Lanka Celebrates International...
இலங்கையில் முதலீடுகளைத் தக்கவைக்க நிலையான கொள்கை...
ஜனவரியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு;...
HNB හි දමිත් පල්ලෙවත්ත මහතා...
ඉහළ ණය වර්ධනයක් සහ ශක්තිමත්...
Analytical Instruments Pvt Ltd and...
APHNH President Raveen Wickremesinghe on...
Janashakthi Life වෙතින් ‘දිට්වා’ සුළි...
Analytical Instruments Pvt Ltd and...
APHNH President Raveen Wickremesinghe on...
Janashakthi Life වෙතින් ‘දිට්වා’ සුළි...
First Capital සමාගම CA Sri...