இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந் தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்

Share

Share

Share

Share

இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று தனது நூற்றாண்டு விழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. இச்சங்கம் உத்தியோகப்பூர்வமாக இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் ரீதியாக தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட உரிமையாளர்களின் ஓய்வூதியத்தை பாதுகாப்பதே இந்நிதியின் நோக்கமாகும்.

தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாக 331 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியமானது, ஆண்டுக்காண்டு பலமாக வளர்ச்சியடைந்து இன்று 1700க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக மாறியுள்ளது. 1946ஆம் ஆண்டளவில், தனது முதன்மை நோக்கமான 750 உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைய இலங்கைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் வெற்றி பெற்றது. இந்நிதியின் வளர்ச்சிக்கு, பணியாளர் நலன்புரி நிதிச் சட்டம் பெரும் ஆதரவளித்தது, ஏனெனில் அது கட்டாய பங்களிப்பு நிதியாக இருந்தது.

“இலங்கையின் தோட்டத் தொழிலுக்கு தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்களுக்கான கடமையை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சமூகத்தின் தூரநோக்கு நடவடிக்கையாக, இலங்கைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் 331 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டு, இன்று 1,700ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ச்சியடைந்து, 100 ஆண்டுகளாக தனது ஆரம்பகால நோக்கத்தின் தொடர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் தனது இரண்டாவது நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பது, கடந்த காலத்தின் ஒரு அடையாளமாக அல்ல, மாறாக, அது நிறுவப்பட்ட சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புள்ள உயிருள்ள நிறுவனமாகவே ஆகும்” என இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் தெரிவித்தது.

ஓய்வூதிய கொடுப்பனவோடு சேர்த்து, சங்கத்தால் வீட்டுக் கடன்கள், கல்வி உதவி, காப்புறுதி போன்றவை உள்ளடக்கியதாக, இலங்கையின் தோட்டத் தொழில்முறையாளர்களின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான சமூக பாதுகாப்புத் தொகுப்பு இதுவரை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கத்தின் ஆரம்பம் 1919ஆம் ஆண்டு வரை பின்னோக்கிச் செல்கிறது. அப்போது ஹப்புதலை மாவட்டத் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம், பயிரிடுபவர்களுக்கான ஓய்வூதிய நிதி ஒன்றை நிறுவுவதன் அவசியத்தை வலியுறுத்தி இலங்கைத் பெருந் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதன்படி, கர்னல் டி. ஒய். ரைட் தலைமையிலான துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. பின்னர், அது தொழில்முறை நிபுணர்களின் மதிப்பாய்விற்காக லண்டனின் Ceylon Associationக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1921ஆம் ஆண்டளவில், ஆங்கில புள்ளிவிபரக் கண்காணிப்பு நிபுணர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் செயல்படுத்தக் கூடிய காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அதனுடன் சேர்த்து, தோட்ட உரிமையாளர்களின் வருமானம் அறுவடை மற்றும் பருவமழைச் சுழற்சிக்கு ஏற்ப மாறும் தன்மையைக் கருத்தில் கொண்டு, நெகிழ்வான முதலீட்டு நிதி ஒன்றை நிறுவுவது குறித்த இணையான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. 1923இல், களுத்துறை மாவட்ட எண் 2 குழுவினால், முன்மொழியப்பட்ட நிதியை நாடு முழுவதுமுள்ள அனைத்துத் தொழில்முறைத் தோட்ட ஊழியர்களுக்கும் கட்டாயமாக்குவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. விரிவான சட்டத் திருத்தங்கள் மற்றும் இலங்கைத் தோட்டச் சொத்துக்கள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைச் செயல்முறைக்குப் பின்னர், 1926 மார்ச் 10ஆம் நாள் கண்டியில் உத்தியோகப்பூர்வமாக இலங்கைத் பெருந் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

“சங்கத்தின் அறங்காவலராக, இலங்கை பெருந் தோட்ட முதலாளிமார் சம்மேளனம், அது நிறுவப்பட்ட முற்போக்கான கொள்கைகளை என்றென்றும் பாதுகாத்துச் செயல்பட்டு வருகிறது. எங்களின் அர்ப்பணிப்பு எப்போதும் எங்கள் உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பொறுப்பான மற்றும் நுணுக்கமான நிதி நிர்வகிப்பை உறுதிப்படுத்துவது, மற்றும் மாறிவரும் பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை சூழல்களுக்குப் பொறுப்புடன் தகவமைத்துக் கொள்வது ஆகிய கொள்கைகளை நோக்கியே அமைந்துள்ளது. இலங்கைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், அதன் தொடர்ச்சியான இருப்பும் வளர்ச்சியும் நல்லாட்சி, கூட்டு நம்பிக்கை மற்றும் நீண்டகாலப் பாதுகாப்புக்கான ஒன்றிணைந்த அர்ப்பணிப்பின் உயிருள்ள சான்றாகும்.”

“நாங்கள் பெருமிதமிக்க நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் என்ற மைல்கல்லை அடைந்துள்ள நிலையில், சம்மேளனம் நிறுவப்பட்ட அடிப்படை மதிப்புகளைப் பாதுகாத்து வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதையும் வலியுறுத்துகிறோம். அத்துடன், எதிர்கால சந்ததியினருக்காகவும், நேர்மை, நிலைத்தன்மை மற்றும் சிறப்பம்சத்துடன் எங்கள் உறுப்பினர்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கமாகும்,” என இலங்கை பெருந் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் லலித் ஒபேசேகர அவர்கள் தெரிவித்தார்.

ගෝලීය සහයෝගීතාවය සමඟින් Fortune GP...
BMPC Awards 2026 நிகழ்வில் இரண்டு...
காப்புறுதித் துறை மேம்பாட்டு செயல் திட்டத்தை...
City of Dreams இல் கலாச்சார...
TikTok தளத்தின் ’Cook & Create’...
E. B. Creasy & Co.,...
E. B. Creasy & Co.,...
99x Shares Key Insights at...
E. B. Creasy & Co.,...
E. B. Creasy & Co.,...
99x Shares Key Insights at...
ஒருங்கிணைந்த ஹோட்டல் சேவைகளுக்கு வலுசேர்க்கும் Samsung...