தெற்காசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விடுதியான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, தனது புகழ்பெற்ற திருமணச் சேவையான ‘வெடிங்ஸ் இன் ஸ்கை’ (Weddings in Sky) திட்டத்தின் கீழ் விசேட ‘வலீமா’ சலுகையை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த விடுதியின் விசாலமான மண்டபங்களில், அதிகளவான விருந்தினர்களுடன் மறக்க முடியாத வகையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களை நடத்த விரும்பும் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்காகவே இந்த பிரத்தியேகச் சலுகை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் திருமண மரபுகளில் ‘வலீமா’ கொண்டாட்டம் என்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தினர் என அனைவரையும் ஒன்றிணைத்து, புதுமணத் தம்பதியினரை வரவேற்பதற்காக நடத்தப்படும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். இந்தச் சலுகையின் ஊடாக, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் தம்பதியினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உலகத் தரம் வாய்ந்த பிரம்மாண்டமான மண்டபங்களில், மிகவும் நேர்த்தியான முறையில் தமது கொண்டாட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அத்துடன், இதற்கென சிறப்பாகத் தயார் செய்யப்பட்ட உயர்தர சமையல் அனுபவங்கள் மற்றும் சிறப்பான நிகழ்ச்சி திட்டமிடல் சேவைகளும் வழங்கப்படும்.
இந்தச் சலுகையின் மையப்புள்ளியாக, வலீமா நிகழ்வுகளின் கொண்டாட்ட தன்மைக்கு ஏற்றவாறு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உணவுப்பட்டியல் அமைகிறது. இதில் ஒரு தனித்துவமான பிரியாணி தெரிவு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸின் சமையல் கலைக் குழுவின் பரந்த அனுபவத்தின் ஊடாக, பாரம்பரிய சுவைகளையும் நேர்த்தியான பரிமாற்றத்தையும் ஒன்றிணைத்து, பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்ற வகையில் இந்த உணவுப்பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வலீமா சலுகையானது சிட்டி ஆஃப் ட்ரீம்ஸின் பல தனித்துவமான நிகழ்வு மண்டபங்களில் கிடைப்பதுடன், ஒவ்வொரு நிகழ்வின் தேவை மற்றும் அளவிற்கேற்ப கொண்டாட்டங்களை பிரத்தியேகமாக அமைத்துக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. இதன் கீழ், குறைந்தபட்சம் 500 விருந்தினர்களுக்கான இடவசதியைக் கொண்ட லுமினா போல்ரூம் (Lumina Ballroom) மற்றும் 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்ளக்கூடிய த ஃபோரம் (The Forum) ஆகிய மண்டபங்களை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்யலாம். அத்துடன், 150 விருந்தினர்கள் முதல் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு த ஸ்டுடியோ (The Studio) மற்றும் கியுமுலஸ் போல்ரூம் (Cumulus Ballroom) ஆகியனவும், குறைந்தபட்சம் 60 விருந்தினர்களுடனான நிகழ்வுகளுக்கு செலஸ்டைன் பால்ரூம் (Celestine Ballroom) ஆகிய மண்டபங்களும் இச்சலுகையின் கீழ் வழங்கப்படுகின்றன.
தலா ஒருவருக்கு 9,900++ ரூபா முதல் ஆரம்பமாகும் இந்தச் சலுகைத் திட்டங்களை, 2026 ஏப்ரல் 30ஆம் திகதி வரை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
நெகிழ்வான மண்டபத் தெரிவுகள் மற்றும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்குவதன் ஊடாக, ஒரு பிரம்மாண்டமான நிகழ்வுக்கு அவசியமான நேர்த்தி மற்றும் தரத்தைப் பேணி, ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டங்களைப் பெரிய குடும்பங்கள் மற்றும் சமூகக் கொண்டாட்டங்களுக்கு இலகுவாக எட்டக்கூடிய ஒன்றாக மாற்றுவதே சிட்டி ஆஃப் ட்ரீம்ஸின் நோக்கமாகும்.
மேலதிக விபரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் நிகழ்வுக் குழுவினரை (Events Team) 077 162 9758 என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளவும்.




