ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி உலகில் புதிய புரட்சி: Agentic AI வசதியுடன் Galaxy S26 தொடரை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

Share

Share

Share

Share

மேம்பட்ட Galaxy AI மூலம் இயங்கும் புத்திசாலித்தனமான மொபைல் அனுபவங்களின் புதிய யுகத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், Samsung Sri Lanka நிறுவனம் தனது Samsung Galaxy S26 உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ‘Samsung Galaxy Unpacked 2026’ நிகழ்வில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Galaxy S26 வரிசையானது, ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) எனும் கருப்பொருளை அறிமுகப்படுத்துகிறது. இது பயனர்களின் அன்றாட வாழ்வில் தடையின்றி உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் முன்கூட்டியே செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பமாகும்.

இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் 2026 மார்ச் 16 ஆம் திகதி முதல், நாடு முழுவதுமுள்ள அனைத்து Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் Galaxy S26 தொடரைக் கொள்வனவு செய்யலாம்.

Galaxy S26 தொடரானது Samsung Galaxy S26 Ultra, Samsung Galaxy S26+ மற்றும் Samsung Galaxy S26 ஆகிய மாதிரிகளை உள்ளடக்கியுள்ளது. இது பயனர்கள் தங்களது வாழ்க்கை முறை மற்றும் செயல்திறன் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த சாதனத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்குகிறது. அல்ட்ரா மாதிரியின் பிரீமியம்; திறன்கள் முதல், S26+இன் சமநிலையான ஆற்றல் மற்றும் வடிவமைப்பு மற்றும் அடிப்படை Galaxy S26 இன் அன்றாட நுண்ணறிவு வரை, இந்தத் தொடரின் அனைத்து மாதிரிகளும் முழுமையான Galaxy AI அனுபவத்தை வழங்குகின்றன.

Galaxy S26 தொடரை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூபா 235,580* வரையான பெறுமதிமிக்க பிரத்தியேக அறிமுக சலுகைகளை அனுபவிக்க முடியும். இதில் இதில் சிறப்பு விலைத் தள்ளுபடிகள், இரண்டு ஆண்டுகால முன்பக்கத் திரை (Front screen) மாற்றீடு மற்றும் இரண்டு ஆண்டுகால பின்பக்க கண்ணாடி (Back glass) மாற்றீட்டுப் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றுடன், டயலொக் நிறுவனத்திடமிருந்து மாதம் 350GB வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் 2TB Data தொகுப்பு (Data Bundle) உள்ளடங்கும். மேலும், வாடிக்கையாளர்கள் 26 மாதங்கள் வரையான நெகிழ்வான மாதாந்த தவணை முறைகளைக் கொண்ட Samsung Easy Pay மூலம் Galaxy S26 தொடரை எளிதாகச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இது Samsung இன் அதிநவீன AI தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிளைப் பெற்றுக்கொள்வதை இன்னும் எளிதாக்குகிறது.

Galaxy S26 தொடரானது மொபைல் புத்தாக்கத்தில் Samsung இன் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுபவத்தில் செயற்கை நுண்ணறிவை இன்னும் ஆழமாகக் கொண்டுவருகிறது. ‘சென்றடைதல்’ (Reach), ‘வெளிப்படைத்தன்மை’ (Openness) மற்றும் ‘நம்பிக்கை’ (Confidence) ஆகிய மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பயனர்கள் தங்கள் சாதனங்களுடன் தொடர்புகொள்வதற்கான மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வழியை அறிமுகப்படுத்துகிறது.

இதன் அடிப்படையாக ‘ஏஜென்டிக் ஏஐ’ அமைந்துள்ளது. இது சூழலைப் புரிந்துகொள்வதற்கும், தேவைகளை முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுவதற்கும், பயனர்களுக்கு முன்கூட்டியே உதவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் கட்டளைகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, Galaxy S26அன்றாடப் பணிகளை எளிதாக்குவதற்கும், பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமான விடயங்களில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது.

இந்தத் தொடரானது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை மேலும் எளிமையாகவும் இயல்பாகவும் மாற்றுவதற்கு AI மூலம் இயங்கும் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. ‘Call Screening’ அம்சம் யார் அழைக்கிறார்கள் மற்றும் எதற்காக அழைக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு, உள்வரும் அழைப்புகளைச் சுருக்கமாகத் தெரிவிப்பதன் மூலம், அந்த அழைப்பிற்குப் பதிலளிக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பயனர்கள் விரைவாகத் தீர்மானிக்க உதவுகிறது. ‘Now Nudge’ அம்சம் உரையாடல்களின் சூழலைப் புரிந்துகொண்டு, வௌ;வேறு செயலிகளுக்கு இடையில் மாறத் தேவையின்றி சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனைகளை வழங்குகிறது. இது பயனர்கள் தங்களை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் அதிக உற்பத்தித்திறனுடனும் வைத்திருக்க உதவுகிறது.

Bixby இன் சமீபத்திய பதிப்பானது நிகழ்நேர இணையத் தேடல் திறன்களை அறிமுகப்படுத்துகிறது. இது உரையாடல்களுக்குள்ளேயே நேரடியாக முடிவுகளை வழங்குவதன் மூலம், வேகமான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது.

Samsung நிறுவனம் தனது (Personal Data Engine – PDE) மூலம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைத் தொடர்ந்து பலப்படுத்துகிறது. இது தரவுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், சாதனத்திலேயே (on-device) பயனரின் விருப்பங்களைக் கற்றுக்கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்குகிறது. ‘சாம்சங் நாக்ஸ் என்ஹான்ஸ்டு என்கிரிப்டட் ப்ரொடெக்ஷன்’ (Samsung Knox Enhanced Encrypted Protection – KEEP) செயலிகளுக்குள் இருக்கும் முக்கியமான தகவல்களைத் தனிமைப்படுத்துகிறது. அதே நேரத்தில், Samsung Knox Vault கடவுச்சொற்கள், பயோமெட்ரிக்ஸ் மற்றும் பாதுகாப்பு விசைகள் போன்ற முக்கியமான தரவுகளை ஒரு பிரத்தியேக வன்பொருள் சூழலில் பாதுகாப்பதன் மூலம், Galaxy AI அனுபவம் தனிப்பட்டதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

மேம்பட்ட AI அனுபவங்களை வழங்க சக்திவாய்ந்த வன்பொருள் அவசியமாகும், மேலும் Galaxy S26 தொடரானது அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Galaxy S26 Ultra மாதிரியானது Samsung Electronics நிறுவனத்தால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக அப்ளிகேஷன் ப்ராசஸரைக் (Application Processor) கொண்டுள்ளது. இது முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது 39% அதிக சக்திவாய்ந்த நியூரல் ப்ராசஸிங் யூனிட் (NPU) மற்றும் 19% வேகமான CPU செயல்திறனை வழங்குகிறது.

இந்த அறிமுகம் குறித்து Samsung Sri Lanka-வின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சோங்ஹ்வா சாங் (SangHwa Song) கருத்துத் தெரிவிக்கையில், “ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாறு துணைபுரிகின்றன என்பதில் Galaxy S26 தொடரானது ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. Galaxy AI மற்றும் ஏஜென்டிக் நுண்ணறிவு agentic intelligence) மூலம், நாங்கள் சக்திவாய்ந்தவை மட்டுமல்லாது பயனர்களின் தேவைகளை இயல்பாகப் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சாதனங்களை அறிமுகப்படுத்துகிறோம். இலங்கையிலுள்ள நுகர்வோர் தங்களது தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில் அன்றாடப் பணிகளை எளிதாக்கும் தொழில்நுட்பத்தையே அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். Galaxy S26 தொடர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுடன், பிரீமியம் மொபைல் புத்தாக்கத்திற்கான புதிய மைல்கல்லையும் அமைக்கிறது,” எனத் தெரிவித்தார்.

Galaxy S26 தொடரானது AI மூலம் இயங்கும் பல கெமெரா புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் முன்பக்கக் கெமெராவானது, தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு நுணுக்கமான விபரங்கள் மற்றும் நிறத் துல்லியத்தை அதிகரிக்கும் AI மூலம் இயங்கும் ‘இமேஜ் சிக்னல் ப்ராசஸரை’ (ISP) கொண்டுள்ளது. மேலும், Samsung இன் ‘நைட்டோகிராபி வீடியோ’ Nightography Video) தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தெளிவு மற்றும் துல்லியத்தைப் பேணிக்கொண்டே இரைச்சலைக் குறைப்பதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் மிகச் சிறப்பான வீடியோக்களைப் பதிவு செய்ய உதவுகிறது.

அத்துடன், ‘Intelligent Document Scan’ வசதியானது, பயனர்கள் ஒரே தட்டலில் ஆவணங்களை தானாகவே சீரமைக்கவும், சுத்தப்படுத்தவும் மற்றும் பகிரக்கூடிய கோப்புகளாக மாற்றவும் அனுமதிக்கிறது. இது அன்றாட உற்பத்தித்திறன் சார்ந்த பணிகளைப் பெரிதும் எளிதாக்குகின்றது.

Galaxy S26 Ultra மாதிரியானது ‘Privacy Display’ எனும் புதிய திரைத் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இது பயனருக்குத் தேவையான பிரகாசம் மற்றும் தெளிவைப் பேணிக்கொண்டே, பக்கவாட்டில் இருந்து பிறர் பார்ப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைத் தேவைக்கேற்ப இயக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும் என்பதுடன், குறிப்பிட்ட செயலிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும். இது பொது இடங்களில் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தும் போது நிதி விபரங்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது.

Galaxy S26 தொடரின் மூலம், Samsung புத்திசாலித்தனமான AI திறன்கள், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் வலுவான தனியுரிமைப் பாதுகாப்புகளை ஒரே சாதனத்தில் தடையற்ற முறையில் ஒருங்கிணைப்பதன் ஊடாக ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுபவத்தை மீண்டும் ஒருமுறை வரையறுப்பதுடன், மொபைல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை இலங்கையிலுள்ள பயனர்களுக்கு அது கொண்டு வந்து சேர்த்துள்ளது.

Samsung Galaxy S26 தொடரினை தற்போது நாடு முழுவதுமுள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் இருந்து கொள்வனவு செய்ய முடியும். அதன் விலைகள் 311,999 ரூபாவிலிருந்து ஆரம்பமாகின்றன.
மேலதிக விபரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தமக்கு அருகிலுள்ள Samsung அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களுக்கு விஜயம் செய்யலாம் அல்லது 011 7267864 என்ற இலக்கத்தின் ஊடாக Samsung Sri Lanka வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

*விதிமுறைகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.

நாட்டின் பெருந்தோட்டத் துறையின் நிலையான இருப்புக்காக...
கண்கவர் இரவுடன் உண்மையான சுவையை சேர்த்த...
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி உலகில் புதிய...
TikTok-ஐ ரமழான் உணவு மேசையாக மாற்றிய...
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில்...
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய...
இலங்கையின் உயர் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக...
Caltex Abimani Strengthens the Next...
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய...
இலங்கையின் உயர் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக...
Caltex Abimani Strengthens the Next...
STEM ක්ෂේත්රයේ අනාගත පරපුරේ කාන්තාවන්...